குடப்பனக்குன்னு குன்னத்து மகாதேவர் கோயில்
Appearance
குன்னத்து மகாதேவர் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் குடப்பனக்குன்னு என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1] [2] கோயிலின் மூலவர் சிவபெருமான் ஆவார். மூலவர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கேரளாவில் உள்ள 108 சிவன் கோவில்களில் ஒன்றான இக்கோயில் பரசுராமரால் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. [3] பேரூர்கடை-மன்னந்தலா சாலையில் குடப்பனக்குன்னு சிவில் ஸ்டேஷன் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது.
மூலவர் சன்னதியும் அதன் சுற்றுப்புறங்களும் பழமை மாறாமல் உள்ளது. ஆங்காங்கே சில கட்டுமானங்களைக் காணமுடிகிறது. இக்கோயிலில் கணபதி மற்றும் வாசுகி (பாம்பு) போன்ற பிற தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. இக்கோயிலின் வருடாந்திர விழா மலையாள மாதமான தனுவில் (டிசம்பர்-ஜனவரி) கொண்டாடப்படுகிறது.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tiruvananthapuram District Siva Temples - Kerala - Talukwise listing of Mahadevar Ambalam". shaivam.org. பார்க்கப்பட்ட நாள் 2018-10-22.
- ↑ "108 Siva Temples".
- ↑ Kunjikuttan Ilayath. 108 Siva Kshetrangal. H and C Books.