கிழக்கு ராண்ட்
East Rand | |
---|---|
நாடு | தென்னாப்பிரிக்கா |
மாகாணம் | Gauteng |
நகராட்சி | Ekurhuleni |
அரசு | |
• Mayor | Mondli Gungubele |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,975 km2 (763 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 3,178,470 |
• அடர்த்தி | 1,600/km2 (4,200/sq mi) |
இனப் பகுப்பு makeup () | |
• கருப்பின ஆபிரிக்கர் | 78.7% |
• கலவை நிறத்தவர் | 2.7% |
• இந்தியர்/ஆசியர் | 2.1% |
• வெள்ளையர் | 15.8% |
தாய்மொழிகள் () | |
• Zulu | 28.8% |
• English | 12.0% |
• ஆபிரிக்கான மொழி | 11.9% |
• Northern Sotho | 11.4% |
• Other | 35.9% |
PO box | 1462 |
HDI | ![]() |
GDP | US$ 55.3 billion [2] |
GDP per capita | US$ 17,361 [2] |
கிழக்கு ராண்ட் (East Rand) மகா ஜோகானஸ்பேர்க் பெருநகர்ப் பகுதியுடன் செயற்திட்டங்களுக்காக இணைந்துள்ள விட்வாடர்சுராண்டின் கிழக்கு நகரப் பகுதியாகும். 1886ஆம் ஆண்டு தங்கம் பொதிந்த கடற்பாறை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஐரோப்பியர் குடியேற்றம் நிகழ்ந்த பகுதியாகும். இங்கு துவங்கிய தங்க வேட்டையே ஜோகானஸ்பேர்க் குடியேற்றத்திற்கு காரணமாக அமைந்தது.
நிறவெறிக் கொள்கை முடிவிற்கு வரும் தருவாயில் இங்குள்ள கறுப்பின நகரப்பகுதிகளில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இங்காதா விடுதலை கட்சித் தொண்டர்களுக்கும் பலத்த கைகலப்புகள் ஏற்பட்டன. .
இந்த வலயம் மேற்கில் கெர்மிஸ்டனிலிருந்து கிழக்கே ஸ்பிரிங்ஸ் வரையும் தெற்கே நிகெல் வரையும் பரவியுள்ளது. இப்பகுதியில் போக்ஸ்பர்க், பெனோனி, பிராக்பன், கெம்ப்டன் பார்க், ஈடென்வேல், பெட்பார்வியூ ஆகிய நகரங்கள் உள்ளடங்கி உள்ளன.
தென்னாபிரிக்காவின் நகராட்சிகளின் சீர்திருத்தத்தின்போது கிழக்கு ராண்டின் உள்ளூராட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு 1999ஆம் ஆண்டு ஒரே நகராட்சியாக அமைதியின் இடம் எனப் பொருள்பட "எகுர்யுலேனி பெருநகர மாநகராட்சி" (Ekurhuleni Metropolitan Municipality) எனப் பெயரிடப்பட்டது.
மேற்கு ராண்ட் போலவே இதுவும் தனி மாநகராட்சியாக இருந்தபோதும் மகா ஜோகானஸ்பேர்க் பெருநகர்ப் பகுதியுடன் இப்பகுதி இணைக்கப்பட்டுள்ளது. எனவே கிழக்கு ராண்டின் தொலைபேசி அழைப்புக் குறியீடு ஜோகானஸ்பேர்கின் 011 ஆக உள்ளது. கிழக்கு ராண்ட் பகுதியில் வசிப்போர் ஜோனஸ்பேர்கில் பணியாற்றுவதும் அதேபோல ஜோகானஸ்பேர்க் மக்கள் இங்கு பணியாற்றுவதும் வழமையானதே.
- ↑ "Gauteng's Human Development Index" (PDF). Gauteng City-Region Observatory. 2013. p. 1. 11 ஜனவரி 2015 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 1 January 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 "Global city GDP 2014". Brookings Institution. 4 ஜூன் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 November 2014 அன்று பார்க்கப்பட்டது. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "brookingsgdp" defined multiple times with different content