கிறிஸ்து முள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறிஸ்து முள்
Christ thorn (large)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
இனம்:
E. milii
இருசொற் பெயரீடு
Euphorbia milii
Des Moul.

முள் கிரீடம், கிறிஸ்து தாவரம் அல்லது கிறிஸ்து முள் (Euphorbia milii) என்பது மடகாசுகரை பூர்வீகமாகக் கொண்ட, யூபோர்பியாசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவர இனமாகும். இந்த இனத்தின் பெயரானது 1821 இல் பிரான்சுக்கு இந்த இனத்தை அறிமுகப்படுத்திய ரீயூனியனின் ஆளுநராக இருந்த பரோன் மிலியசை நினைவுபடுத்துகிறது.[2] பண்டைய காலங்களில் இந்த இனம் மத்திய கிழக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது என்று நம்பப்படுகிறது. மேலும் இதன் பெயர் கிறிஸ்துவுக்கு அணிவிக்கப்பட்ட முள்முடியுடன் தொடர்புபடுத்துகிறது.[3] இது பொதுவாக வெப்பமான காலநிலையில் வளர்க்கக்கூடிய அலங்கார வீட்டு தாவரமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் பொதுப் பெயரானது [4] இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அணிவிக்கப்பட்ட முள் கிரீடத்தையும் அவரது குருதியையும் குறிக்கும் வகையில் முட்கள் மற்றும் அடர் சிவப்பு பூக்களின் நிறம் ஆகியவற்றைக் கொண்டதால் இடப்பட்டது.

விளக்கம்[தொகு]

இது 1.8 மீ (5 அடி 11 அங்குலம்) உயரம் வரை, அடர்த்தியான முட்கள் நிறைந்த ,சதைபற்று கொண்ட தண்டுகளுடன் வளரும் ஒரு புதர் செடி ஆகும். 3 செமீ (1.2 அங்குலம்) நீளமுள்ள நேரான, மெல்லிய முட்கள், மற்ற தாவரங்களின் பற்றிக்கொள்ள உதவுகின்றன. புதியதாக வளரும் தண்டுகளில் சதைப்பற்றுள்ள, முக்கியமாக பசுமையான இலைகள் காணப்படும்.[2] அவை 3.5 செமீ (1.4 அங்குலம்) நீளமும் 1.5 செமீ (0.59 அங்குலம்) அகலமும் கொண்டவை. இதன் மலர்கள் சிறியவை, நன்கு தெரியும் ஒரு ஜோடி இதழ்கள் போன்ற பூவட்டமானது, மாறுபட்ட சிவப்பு, இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தில், 12 மிமீ (0.47 அங்குலம்) அகலம் வரை இருக்கும். தாய்லாந்தின் துணா மாவட்டமான வாட் ஃபிரிக் உலகின் மிக உயரமான கிறிஸ்து முள் செடியின் தாயகம் என்று கூறப்படுகிறது.[5] இந்த தாவரம் வசந்த காலத்திற்கும் கோடைகாலத்திற்கும் இடையில் செழித்து வளரும். ஆனால் ஆண்டு முழுவதும் பூக்களைக் கொண்டிருக்கும்.

முட்களின் கிரீடத்தில் பிறழ்வு

நச்சுத்தன்மை[தொகு]

இதன் சாறு மிதமான நச்சுத்தன்மை கொண்டது. மேலும் தோல் அல்லது கண்களில் படும்போது எரிச்சலை ஏற்படுத்தும். உட்கொண்டால், கடுமையான வயிற்று வலி, தொண்டை மற்றும் வாய் எரிச்சல், வாந்தி ஏற்படும். இதில் உள்ள நச்சுப் பொருட்கள் ஃபோர்போல் எஸ்டர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.[6] வளர்ப்பு விலங்குகளான குதிரைகள், செம்மறி ஆடுகள், பூனைகள், நாய்களுக்கு இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது.[7] மனிதர்களுக்கு இது லேசான நச்சுத்தன்மையுடையதாகவும், எரிச்சலூட்டும் பொருளாக மட்டுமே உள்ளது.

பயன்கள்[தொகு]

பூச்சிக்கொல்லி[தொகு]

இந்த தாவரம் ஒரு பயனுள்ள மெல்லுடலி கொல்லி மற்றும் பூச்சிக் கட்டுப்பாட்டுக்கு இயற்கையான மாற்றுப் பொருளாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) நத்தையைக் கட்டுப்படுத்த உதவ இந்த தாவரத்தைப் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது.[8] குறிப்பாக அகனிய நாடுகளில். ஸ்கிஸ்டோசோமியாசிஸ் என்பது நன்னீர் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும், இது நத்தைகளால் பரவுகிறது. ஒட்டுண்ணியிலிருந்து நோய்த்தொற்று ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக நத்தைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இந்த தாவரத்தின் சாறு பயன்படுத்தப்படுகின்றது.[9]

வகைகள்[தொகு]

கிறிஸ்து முள் என்பது ஒரு மாறுமியல்புடைய இனமாகும். இதில் பல வகைகள் விவரிக்கப்பட்டுள்ளன; இவற்றில் சிற்சில ஆசிரியர்களால் தனித்துவமான இனங்களாகக் கருதப்படுகின்றன. E. milii var. splendens ( E. splendens ) கிழக்கு இந்தியா மற்றும் நேபாளத்தின் போடோ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிறுபான்மை சமயமான பாத்தூயிசத்தின் உயர்ந்த தெய்வத்தின் உயிருள்ள உருவகமாக கருதப்படுகிறது.

  • Euphorbia milii var. bevilaniensis (Léon Croizat) Eugène Ursch & Jacques Désiré Leandri 1955
  • Euphorbia milii var. hislopii (Nicholas Edward Brown) Eugène Ursch & Jacques Désiré Leandri 1955 (syn. E. hislopii)
  • Euphorbia milii var. imperatae (Jacques Désiré Leandri) Eugène Ursch & Jacques Désiré Leandri 1955
  • Euphorbia milii var. longifolia Werner Rauh 1967
  • Euphorbia milii var. milii
  • Euphorbia milii var. roseana Marn.-Lap. 1962
  • Euphorbia milii var. splendens (Wenceslas Bojer ex William Jackson Hooker) Eugène Ursch & Jacques Désiré Leandri 1955
  • Euphorbia milii var. tananarivae (Jacques Désiré Leandri) Eugène Ursch & Jacques Désiré Leandri 1955
  • Euphorbia milii var. tenuispina Werner Rauh & A. Razafindratsira fl. 1991
  • Euphorbia milii var. tulearensis Eugène Ursch & Jacques Désiré Leandri 1955
  • Euphorbia milii var. vulcanii (Jacques Désiré Leandri) Eugène Ursch & Jacques Désiré Leandri 1955

சாகுபடி[தொகு]

கிறிஸ்து முள் தாவரத்தின் தண்டுகளை வெட்டி நடுவதன் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். கிறிஸ்து முள் கடினமான தாவரம் அல்ல, மேலும் 10 °C (50 °F) க்கும் குறைவான வெப்பநிலையை தாங்காது. கடுமையான வெப்ப நிலை உள்ள பகுதிகளில் முழு சூரிய ஒளியில் கண்ணாடி கூரையின் கீழ் வளர்க்கப்பட வேண்டும். உறைபனி போன்ற ஆபத்துகள் இல்லாத கோடைக் காலத்தின் போது, இதை ஒரு பாதுகாப்பான இடத்தில் வெளியே வைக்கலாம்.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Euphorbia milii
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Razanajatovo, H. (2020). "Euphorbia milii". IUCN Red List of Threatened Species 2020: e.T44389A153299391. doi:10.2305/IUCN.UK.2020-1.RLTS.T44389A153299391.en. https://www.iucnredlist.org/species/44389/153299391. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. 2.0 2.1 Ombrello, Dr T., Crown of Thorns, Plant of the Week, UCC Biology Department, archived from the original on 17 September 2009, பார்க்கப்பட்ட நாள் 1 October 2009
  3. Chudasama, C.A.M. (2018). "Molecular marker study in ornamental plant Euphorbia milii". Journal of Pharmacognosy and Phytochemistry 7 (3). https://www.researchgate.net/publication/327035448. பார்த்த நாள்: 10 December 2020. 
  4. "Crown of Thorns". பார்க்கப்பட்ட நாள் 11 December 2020.
  5. ThaiTambon.com
  6. "Crown-of-Thorns (Euphorbia milii)". Veterinary Medicine Library. University Library, University of Illinois at Urbana-Champaign. Archived from the original on 2017-03-23. பார்க்கப்பட்ட நாள் 2017-04-08.
  7. "Plants Toxic to Animals". பார்க்கப்பட்ட நாள் 18 December 2020.
  8. Souza, C.A.M. (November 1997). "Study of the embryofeto-toxicity of Crown-of-Thorns (Euphorbia milii) latex, a natural molluscicide". Brazilian Journal of Medical and Biological Research 30 (11): 1325–32. doi:10.1590/S0100-879X1997001100011. பப்மெட்:9532242. 
  9. de Carvalho Augusto, Ronaldo (July 28, 2017). "Double impact: natural molluscicide for schistosomiasis vector control also impedes development of Schistosoma mansoni cercariae into adult parasites". PLOS Neglected Tropical Diseases. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்து_முள்&oldid=3928932" இலிருந்து மீள்விக்கப்பட்டது