கிரைசோகாக்சிக்சு
கிரைசோகாக்சிக்சு | |
---|---|
![]() | |
ஒளிர் வெண்கல குயில் (கிரைசோகாக்சிக்சு லுசிடசு) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | மெய்க்கருவுயிரி |
திணை: | விலங்கு |
பிரிவு: | முதுகெலும்பி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | குக்குலிபார்மிசு |
குடும்பம்: | குக்குலிடே |
பேரினம்: | கிரைசோகாக்சிக்சு போயி, 1826 |
மாதிரி இனம் | |
குக்குலசு குப்ரேயசு ஆப்பிரிக்க மரகத குயில்) சா, 1792 | |
வேறு பெயர்கள் | |
சால்சைட்டிசு |
கிரைசோகாக்சிக்சு (Chrysococcyx) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள குயில் குடும்பத்தில் உள்ள ஒரு பேரினமாகும் .
1826ஆம் ஆண்டில் செருமனிய விலங்கியல் நிபுணரான பிரெட்ரிக் பாய் என்பவரால் கிரைசோகாக்சிக்சு பேரினமானது ஆப்பிரிக்க மரகத குயில் (கிரைசோகாக்சிக்சு குப்ரியசு) மாதிரி இனமாக சேர்க்கப்பட்டது.[1] கிரைசோகாக்சிக்சு என்ற பெயர் பண்டைய கிரேக்க χρυσος க்ருசோசு அதாவது "தங்கம்" மற்றும் κοκκυξ கொக்குக்சு "குயில்" ஆகிய சொற்கள் இணைந்து உருவானது.
சில வகைப்பாட்டியலாளர்கள் முக்கியமாக ஆசுட்ராலோ-பப்புவான் உயிரலகினை சால்சைட்சு பேரினமாகப் பிரித்தனர்.[2]
சிற்றினங்கள்[தொகு]
கிரைசோகாக்சிக்சு பேரினம் பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[3]
ஆப்பிரிக்க-ஆசியச் சிற்றினங்கள்[தொகு]
- டைடெரிக் குயில் (கிரைசோகாக்சிக்சு கேப்ரியசு)
- ஆப்பிரிக்க மரகதக் குயில் (கிரைசோகாக்சிக்சு குப்ரியசு)
- மஞ்சள் தொண்டை குயில் (கிரைசோகாக்சிக்சு பிளவிகுலாரிசு)
- கிளாசு குயில் (கிரைசோகோசிக்சு கிளாசு)
- ஆசிய எமரால்டு குக்கூ (கிரைசோகாக்சிக்சு மாகுலேடசு)
- நீலக்குயில் (கிரைசோகாக்சிக்சு சாந்தோர்ஹைஞ்சசு)
ஆத்திரேலியா-பப்புவான் சிற்றினங்கள்[தொகு]
- கோர்சூபீல்டு வெண்கல குயில் (கிரைசோகாக்சிக்சு பாசலிசு)
- பளபளக்கும் வெண்கல குயில் (கிரைசோகாக்சிக்சு லூசிடசு)
- வெண்காது வெண்கலக் குயில் (கிரைசோகாக்சிக்சு மெய்ரி )
- சிறிய வெண்கல குயில் (கிரைசோகாக்சிக்சு னுட்டிலசு)
- கருங்காது குயில் (கிரைசோகாக்சிக்சு ஆசுகுலன்சு)
- பழுப்புத் தொண்டை வெண்கல குயில் (கிரைசோகாக்சிக்சு ரூபிகோலிசு)
- நீண்ட அலகு குயில் (கிரைசோகாக்சிக்சு மெகர்கஞ்சசு)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Friedrich Boie (1826). "Generalübersicht der ornithologischen Ordnungen, Familien und Gattungen" (in de). Isis von Oken 19: Cols 969–981 [977]. https://biodiversitylibrary.org/page/27511180.
- ↑ Christidis, Les; Boles, Walter E. (2008). Systematics and Taxonomy of Australian Birds. Melbourne: CSIRO Publishing. பக். 159–164. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780643065116.
- ↑ "Turacos, bustards, cuckoos, mesites, sandgrouse". International Ornithologists' Union. 2019. https://www.worldbirdnames.org/bow/turacos/.