வெண்காது வெண்கலக் குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்காது வெண்கலக் குயில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
கி. மெய்ரி
இருசொற் பெயரீடு
கிரைசோகாக்சிக்சு மெய்ரி
சால்வதோரி, 1874

வெண்காது வெண்கலக் குயில் (White-eared bronze cuckoo)(கிரைசோகாக்சிக்சு மெய்ரி) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு குயில் சிற்றினம் ஆகும். இது நியூ கினியில் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

மலையடிவாரம் மற்றும் நடு மலைக்காடுகளின் காணக்கூடிய சிறிய குயில் வகை இதுவாகும். இதன் அலகிலிருந்து வால் வரை கருமையான கோடுகளுடன் வெள்ளை நிறத்தில் அடிப்பகுதியினைக் கொண்டது. மேற்பகுதி மரகதப் பச்சை நிறத்தில் செம்பழுப்பு பறத்தலுக்கான இறகுகளுடன் வெளிப்படையான வெள்ளை காது பிறை கொண்டது. ஆண் பறவை பிரகாசமான சிவப்புக் கண்களுடனும், பெண் பறவை செம்பழுப்பு நெற்றியுடன் இருக்கும். பிற சிற்றினங்களுடன் கலப்பு இன மந்தைகளில் வழக்கமாகக் காணப்படும். மற்ற வெண்கல-குயில் சிற்றினங்களுடன் இணைந்து வாழ்கின்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Chrysococcyx meyerii". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22683995/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. "White-eared Bronze-Cuckoo - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-26.