கியாம்பாட்டிஸ்டா விக்கோ
கியாம்பாட்டிஸ்டா விக்கோ | |
---|---|
![]() | |
பிறப்பு | சூன் 23, 1668 நேப்பிள்ஸ் |
இறப்பு | 23 சனவரி 1744 நேப்பிள்ஸ் | (அகவை 75)
தேசியம் | Italian |
படித்த கல்வி நிறுவனங்கள் | University of Naples (LL.D., 1694) |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | Principî di Scienza Nuova De antiquissima Italorum sapientia |
காலம் | 18 ஆம் நூற்றாண்டு |
பகுதி | மேற்கத்திய தத்துவம் |
பள்ளி | வரலாற்றுவாதம் |
கல்விக்கழகங்கள் | University of Naples |
முக்கிய ஆர்வங்கள் | சட்டவியல், மொழியியல், தத்துவம், வரலாறு |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | வெரம் எசே இப்சம் பேக்டம் |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
கியாம்பாட்டிஸ்டா விக்கோ தனது 17 வது வயதில் இஸ்சியா பேராயரின் உறவினர்களுக்கு ஒன்பதாண்டுகள் ( 1685 - 1694 ) ஆசிரியராக இருந்தார். கற்பித்துக் கொண்டே சட்டவியல், மொழியியல், தத்துவம், வரலாறு கற்றார். பிளேட்டோ, எபிக்யூரஸ், லூகிரீசியஸ், தாஸிடஸ், மாக்கியவல்லி, பிரான்சிஸ் பேக்கன், டெஸ்கார்டெஸ், குரேசியஸ் ஆகியோரின் படைப்புக்களைக் கருத்துன்றிப் படித்தார். நோபிள்ஸ் பல்கலைக்கழகத்தில் சொற்கோப்புக் கலைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1735-ல் நான்காம் சார்லசால் அரசரவை வரலாற்றாளராக நியமிக்கப்பட்டார்.
படைப்புகள்[தொகு]
- சம காலத்தை பற்றிய ஆய்வு
- இத்தாலியர்களை பற்றிய பண்டைக்கால அறிவு
- புதிய அறிவியல்
- சுய வரலாறு
- பிரபஞ்ச சட்டம்
இவை அல்லாமல் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் படைப்புகளில் புதிய அறிவியல் என்னும் நூல் வரலாற்று கருத்து பொக்கிஷமாக கருதப்படுகிறது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ க. வெங்கடேசன். வரலாற்று வரைவியல். வி.சி.பதிப்பகம்.