சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ்
சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ் Samuel Taylor Coleridge | |
---|---|
பிறப்பு | 21 அக்டோபர் 1772 ஓட்டேரி ஸ்ட மேரி |
இறப்பு | 25 சூலை 1834 (அகவை 61) இலண்டன் |
படித்த இடங்கள் |
|
பணி | கவிஞர், மெய்யியலாளர், critic, எழுத்தாளர் |
சிறப்புப் பணிகள் | The Rime of the Ancient Mariner |
வாழ்க்கைத் துணை/கள் | Sarah Fricker |
குழந்தைகள் | Sara Coleridge, Derwent Coleridge, Hartley Coleridge, Berkeley Coleridge |
குடும்பம் | James Coleridge, William Coleridge, Luke Herman Coleridge, George Coleridge, Edward Coleridge, Lt. Francis Syndercombe Coleridge, Anne Coleridge, Capt. John Coleridge, William Coleridge |
கையெழுத்து | |
சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ் (21 அக்டோபர் 1772 – 25 சூலை 1834) ஓர் ஆங்கில கவிஞராவார். அவரது சிறந்த நண்பர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்துடன் இணைந்து ஆங்கில இயக்கத்தின் இன்பவியல் இலக்கியத்திற்கு அடிகோலியவர்களாகக் கருதப்படுகின்றனர்.
கோல்ரிட்ஜ் பத்தாவது குழந்தையாகப் பிறந்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தாலும் பட்டம் எதுவும் பெறவில்லை. 1795ஆம் ஆண்டு வேர்ட்ஸ்வொர்த்தைச் சந்தித்து அவருடன் நெருங்கிய நட்பு கொண்டார். 1798ஆம் ஆண்டு இருவரும் இணைந்து லிரிகல் பல்லார்ட்ஸ் என்னும் வசனநடைக் கவிதைகளை எழுதி வெளியிட்டனர். இத்தொகுதி ஆங்கில இலக்கிய்யத்தின் முக்கிய திருப்பமாக பல திறனாய்வாளர்களால் கருதப்படுகிறது. இத்தொகுதியில் பல கவிதைகளை வேர்ட்ஸ்வொர்த் எழுதியிருந்தாலும் கோல்ரிட்ஜ் எழுதிய த ரைம் ஆஃப் த ஏன்சியன்ட் மாரினர் பலரால் அவருடைய சிறந்த படைப்பாகப் பாராட்டப்படுகிறது.
1790களில் இவர் ஓபியம் போதைமருந்துக்கு அடிமையானார். இத்தீவழக்கத்திலிருந்து மீள முடியாது குடும்பத்தை நடத்தவியலாது உடல்நலமும் குன்றினார். தமது எழுத்துக்களைத் தொடரவியலாது போயிற்று. அவரது நாக்குவன்மையால் அவர் பல மாலை விருந்துப் பேச்சுக்களுக்கு பேச அழைக்கப்பட்டார். பின்னாளில் சிறந்த விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.