உள்ளடக்கத்துக்குச் செல்

காஸ்பியன் ஆலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஸ்பியன் ஆலா
இனப்பெருக்கத்திற்கு தயாரானது
கனடாவில்
இனப்பெருக்கத்திற்கு இல்லாதது
காம்பியாவில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Hydroprogne

Kaup, 1829
இனம்:
H. caspia
இருசொற் பெயரீடு
Hydroprogne caspia
(Pallas, 1770)
வேறு பெயர்கள்

Sterna caspia
Hydroprogne tschegrava
Helopus caspius

காஸ்பியன் ஆலா (Caspian Tern, Sterna caspia) என்பது ஆலாக்களிலேயே மிகப்பெரியது. பவழச் சிவப்பு நிற அலகு இப்பறவையை எளிதில் இனங்காண உதவும் குறிப்பாகும்.

உடல் தோற்றம்

[தொகு]

இதன் நீளம் சராசரியாக 47-54 செமீ; விரித்த இறக்கையின் நீளம் 127-145 செமீ. இது கடற்காகத்தைப் போன்ற தோற்றமுடையது.

வளர்ந்த இனப்பெருக்க காலப் பறவை

[தொகு]

கரிய தலைக்கவசம், வெண்மையான உடல் மற்றும் கரிய நிற கால்கள் கொண்டது; சிவப்பு கலந்த செம்மஞ்சள் நிற அலகின் நுனியில் கரும்புள்ளி காணப்படும். இறக்கையின் மேல் பகுதியும் பின்பகுதியும் சாம்பல் நிறம். குளிர்காலத்திலும் கூட இதன் கரிய தலைக்கவசம் காணப்படும் - ஆனால் முன் தலையில் வெண்ணிற கீற்றுகளுடன் காணப்படும்.

பரவலும் வாழ்விடமும்

[தொகு]

காஸ்பியன் ஆலாக்களின் இனப்பெருக்க வாழிடங்கள், பெரிய ஏரிகள் மற்றும் கடற்கரைகள். வட அமேரிக்கா, ஐரோப்பா (குறிப்பாக, பால்டிக் கடல் மற்றும் கருங்கடல் பகுதிகள்), ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இடங்களில் இவை இனப்பெருக்கம் செய்கின்றன. புவி வெப்பமயமாதல் காரணமாக இவை கூடு கட்டும் இடத்தை மாற்றிக்கொள்ளும் நிகழ்வு, காஸ்பியன் ஆலாக்களின் அலாஸ்கா சிற்றினத்தில் காணப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2015). "Hydroprogne caspia". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2015: e.T22694524A84639220. doi:10.2305/IUCN.UK.2015.RLTS.T22694524A84639220.en. http://dx.doi.org/10.2305/IUCN.UK.2015.RLTS.T22694524A84639220.en. பார்த்த நாள்: 25 May 2016. 
  2. del Hoyo, J.; Elliot, A.; Sargatal, J., eds. (1996). உலகப் பறவைகளின் உசாநூல். Vol. 3. பார்செலோனா: Lynx Edicions. p. 645. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-87334-20-2.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hydroprogne caspia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஸ்பியன்_ஆலா&oldid=3811123" இலிருந்து மீள்விக்கப்பட்டது