உள்ளடக்கத்துக்குச் செல்

காவுரி சாம்பசிவ ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவுரி சாம்பசிவ ராவ்
காவுரி சாம்பசிவ ராவ்
ஜவுளி அமைச்சகம்
பதவியில்
17 சூன் 2013 – 26 மே 2014
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்ஆனந்த் சர்மா
பின்னவர்சந்தோஷ் குமார் கங்க்வார்
தொகுதிஏலூரு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1943-10-01)1 அக்டோபர் 1943
ஏலூரு, ஆந்திரப் பிரதேசம்
இறப்பு11 மார்ச்சு 2026(2026-03-11) (அகவை 82)
ஐதராபாத்து, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (until 2014)
துணைவர்ஹேமலதா
பிள்ளைகள்1 மகன், 3 மகள்கள்
வாழிடம்ஏலூரு
கல்விதேசிய தொழில்நுட்பக் கல்லூரி, வாரங்கல்
16 September, 2006
மூலம்:

காவுரி சாம்பசிவ ராவ் (Kavuri Samba Siva Rao, 1 அக்டோபர் 1943 – 11 மார்ச் 2026) ) ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும், பொறியாளரும், தொழிலதிபரும் ஆவார்.[1] இவர் 2013 சூன் 17 முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில், ஜவுளி அமைச்சகத்தில் ஜவுளி அமைச்சராக இருந்தார்.[2]

2014 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்படுவதை எதிர்த்து இவர் தனது அமைச்சர் பதவியையும், காங்கிரசு கட்சியிலிருந்தும் இராஜினாமா செய்தார் [3]

தொழில்

[தொகு]

இவர் இந்தியாவின் 8வது, 9வது, 12வது, 14வது மற்றும் 15வது மக்களவையில் உறுப்பினராக இருந்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் ஏலூரு மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார்,[4] இவர் 2014 மே 1 அக்கட்சியில் இணைந்தார்.

முன்னதாக, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிப்பட்டிணம் மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர், கட்டுமானம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் துறைகளில் வணிகத் தொழிலதிபர் ஆவார். இந்திய நாடாளுமன்றத்திற்கு ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் நாடாளுமன்றக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2013 சூன் 17 அன்று ஜவுளித் துறைக்கான மத்திய அமைச்சராகப் பதவியேற்றார் [5]

2014 ஏப்ரல் 28 அன்று இவர் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து இராஜினாமா செய்து பாரதிய ஜனதா கட்சியில் சேரும் முடிவை அறிவித்தார். தெலங்காணா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஒரு மாதத்திற்கு முன், அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிடப் போவதில்லை என்றும் இவர் அறிவித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "K.S. Rao, an engineer, industrialist serving fifth term as MP (Profile)". Business Standard. 2013.
  2. ↑ "Who's Who: Minister". Ministry of Textiles. Retrieved 16 September 2013.
  3. ↑ "Sambasiva Rao resigns protesting division of Andhra Pradesh". தி எகனாமிக் டைம்ஸ். 2014.
  4. ↑ Kalavalapalli, Yogendra (2 May 2014). "Congress minister Kavuri Samba Siva Rao joins BJP". Mint. Retrieved 2019-11-02.
  5. ↑ "Profile". Indian Parliament. Archived from the original on 2007-10-17. Retrieved 2023-11-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவுரி_சாம்பசிவ_ராவ்&oldid=4485356" இலிருந்து மீள்விக்கப்பட்டது