காலந்தீடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலந்தீடே
கிரமட்டோநாட்டசு பிரியேனே
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்ட்டினோட்டெரிகீ
வரிசை: பெர்சிபார்மிசு
துணைவரிசை: பெர்கோடியே
குடும்பம்: காலந்தீடே
பேரினங்கள்[1]

காலந்தியாசு
கிரமட்டோநாட்டசு

காலந்தீடே (Callanthiidae), பேர்சிஃபார்மசு வரிசையினை சேர்ந்த சிறிய மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் 3 பேரினங்களும் இவற்றுள் அடங்கிய 14 சிற்றினங்களும் உள்ளன. இக்குடும்ப மீன்கள் பெரும்பாலும் இந்திய மற்றும் அமைதிப் பெருங்கடல்களில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளுக்கு வெளியே தென்கிழக்கு அட்லாண்டிக்கின் காலந்தியாசு லெக்ராசு மற்றும் கிழக்கு அட்லாண்டிக் மற்றும் மத்தியதரைக் கடலின் க. ரூபர் மட்டுமே காணப்படுகின்றன. பிரகாசமான வண்ண மீன்கள் ஒப்பீட்டளவில் ஆழமான நீரில் காணப்படுகின்றன. இவற்றினை சாதாரண இசுகூபா மூழ்கல் மூலம் அடையக்கூடிய ஆழத்தில் காணலாம். காலந்தீடே என்ற அறிவியல் பெயரால் பரிந்துரைக்கப்பட்டபடி, இவை அந்தியாசு (துணைக் குடும்பம் அந்தினே, குடும்பம் செரானிடே) உடன் சில ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.

வகைப்பாட்டியல்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

  1. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2013). "Callanthiidae" in FishBase. February 2013 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலந்தீடீ&oldid=3735643" இலிருந்து மீள்விக்கப்பட்டது