இசுகூபா மூழ்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்கூபா நீர்முழ்காளி

இசுகூபா மூழ்கல் அல்லது ஸ்கூபா டைவிங் (ஆங்கிலத்தில்: SCUBA Diving), ஒரு மூழ்காளி நீருக்கடியில் சுவாசிக்க ஒரு தன்னிறைவான மூச்சு எந்திரத்தைத் (SCUBA) தன்னகத்தே கொண்டு மூழ்குவதை குறிக்கிறது.[1]. SCUBA என்பதின் ஆங்கில விரிவாக்கம் 'self-contained underwater breathing apparatus' ஆகும். மற்ற முறைகளில் மூழ்காளி மூச்சினைப் பிடித்துக்கொண்டோ அல்லது நீர்மட்டத்திலிருந்து அனுப்பப்படும் காற்றினைச் சுவாசித்தோ மூழ்கவேண்டும், இதனால் மூழ்காளி நீண்ட நேரமோ அல்லது நெடுந்தொலைவோ மூழ்கி நீந்த முடியாது, ஆனால் ஸ்கூபா முறையில் அழுத்தப்பட்டக் காற்று கொண்ட உருளையைத் தன் முதுகில் மாட்டிக்கொண்டு[2] சுதந்திரமாக நீண்ட நேரம் மூழ்கி நீந்துவர்.

இந்தியா தார்கர்லி, மால்வன் பீச்சில் மூழ்குதல் பற்றிய படிப்பினை

பொதுவாக ஸ்கூபா நீர்முழ்காளி, இரப்பர் போன்ற சாதனத்தினைத் தம் காலில் அணிந்துகொண்டே நீரில் மூழ்குவர். இது நீந்துவதை எளிதாக்கும்.

நீரடி மூச்சுக் கருவி இசுகுபா சாதனம்.
1:காற்று வளைகுழாய் (Air Hose), 2: வாய் துண்டம் (Mouthpiece), 3: சீரியக்கி (Regulator), 4: பாதுகாப்பு கவசம் (Harness), 5: முதுகுப் பட்டை(Back plate), 6: உருளை (Tank)

மேலும் பார்க்க[தொகு]

ஆழ்நீர் தாவுதல்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுகூபா_மூழ்கல்&oldid=3794257" இலிருந்து மீள்விக்கப்பட்டது