காத்ரா

ஆள்கூறுகள்: 22°59′N 86°51′E / 22.98°N 86.85°E / 22.98; 86.85
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காத்ரா
மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம்
ஆள்கூறுகள்: 22°59′N 86°51′E / 22.98°N 86.85°E / 22.98; 86.85
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்பாங்குரா
பரப்பளவு
 • மொத்தம்1.6161 km2 (0.6240 sq mi)
ஏற்றம்154 m (505 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்7,382
 • அடர்த்தி4,600/km2 (12,000/sq mi)
மொழிகள்*
 • அலுவல்வங்காளம், சந்தாளி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்722140
தொலைபேசி இணைப்பு எண்+91 3264
மக்களவைத் தொகுதிபாங்குரா
சட்டப் பேரவைத் தொகுதிஇராணிபந்த்
இணையதளம்bankura.gov.in

காத்ரா (Khatra) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள பாங்குரா மாவட்டத்தின் காத்ரா உட்பிரிவிலுள்ள காத்ரா சமூக மேம்பாட்டு தொகுதியிலுள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். இது காத்ரா உட்பிரிவின் தலைமையகமாகவும் இருக்கிறது.[1]

அமைவிடம்[தொகு]

காத்ரா மேற்கு வங்கத்தின் தெற்குப் பகுதியின் மேற்கே உள்ள பாங்குரா மாவட்டத்தின் தென்மேற்கில் உள்ளது. இது 22.98 ° வடக்கு 86.85 ° கிழக்கு பாகையில் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் 154 மீ (505 அடி) ஆகும்.[2]

பாங்குரா, மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தின் விவசாயத்திற்கு முக்கியமான கங்க்சபாதி பாசனத் திட்டம் இங்கு அமைந்துள்ளது.[3] இது கிட்டத்தட்ட முழுமையாக கிராமப்புறப் பகுதியாகும்.[4]

மக்கள்தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, காத்ராவில் மொத்தம் 7,382 மக்கள் தொகை இருந்தது. அதில் 3,774 (51%) ஆண்களும் 3,608 (49%) பெண்களும் ஆவர். 6 வயதிற்குட்பட்ட மக்கள் தொகை 672 ஆகும். காத்ராவில் மொத்த கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 5,658 (6 ஆண்டுகளில் 84.32% மக்கள்).[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Official District Website பரணிடப்பட்டது 2008-07-25 at the வந்தவழி இயந்திரம்
  2. Falling Rain Genomics, Inc - Khatra
  3. "District Census Handbook Bankura" (PDF). pages 13-17. Directorate of Census Operations West Bengal. பார்க்கப்பட்ட நாள் 23 April 2020.
  4. "District Statistical Handbook 2014 Bankura". Table 2.4b. Department of Statistics and Programme Implementation, Government of West Bengal. பார்க்கப்பட்ட நாள் 23 April 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "2011 Census – Primary Census Abstract Data Tables". West Bengal – District-wise. Registrar General and Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 14 October 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

  • விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Mukutmanipur
"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்ரா&oldid=3239419" இலிருந்து மீள்விக்கப்பட்டது