காக்கத்துருத்து

ஆள்கூறுகள்: 9°49′01″N 76°19′30″E / 9.817°N 76.325°E / 9.817; 76.325
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காக்காத்துருத்து
Kakkathuruth
தீவு
காக்காத்துருத்து Kakkathuruth is located in கேரளம்
காக்காத்துருத்து Kakkathuruth
காக்காத்துருத்து
Kakkathuruth
இந்தியா, கேரளாவில் அமைவிடம்
காக்காத்துருத்து Kakkathuruth is located in இந்தியா
காக்காத்துருத்து Kakkathuruth
காக்காத்துருத்து
Kakkathuruth
காக்காத்துருத்து
Kakkathuruth (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°49′01″N 76°19′30″E / 9.817°N 76.325°E / 9.817; 76.325
நாடு India
மாநிலம்கேரளம்
Districtஆலப்புழா
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

காக்கத்துருத்து (Kakkathuruth) இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் வேம்பநாட்டு ஏரியால் சூழப்பட்ட ஒரு சிறிய தீவு ஆகும். [1] காகங்களின் தீவு என்றும் இத்தீவு அழைக்கப்படுகிறது. அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான நேசனல் சியோகிராஃபிக் தொலைக்காட்சி , காக்கத்துருட்டில் இருந்து பார்க்கப்படும் சூரிய மறைவு நிகழ்வு உலகின் மிகச் சிறந்ததாக காட்சி அனுபவம் என வர்ணிக்கிறது.[2] கிரகத்தின் வெவ்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட 24 மிக அழகான படங்களில் ஒன்றாக இக்காட்சியை இந்நிறுவனம் சேர்த்துள்ளது. [3]

கண்ணோட்டம்[தொகு]

ஆலப்புழாவின் வடக்கு முனையில் உள்ள எழுபுன்னா கிராமத்தில் காக்கத்துருத்து தீவு அமைந்துள்ளது. [4] ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள எரமல்லூர் காக்கத்தூருக்கு அருகில் உள்ள நிலப்பகுதியாகும். [5] எரமல்லூரில் இருந்து படகு மூலம் தீவை அணுகலாம். மூன்று கிலோமீட்டர் நீளமும் ஒன்றரை கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த தீவில் சுமார் 300 குடும்பங்கள் வசிக்கின்றன. [6] வேம்பநாட்டு ஏரியின் நடுவில் அமைந்துள்ள காக்கத்துருத்து காகங்கள் மற்றும் பல பறவைகளின் புகலிடமாகமாகவும் பறவை ஆர்வலர்களின் விருப்பமான இடமாகவும் உள்ளது. [7]

தீவில் பெரிய சாலைகள் எதுவும் இல்லை மற்றும் மண் சாலைகளில் மிதிவண்டி முக்கிய வாகனமாகப் பயன்படுத்தப்படுகிறது. தீவில் அங்கன்வாடியும் (குழந்தைகளுக்கான பள்ளி) மற்றும் ஆயுர்வேத மருத்துவமனையும் உள்ளன. [8] சதுப்பு நிலங்கள், தென்னந்தோப்புகள் எங்கும் காணக்கூடியவையாக உள்ளன. வேம்பநாட்டு காயலின் பரந்த தன்மை காக்காத்துருத்தை ஆலப்புழாவின் முக்கியமான சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது. [9] 2016 ஆம் ஆண்டில், நேசல் சியோகிராஃபிக் தொலைக் காட்சி நிறுவனம் உலகின் 24 மிக அழகான இடங்களில் ஒன்றாக காக்காத்துருத்தை தேர்ந்தெடுத்தது. [10]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Magical sunsets to exhilarating village experience: Kakkathuruthu awaits travel enthusiasts" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-17.
  2. "നാടന്‍ കള്ളും അപ്പവും കരിമീനും ഞണ്ടും; കാക്കത്തുരുത്തിലേക്ക് വിട്ടാലോ?" (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-17.
  3. (in en) Kerala's Economic Development: Emerging Issues and Challenges. https://books.google.com/books?id=mDJqDwAAQBAJ&dq=Kakkathuruthu&pg=PT176. 
  4. "Kakkathuruthu beckons nature lovers with its magical sceneries". OnManorama.
  5. "കാക്കത്തുരുത്ത്: കേരളത്തിന്റെ സമ്പദ് വ്യവസ്ഥ മാറ്റാൻ കഴിയുന്ന സുവർണ ദ്വീപ്". News18 Malayalam. 2019-10-20.
  6. "കാക്കത്തുരുത്തിന്റെ പ്രത്യേകത എന്താണ്?". ManoramaOnline.
  7. "Kakkathuruthu | Tiny Island | Tourist Places in Alappuzha". Kerala Tourism.
  8. "ലോകശ്രദ്ധയാകർഷിച്ച വിനോദസഞ്ചാരകേന്ദ്രം, പക്ഷേ ഒരു പാലം ഇന്നാട്ടുകാർക്ക് നടക്കാത്ത മനോഹര സ്വപ്‌നം" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-17.
  9. "Kakkathuruthu, The Tiny Crow Island In Kerala Is Now On NatGeo's List Of World Destinations" (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-01-17.
  10. "Kakkathuruthu on NatGeo's must-visit list" (in en-IN). https://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/Kakkathuruthu-on-NatGeo%E2%80%99s-must-visit-list/article16075622.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்கத்துருத்து&oldid=3820872" இலிருந்து மீள்விக்கப்பட்டது