களக்காடு மரத் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
களக்காடு மரத் தவளை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ராக்கோபோரிடே
பேரினம்:
ராகோபோரசு
இனம்:
ரா. மலபாரிகசு
இருசொற் பெயரீடு
ராகோபோரசு மலபாரிகசு
அக்ல், 1927
வேறு பெயர்கள் [2]

ராக்கோபோரசு பெடோமி பெளலஞ்சர், 1882

களக்காடு மரத் தவளை[3] (Rhacophorus calcadensis-ரகோபோரசு கால்காடென்சிசு) களக்காடு சறுக்குத் தவளை என்றும் அழைக்கப்படுகிறது.[1][2][4] இது இலாங்பியன் பறக்கும் தவளை என்றும் அறியப்படுகிறது.[2][3] இது ராகோபோரிடே குடும்பத்தில் உள்ள ஓர் தவளை சிற்றினம் ஆகும். இது இந்தியாவின் கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் தெற்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1][2][3] இதன் பெயர் தமிழ்நாட்டின் களக்காடு நகரத்தின் வகையைக் குறிக்கிறது.[2][3]

விளக்கம்[தொகு]

களக்காடு மரத்தவளை சுமார் 20 முதல் 90 மி.மீ. வரை நீளமுடையதாக இருக்கும். இதன் முதுகுபுற நிறம் வெளிர் பச்சை-பழுப்பு நிறமானது. பக்கவாட்டில் மச்சம் இருக்கும். அடிவயிறு மஞ்சள் நிறத்திலிருந்து வெளிர் பச்சை நிறம் வரை இருக்கும். விரல்கள் மற்றும் கால்விரல்களுக்கு இடையில் ஒரே மாதிரியான வண்ண வலையமைப்பு உள்ளது. தோல் மடிப்புகள் முன் மற்றும் பின் மூட்டுகளில் காணப்படுகின்றன, ஒவ்வொரு பின்னங்காலிலும் ஒரு குதி முள் உள்ளது.[5]

வாழிடமும் பழக்கவழக்கமும்[தொகு]

களக்காடு மரத்தவளையின் இயற்கையான வாழிடம் வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள், மலைக் காடுகள் மற்றும் ஆறுகள் ஆகும்.[1] இது பகலில் வன விதானத்தில் 30 மீ உயரத்திற்கு மேல் காணப்படுகிறது. இவை மழைக்காலங்களுக்கு முன்னும் பின்னும் ஆழமற்ற குளங்கள் அல்லது மெதுவாக ஓடும் நீரோடைகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. நான்கு அல்லது ஐந்து ஆண்களின் குழுக்கள் பெண்களைச் சுற்றிக் குரல் எழுப்பி, மிதமான சத்தமாக "ச்சுச்-ச்ர்ர்ர்-சக்-சக்-சக்" என்று இனப்பெருக்கத்திற்கு அழைக்கின்றன. இவை ஆழமற்ற நீர்க்குளங்களில் தாவரங்களில் தொங்கும் நுரை கூடுகளை உருவாக்குகின்றன. இது ராக்கோபோரசு மலபாரிகசின் கூடு போன்றது, ஆனால் அளவில் சிறியது.[6]

இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Biju, S.D.; Dasaramji Buddhe, G.; Dutta, S.; Vasudevan, K.; Srinivasulu, C.; Vijayakumar, S.P. (2016). "Rhacophorus calcadensis". IUCN Red List of Threatened Species 2004: e.T58983A86241030. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58983A11854267.en. https://www.iucnredlist.org/species/58983/86241030. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Frost, Darrel R. (2022). "Rhacophorus calcadensis Ahl, 1927". Amphibian Species of the World: An Online Reference. Version 6.1. American Museum of Natural History. doi:10.5531/db.vz.0001. பார்க்கப்பட்ட நாள் 25 November 2022.
  3. 3.0 3.1 3.2 3.3 "Rhacophorus calcadensis Ahl, 1927". India Biodiversity Portal. பார்க்கப்பட்ட நாள் 25 November 2022.
  4. Venkataraman, K.; Chattopadhyay, A.; Subramanian, K.A., தொகுப்பாசிரியர்கள் (2013). Endemic Animals of India (Vertebrates). Kolkata: Zoological Survey of India. பக். 235 pp.+26 plates. https://www.researchgate.net/publication/301693197.  [Rhacophorus calcadensis: p. 124]
  5. Gururaja.K.V. Pictorial guide to Frogs and Toads of Western Ghats, Gubbi Labs, India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-924461-0-3
  6. Seshadri.K.S. pers.obs. 2012

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=களக்காடு_மரத்_தவளை&oldid=3880163" இலிருந்து மீள்விக்கப்பட்டது