கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது என்பது இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் தமிழறிஞர் ஒருவருக்கு அளிக்கப்படும் விருதாகும். முன்னாள் தமிழக முதலமைச்சரான மு. கருணாநிதி, அவருடைய சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கி “கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை” ஒன்றை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நிறுவியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த தமிழறிஞருக்கு இந்தியாவிலேயே மிக மதிப்புயர்ந்த ரூ 10 இலக்கம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டிதழும், ஐம்பொன்னாலான நினைவுப் பரிசும் அடங்கிய விருது அளிக்கப்படுகிறது.

விருது பெற்றவர்கள் பட்டியல்[தொகு]

வரிசை எண் விருது பெற்றவர் பெயர் நாடு விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா
[1]
பின்லாந்து 2009

மேற்கோள்கள்[தொகு]