ப. மருதநாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ப. மருதநாயகம் என்பவர் பேராசிரியர், கல்வியாளர், நூலாசிரியர், ஆய்வாளர் என அறியப்படுகிறார். ஆங்கில இலக்கியத்திலும் தமிழ் இலக்கியத்திலும் புலமை பெற்று விளங்குபவர். 20 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கிலப் பேராசிரியராக கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றியுள்ளார்.

பேராசிரியர் ப. மருதநாயகம் ஆங்கிலம், தமிழ், அமெரிக்க இலக்கியம் ஆகிய மூன்றிலும் முறையே சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அமெரிக்க நாட்டு ஹவாயி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டங்களும் தொன்மத் திறனாய்வு பற்றிய ஆய்வேட்டிற்காகத் தமிழில் முனைவர் பட்டமும், "தமிழ்ச் செவ்விலக்கியங்கள்: ஒப்பியல் பார்வை" என்னும் ஆங்கிலக் கட்டுரைத் தொகுதிக்காகப் புதுவை நடுவண் பல்கலைக்கழகத்தின் முதல் டி. லிட். பட்டமும் பெற்றவர். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் ஆங்கிலப் பேராசிரியராகக் கடமை ஆற்றியுள்ளார். புதுவைப் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வுபெற்றபின் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக மூன்றாண்டுகள் பணிபுரிந்தார். கடந்த பத்து ஆண்டுகளாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வுத்தகைஞராகச் செயல்படுகிறார். மொரீசியசில் உள்ள மகாத்மா காந்தி உயர்கல்வி நிறுவனத்தின் பேரறிஞர் அண்ணா இருக்கைப் பேராசிரியராக அழைக்கப்பெற்று அண்ணா பிறந்தநாள் சொற்பொழிவை நிகழ்த்தியதோடு அண்ணா பற்றிய நூல்கள் வெளிவருவதற்கான திட்டப்பணிகளை வடிவமைத்துத் தந்தார். கனடாவின் கார்ல்டன் பல்கலைக்கழகம், பிரெஞ்சு ரென்-2 பல்கலைக்கழகம், ரீயூனியன் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழகம், ஜெர்மனியின் ஹைடல்பர்க் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு சொற்பொழிவுகளும் நிகழ்த்தியுள்ளார். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, பால்டிமோர், ராலே, சார்ல்ஸ்டன், வாசிங்டன் ஆகிய நகரங்களில் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கங்களில் புறநானூறு, திருக்குறள், தனிநாயக அடிகளின் தமிழ்ப்பணி போன்ற தலைப்புகளில் அவரால் கட்டுரைகள் வழங்கப்பெற்றன. ஆக்ஸ்போர்டு பாட்லியன் நூலகத்திலும், லண்டன் பிரித்தானிய நூலகத்திலும் எஃப்.டபிள்யூ. எல்லிசின் கையெழுத்துப் பிரதிகளை ஆய்வுசெய்து அன்னாரின் மூன்று அதிகாரத் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலையும், தமிழ் யாப்பிலக்கணம் பற்றிய ஆங்கில நூலையும் பதிப்பித்துள்ளார். சாகித்திய அகாதெமி வெளியிட்ட தொகுதிகளில் இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழ்க்கவிதைகள், கட்டுரைகள், நாவல் பகுதிகள் பல இடம் பெற்றுள்ளன. இவருடைய ஆங்கில, தமிழ், அமெரிக்க, கனடா நாட்டு இலக்கியங்கள் பற்றிய இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் தமிழக, இந்திய, மேலை ஆய்விதழ்களில் வெளிவந்துள்ளன. இவர் இதுவரை எழுதியுள்ள பதினான்கு ஆங்கில நூல்களும், பத்தொன்பது தமிழ் நூல்களும் உலகளாவிய ஒப்பியல் பார்வை கொண்டவை.

கல்வித் தகுதிகள்[தொகு]

சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம், அமெரிக்க அவாய் பல்கலைக் கழகத்தில் அமெரிக்க இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இரண்டு முனைவர் பட்டங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் பெற்றார். தொன்மத் திறனாய்வு பற்றி ஆங்கில முனைவர் பட்டமும் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பற்றி தமிழ் முனைவர் பட்டமும் பெற்றார். "தமிழில் தலைசிறந்த இலக்கியங்கள்: ஒப்பியல் பார்வை" என்னும் ஆங்கில கட்டுரைத் தொகுதிக்காக புதுவை நடுவண் பல்கலைக் கழகத்தின் முதல் டி லிட் பட்டம் பெற்றார்.

பணிகள்[தொகு]

  • பேராசிரியர் மருதநாயகம் புதுவைப் பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி ஒய்வு அடைந்த பின் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் இயக்குநர் பதவியை ஏற்று மூன்று ஆண்டுகள் பணி செய்தார்.
  • சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வுத் தகைஞர் பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.
  • இந்தியா மற்றும் மேலை நாடுகளில் வெளிவரும் ஆய்வு இதழ்களில் இவர் எழுதிய தமிழ், அமெரிக்க, கனடா இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்தன.
  • செருமனி நாட்டின் கைடெல்பார்க் பல்கலைக் கழகம் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகப் பாட்லியன் நூலகம், கனடாவின் கார்ல்டன் பல்கலைக்கழகம், பிரெஞ்சு பல்கலைக் கழகம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு சொற்பொழிவுகளும் ஆற்றியுள்ளார்.
  • இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழ்க் கவிதைகள் கட்டுரைகள் போன்றவை சாகித்திய அகாதமி போன்ற நிறுவனங்கள் பதிப்பித்த தொகுதிகளில் வெளிவந்துள்ளன.
  • வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு மன்றம் நிகழ்த்துகிற கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றி வருகிறார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • கிழக்கும் மேற்கும், ஐந்திணைப் பதிப்பகம் சென்னை 1991.
  • Celebrations and Detractions: Essays in Criticism, Reliance Publishing House,New Delhi, 1993.
  • Quest for Myth: Leslie Fiedler's Critical Theory and Practice, Reliance Publishing House, New Delhi 1994.
  • Across Seven Seas: Essays in Comparative Literature, B.R.Publishers, New Delhi, 1994.
  • The Tamil Canon: Comparative Readings: Puduchery Co.Op.Book Society, 1998.
  • Decolonisation and After: Studies in Indian and Canadian Writings, Creative Books, New Delhi, 1999.
  • திறனாய்வாளர் தெ.பொ.மீ. நியூ சென்சுரி புக் அவுஸ் சென்னை 1999.
  • தமிழின் செவ்வியல் தகுதி Ponrani publishers New Delhi 2001.
  • மேலை நோக்கில் தமிழ்க்கவிதை, International Institute of Tamil Studies Chennai 2001.
  • சங்கச் சான்றோர் முதல் சிற்பி வரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 2003.
  • புதுப் பார்வையில் புறநானூறு, காவ்யா சென்னை 2004.
  • பாரதி ஆறு பாரதிதாசன் பத்து, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 2004.
  • அயோத்திதாசரின் சொல்லாடல், கல்லாதி திருநெல்வேலி 2006.
  • Sirpi: Poet as Sculptor, Nandhini Pathippakam, 2006.
  • சங்க இலக்கிய ஆய்வு: தெ பொ மீ யும் மேலை அறிஞரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை 2008
  • வள்ளலார் முதல் சிற்பி வரை: கவிதா பதிப்பகம் சென்னை 2008.
  • ஒப்பில் வள்ளுவம், சாரதா பதிப்பகம் சென்னை 2008.
  • From Homer to Sri Aurobindo, New Century Book House Chennai 2009.
  • The Treasure—Trove of Time and the Verse—Key: An English Translation of Kalaignar Karunanidhi's காலப் பேழையும் கவிதைச் சாவியும், Macmillan 2009.
  • As Is in the Original: Short Stories; Translated by P.Raja; Edited by P.Marudanayagam.,V.Murugan, Macmillan 2009.
  • சிலம்பின் ஒலி: ஆறு பரல்கள், இராசகுணா பதிப்பகம், 2010
  • நானும் என் தமிழும், தமிழ் நேயம், 2011
  • Ancient Tamil Poetry and Poetics, Central Institute of Classical Tamil, Chennai, 2011
  • A New Star in the Epic Sky: Kulothungan's Journey of Man, New Century Book House, Chennai 2012
  • பேராசிரியர் நன்னன்—ஆளுமை புலமை தொண்டு, ஏகம் பதிப்பகம் சென்னை. 2013
  • Warring Kings and Wandering Bards: Studies in Puranaanuru, Rajaguna Pathippagam, 2012
  • Tolkappiar to Kulothungan: Dimensions of Tamil Mind, New Century Book House, 2013
  • பாரதி பதினாறு(திறனாய்வுக் கட்டுரைகள்), சேகர் பதிப்பகம், சென்னை. 2014
  • பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம், தமிழ்ப் பேராயம், காஞ்சிபுரம், 2014
  • மேலை மெய்யியலுக்கு வழிகாட்டிய வள்ளுவம், உலகப்பண்பாட்டு மையம், கோவை, 2015
  • பக்தி இயக்கமும் தமிழ்க்கவிதை வளர்ச்சியும், இராசகுணா பதிப்பகம், 2015
  • மேலை நோக்கில் குலோத்துங்கன் கவிதைகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2016

பதிப்பித்த நூல்கள்[தொகு]

  • An Anthology of American Prose, Emerald Publishers, 1987
  • The Art of Prose, Pondicherry University, 1988
  • Sixty-Third Annual Conference of Indian Philosophical Congress Souvenir, Pondicherry University, 1988
  • Soul_ Animating Stories, New Century Book House, 1994
  • Palm-leaf and other Manuscripts in Indian Languages, Institute of Asian Studies, Chennai, 1995
  • Selected Poems of Bharatidasan, Pondicherry Institute of Linguistics and Culture, 2001
  • Selected Poems of Vanidasan, Pondicherry Institute of Linguistics and Culture, 2001
  • The Earliest Complete Grammar: Studies in Tolkappiyam, Sekar Pathippagam, Chennai, 2010
  • The Ellis Manuscript (Ellis's Commentary on three chapters of Tirukkural in his own handwriting), Seethai Pathippagam, 2010
  • Kulothungan's Maanuda Yaathirai, translated by V. Murugan, New Century Book House, 2014
  • F. W. Ellis's Memorandum on Tamil Prosody, Kaavya, Chennai, 2014
  • F. W. Ellis's Translations of Tamil Classics, International Institute of Tamil Studies, Chennai, 2015
  • Published the last four chapters of Ananda Ranga Pillai Diary, 2002-2006
  • Edited a few issues of the Journal of Pondicherry Institute of Linguistics and Culture, 2002-2006
  • Edited several issues of the Newsletter (Chemmozhi) of Central Institute of Classical Tamil, 2006-2012

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்த நூல்கள்[தொகு]

  • முத்தொள்ளாயிரத்திலிருந்து நாற்பது பாடல்கள் (MUTTOḶḶĀYIRAM: Text, Transliteration and Translations in English Verse and Prose), செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை, 2010
  • புறநானூறு முழுவதும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை
  • முதுமொழிக் காஞ்சி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதியார் பாடல்கள், சாகித்திய அகாதெமி
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதியார் கட்டுரைகள், சாகித்திய அகாதெமி
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிதாசன் பாடல்கள், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிதாசன் பாடல்கள், பாரதிதாசன் பல்கழைக்கழகம்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட வாணிதாசன் பாடல்கள், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட குலோத்துங்கன் பாடல்கள், நியூ சென்சுரி புக் ஹவுஸ்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட சிற்பியின் பாடல்கள், நந்தினி பதிப்பகம்

சான்று[தொகு]

பாரதி பதினாறு-நூல், நூலாசிரியர் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._மருதநாயகம்&oldid=3925318" இலிருந்து மீள்விக்கப்பட்டது