கலப்பு வில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌ சியாங் என்ற சீன வில்செய்வோனால் மறுஉருவாக்கம் பெற்ற மிங் வம்சத்தின் கைய்யேன் வில். இது கொம்பு, மூங்கில் மற்றும் தசைநாண் ஆகியவற்றின் கலவை.
கொரிய கலப்பு வில்லை குரு ஹன் கிம் பயன்படுத்துகிறார். 

கலப்பு வில் என்பது கொம்பு, மரம், மற்றும் தசைநார் ஆகியவற்றால் ஆன ஒரு பாரம்பரிய வில், (பல்லடுக்கு வில்லுடன் ஒப்பிடுக). மர உள்ளகத்தின் உட்பக்கத்தில் (வில்லாளியின் பக்கம்) கொம்பும் , வெளிப்பக்கம் தசைநாரும் இருக்கும். வில்லை இழுக்கையில், தசைநார் (வெளிப்புறமாக விரிந்து) மற்றும் கொம்பு (உட்புறமாக அழுத்தப்பட்டு) இரண்டும் இணைந்து, அதே நீளமுள்ள மரத்தாலான வில்லைவிட அதிக சக்தியை சேமிக்கும். ஒருமர வில்லின் வலிமையும், இழு-நீளத்தையும் ஒத்து இதை தயாரிக்க இயலும். இதனால் குறைந்த நீளம்கொண்ட வில்லில் இருந்து, அதே அளவு ஆற்றலோடு அம்பை செலுத்த முடியும். இருப்பினும், கலப்பு வில்லை உருவாக்க ஒருமர வில்லைவிட அதிக வகைகளான மூலபொருட்கள் தேவை, இதை உருவாக்கவும் அதிக நேரம் பிடிக்கும். இவ்வாறு உருப்பெற்ற வில் ஈரப்பதத்தால் பாதிப்படையும்.

நாடோடிப் பழங்குடிகளின் உறவைபெற்ற இராணுவ நாகரீகங்களில், இவ்வகை வில்கள் பரவின; கலப்பு வில்கள் ஆசியா முழுவதும் உபயோகத்தில் இருந்தது, கொரியாவிலிருந்து ஐரோப்பாவின் அட்லாண்டிக் கரைகள், வடக்கு ஆப்பிரிக்கா, தெற்கில் அராபிய தீபகற்பம் மற்றும் இந்தியா வரை இதன் உபயோகம் நீண்டது.

இவ்வில்லை பயன்படுத்திய வெவ்வேறு கலாச்சாரங்களில் இதன்  தயாரிப்பு முறையும் மாறுபடும். முதலில், கிளையின் முனைகள் வில்லை  வளைபடும். பின்னர், முனைகள் எலும்பால், அல்லது மான்கொம்பினால் ஆன சட்டங்களால் திடமாக்கப்பட்டது. முனைகள் திடமான வில்லை 'சியா'  என்றழைப்பர். 

இதர வில்களைப் போல, இவைகளும் துப்பாக்கியின் அறிமுகத்தால் முக்கியத்துவத்தை இழந்தது. 

தயாரிப்பு மற்றும் மூலபொருட்கள் [தொகு]

மர உள்ளகம் வில்லிற்கு வடிவத்தையும் நிலைத்தன்மையையும் தருகிறது. பல துண்டுகளை விலங்குக் கோந்தை கொண்டு ஒட்டி செய்யப்படும், ஆகையால் மரம் கோந்தோடு ஒட்டும்படி இருக்கவேண்டும். 

கிளையின் வளையும் பகுதியில் உள்ள மரம், அதிகபட்ச அழுத்தங்களை தாங்கவல்லதாக இருக்கவேண்டும், மற்றும் மாப்பிள் போல் அடர்ந்த மரம் துருக்கிய வில்களில் உபயோகிக்கப்பட்டது.[1] மூங்கில், மற்றும் முசுக்கொட்டை குடும்ப மரங்கள், சீனாவில் பாரம்பரியமானது.

கொம்பு மெல்லிய அடுக்காக, வில்லின் உட்புறத்தில் (அதாவது வில்லாளியை எதிர்கொண்டவாறு) ஒட்டப்படும். எருமையின் கொம்பு இதற்கு மிகவும் ஏற்றது,  அதேபோல் கெம்சுபக், ஆப்பிரிக்க மறிமான், இபெக்ஸ் காட்டாடு போன்ற பலவகை மறிமான்கள், மற்றும் அங்கேரிய சாம்பல் மாட்டின்  கொம்பும் இதற்கு ஏற்றது.[2] ஆடு மற்றும் செம்மறியாட்டு கொம்பையும் பயன்படுத்தலாம். பயன்படுத்துகையில் மெல்லிய அடுக்குகளாக சிதைந்து போவதால், பெரும்பாலான மாடுகளின் கொம்பு, இதற்கு ஏற்றதல்ல. அழுத்தத்திற்கு உள்ளாகும்போது, மரத்தைவிட கொம்பு அதிக சக்தியை சேமிக்க வல்லது.[3]

விலங்கு ஊன்பசையில் ஊறவைத்த தசைநாணை, அடுக்குகளாக வில்லின் வெளிப்புறத்தின் மீது பதிப்பர். தசைநாணின் இழைகள்,  வில்லின் நீளத்திற்கு இணையாக இருக்கும்படி ஒட்டப்படும். பொதுவாக, காட்டு மான் அல்லது வளர்ப்புப் பாலூட்டிகளின், கெண்டைக்கால் மற்றும் முதுகிலிருந்து தசைநாண் பெறப்படுகின்றது. பாரம்பரியமாக, காட்டு விலங்கின் தசைநாணைவிட காளையுடையது தரம் குறைவாக இருக்கும். காளையின் தசைநாணில் அதிக கொழுப்பு இருப்பதால், விரைவில் சிதைந்துவிடும்.[1] மரத்தைவிட தசைநாண் அதிக நீள்திறன் கொண்டதால், அதிக சக்தியை சேமிக்க வல்லது.

நாணும்  அம்பும் இந்த ஆயுத அமைப்பின் முக்கிய பாகங்கள், ஆனால் இவைகளை பற்றி வரலாற்றில் எந்த குறிப்பும் இல்லை.

கலப்பு வடிவத்தின் சாதகங்களும் பாதகங்களும் [தொகு]

சாதகங்கள்[தொகு]

ஒருமர வில்லைவிட (ஒரே மரத்துண்டினால்க ஆன வில்) கலப்பு வில்லின் அனுகூலமான விடயம் என்னவென்றால், அதன் சிறுத்த அளவில் உள்ள மிகுந்த சக்தி தான். குதிரையில் அல்லது ரதத்தில் இடம்பெயரும் வில்லாளிகளுக்கு, இது ஒருமர வில்லைவிட இவை அதிக சவுகரியமாக இருந்தது. கலப்பு வில்லின் அளவில் ஒருமர வில்லை உருவாக்கினால், நாணை முழுதாக பின்னிழுக்கும் முன், இழு சக்தியை தாங்க இயலாமல் வில் உடைந்துபோகும்.[3]

பாதகங்கள்[தொகு]

ஒருமர வில்லைவிட கலப்பு வில்லை உருவாக்க பல்வேறு வகையான மூலபொருட்களும், மிக அதிக நேரமும் ஆகும். ஊன்பசையை இதில் பயன்படுத்தி இருப்பதால்; ஈரப்பதமான வானிலையின் போது, இந்த கலப்பு வில் வலுவிழந்து போகும். மழையில் நனைந்தாலோ, அல்லது நீரில் மூழ்கினாலோ விரைவில் சிதைந்து போய்விடும். ஈரப்பதமான அல்லது மழை பிரதேச வாசிகள், ஒரு மர வில்லை பாரம்பரியமாக ஏற்றனர். அதேபோல், மழை குறைவான அல்லது வறண்ட பிரதேச வாசிகள், கலப்பு வில்லை விரும்பினர்.

தோற்றமும் பயன்பாடும்[தொகு]

ரத வீரர்கள் உடனான பிணைப்பு  [தொகு]

காதேஷ் போரில் இரண்டாம் ராமேசஸ்

நாடோடிகளுடன் தொடர்பில் இருந்த சீன, அசிரிய மற்றும் எகிப்திய  நாகரீகங்கள், கலப்பு வில்லை ஏற்று, அதற்காக தகவமைந்துக் கொண்டன. கி.மு. 1324-ல் இறந்த துட்டன்காமன்னின் சமாதியில், பல கலப்பு வில்கள் கண்டெடுக்கப்பட்டன.[4] குறைந்தது சாங் வம்சத்தில் (கி.மு. 1700-1100) இருந்தாவது சீனர்கள் கலப்பு வில்லை (ரதத்திலும் பயன்படுத்த) அறிந்திருக்கவேண்டும்.[5] கி.மு. நான்காம் நூற்றாண்டோடு, ரதப்படை அதன் இராணுவ முக்கியத்துவத்தை இழந்தது. அதற்கு மாற்றாக குதிரைப்படை உருவானது.

ஏற்ற வில்லாளர்களால் [தொகு]

உதுமானிய துரக வில்லாளி 

ஸ்டெப்பியின் நவீன வீரராக ஆனார்கள் ஏற்ற வில்லாளிகள், மேலும் கலப்பு வில்தான் நவீன ஆயுதம்.

முதல்நிலை தந்திரமாக துரக வில்லாளிகள் சிறு-போர் விளைவிப்பார்கள்: அதாவது நெருங்கி வந்து, தாக்கிவிட்டு, எதிர்த் தாக்குதலை தொடுக்கும் முன் பின்வாங்கிவிடுவார்கள்.[6]

பதாதிகளால்[தொகு]

கலப்பு வில்லை காலாட்படையாலும் சிரமமின்றி பிரயோகிக்க முடிந்தது. பாரம்பரிய கிரேக்க மற்றும் உரோமைப் பேரரசின் தரைப்படை வில்லாளிகள் கலப்பு வில்லை உபயோகித்தனர்.

கலப்பு வில்லின் நவீன பாரம்பரியங்கள்[தொகு]

துருக்கிய வில் [தொகு]

சீன வில் [தொகு]

மங்கோலிய வில் [தொகு]

அங்கேரிய வில் [தொகு]

கொரிய வில் [தொகு]

பாரசீக-பார்த்திய வில் [தொகு]

மேலும் பார்க்க [தொகு]

வில் கட்டமைப்பு நுட்பங்கள் [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. 1.0 1.1 Karpowicz., Adam. Ottoman Turkish bows, manufacture & design.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-9811372-0-9. http://www.ottoman-turkish-bows.com/. 
  2. A BRIEF HISTORICAL OVERVIEW OF HUNGARIAN ARCHERY, PART I. Chris Szabó
  3. 3.0 3.1 (1992) The Traditional Bowyers Bible Volume 1. The Lyons Press. ISBN 1-58574-085-3
  4. Tutankhamun: Anatomy of an Excavation.
  5. Shang Civilization.
  6. Maurice's Strategikon: Handbook of Byzantine Military Strategy.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலப்பு_வில்&oldid=3365668" இருந்து மீள்விக்கப்பட்டது