உள்ளடக்கத்துக்குச் செல்

கருமுக சில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருமுக சில்லை
Black-faced munia
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எசுடிரில்டிட்டே
பேரினம்:
இனம்:
உ. மொலுக்கா
இருசொற் பெயரீடு
உலோஞ்சுரா மொலுக்கா
(லின்னேயஸ், 1766)
வேறு பெயர்கள்

உலோசியா மொலுக்கா லின்னேயஸ், 1766

கருமுக சில்லை (Black-faced munia)(உலோஞ்சூரா மொலுக்கா) என்பது இந்தோனேசியா மற்றும் கிழக்கு திமோரில் காணப்படும் சிவப்பு குருவி சிற்றினமாகும். இது செயற்கை நிலப்பரப்புகள் (எ.கா. பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள்), காடு, புல்வெளி மற்றும் சவன்னா உள்ளிட்ட பல்வேறு வகையான வாழ்விடங்களில் காணப்படுகிறது. 1766-ல் சுவீடன் இயற்கை ஆர்வலர் கரோலஸ் லின்னேயஸ் தனது சிஸ்டமா நேச்சுரேயின் பன்னிரண்டாவது பதிப்பில் இதனை முதலில் விவரித்தார். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் இந்த பறவையின் நிலையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாக மதிப்பிட்டுள்ளது.

வகைப்பாட்டியல்

[தொகு]

1760ஆம் ஆண்டில், பிரெஞ்சு விலங்கியல் நிபுணர் மாதுரின் ஜாக் பிரிசன், மலுக்கு தீவுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியின் அடிப்படையில் தனது பறவையியல் நூலில் கருப்பு முகம் கொண்ட சிலை குறித்த விளக்கத்தைச் சேர்த்தார். இவர் பிரெஞ்சு பெயரை Le gros-bec de Moluques மற்றும் இலத்தீன் Coccothraustes Moluccensis ஆகியவற்றைப் பயன்படுத்தினார். பிரிசன் இலத்தீன் பெயர்களை உருவாக்கினாலும், இவை இருசொற் பெயரீடு முறைக்கு இணங்கவில்லை மற்றும் விலங்கியல் பெயரிடலுக்கான பன்னாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்படவும் இல்லை.[2] 1766ஆம் ஆண்டில் சுவீடன் இயற்கை ஆர்வலர் கரோலஸ் லின்னேயஸ் தனது சிஸ்டமா நேச்சுரேவை பன்னிரண்டாவது பதிப்பினைப் புதுப்பித்தபோது, பிரிசன் முன்பு விவரித்த 240 சிற்றினங்களைச் சேர்த்தார்.[2] இவற்றில் ஒன்று கருமுக சில்லை. லின்னேயஸ் இதுகுறித்து சுருக்கமான விளக்கத்தைச் சேர்த்தார். உலோக்சியா மொலுக்கா என்ற விலங்கியல் பெயரை உருவாக்கினார். இதற்கு பிரிசனின் ஆய்வினை மேற்கோள் காட்டினார். மொலுக்கா என்ற குறிப்பிட்ட பெயர் மலுக்கு தீவுகளைக் குறிக்கிறது.[3][4] 1832ஆம் ஆண்டில் இங்கிலாந்து இயற்கை ஆர்வலர் வில்லியம் என்றி சைக்சால் அறிமுகப்படுத்தப்பட்ட உலோஞ்சூரா பேரினத்தில் இந்த சிற்றினம் இப்போது வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேரினத்தின் கீழ் இரண்டு துணையினங்கள் உள்ளன.[5]

விளக்கம்

[தொகு]

கருமுக சில்லை, கருப்பு நிற முகம், தொண்டை மற்றும் மேல் மார்பகத்தைக் கொண்டுள்ளது. முதுகு மற்றும் பின்புறம் அடர் பழுப்பு நிறமாகவும், இறக்கைகள் மற்றும் வால் கருப்பு நிறமாகவும் இருக்கும். அடிப்பகுதி மற்றும் பிடரியில் கருப்பு புள்ளிகள் அல்லது வெள்ளை நிற பட்டைகள் இருக்கும். அலகு தடிமனாகவும் இரு வண்ணத்தில் காணப்படும் மேல் தாடை அடர் நிறத்திலும் கீழ்-தாடை நீல-சாம்பல் நிறத்திலும் கால்கள் கருமையாக இருக்கும்.

விநியோகம்

[தொகு]

கருமுகம் சில்லை இந்தோனேசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இதில் வாலேசியா தீவிலும் காணப்படும்.[5] இது கிழக்குத் திமோரிலும் உள்ளது.[1] இது விதைகளை உண்ணும் பறவை. புல்வெளிகளில் சிறிய மந்தைகளாகக் காணப்படுகிறது.

பாதுகாப்பு நிலை

[தொகு]

கருமுகம் சில்லை பரந்த வாழிட வரம்பைக் கொண்டுள்ளது. சில இடங்களில் அதிக எண்ணிக்கையிலும் பல இடங்களில் பொதுவானதாகவும் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தோனேசியாவில் இதன் எண்ணிக்கை மதிப்பீடு செய்யப்படவில்லை; ஆனால் மக்கள்தொகை போக்கு சீராக இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பறவைகள் அடையாளம் காணப்பட்ட சில சில அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. பன்னாடு இயற்கை பாதுகாப்புச் சங்கம் இதன் பாதுகாப்பு நிலையை "தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக" மதிப்பிட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 BirdLife International (2018). "Lonchura molucca". IUCN Red List of Threatened Species 2018: e.T22719815A132131811. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22719815A132131811.en. https://www.iucnredlist.org/species/22719815/132131811. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. 2.0 2.1 Joel Asaph Allen (1910). "Collation of Brisson's genera of birds with those of Linnaeus". Bulletin of the American Museum of Natural History 28: 317–335. 
  3. Jobling, J.A. (2018). del Hoyo, J.; Elliott, A.; Sargatal, J.; Christie, D.A.; de Juana, E. (eds.). "Key to Scientific Names in Ornithology". Handbook of the Birds of the World Alive. Lynx Edicions. பார்க்கப்பட்ட நாள் 4 May 2018.
  4. William Henry Sykes (1832). "Catalogue of birds of the raptorial and insessorial orders (systematically arranged,) observed in the Dukhun". Proceedings of the Zoological Society of London 2 (18): 77–99 [94]. https://biodiversitylibrary.org/page/12861692. 
  5. 5.0 5.1 "Waxbills, parrotfinches, munias, whydahs, Olive Warbler, accentors, pipits – IOC World Bird List". www.worldbirdnames.org. பார்க்கப்பட்ட நாள் 2023-01-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருமுக_சில்லை&oldid=3744205" இலிருந்து மீள்விக்கப்பட்டது