கனநீர் ஆலை, தால்செர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கனநீர் ஆலை, தால்செர் (Heavy Water Plant, Talcher) என்பது இந்திய அணுசக்தித் துறையின் கனநீர் ஆலைகளுள் ஒன்று. தால்செர், இந்தியாவில் உள்ள ஒரிசா மாநிலத்தின் புவனேசுவரில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு இந்திய கனநீர் வாரியம் ஒரிசாவின் முதல் கனநீர் ஆலையை இந்திய ரூபாய் 73.83 கோடி[1] முதலீட்டில் அமைத்தது.[2] இது அம்மோனியா-ஐதரசன் பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இரட்டை வெப்ப பதனிடும் செய்முறையில் செயல்படுவதாகும். உலகிலேயே இம்முறையில் செயல்படும் ஒரே கனநீர் ஆலை இதுவேயாகும். இத்திட்டப் பணிகள் 1972 ஆம் ஆண்டில் தொடங்கினாலும், கனநீர் உற்பத்தி 1985 ஆம் ஆண்டில் தான் துவங்கியது.[3] 1994 ஆம் ஆண்டு சில காரணங்களால் ஆலையின் பணிகள் தடைபட்டாலும், ஆலை மீண்டும் விரைவில் செயல்படத்துவங்கியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.dae.gov.in/heavywaterboard.org/docs/hwptalcher3.htm
  2. ^ http://heavywaterboard.org/htmldocs/general/about.asp
  3. ^ http://www.dae.gov.in/heavywaterboard.org/docs/hwptalcher1.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனநீர்_ஆலை,_தால்செர்&oldid=2743833" இருந்து மீள்விக்கப்பட்டது