கனநீர் ஆலை, தால்
Appearance
மகாராட்டிரத்தில் தால் என்ற இடத்தில் உள்ள கனநீர் ஆலை, இந்திய கனநீர் வாரியத்தால் இயக்கப்படும் ஏழு கனநீர் ஆலைகளுள் ஒன்று.[1]
தால் கனநீர் ஆலை மகாராட்டிரத்தில் உள்ள தால்-வைஷெட் கிராமத்தின் அருகாமையில் நிலைகொண்டுள்ளது. இவ்விடம் மும்பையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில், ரைகத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இரண்டாம் தலைமுறை வகையான இந்தியத் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, இத்திட்டப் பணிகள் 1982 ஆம் ஆண்டில் தொடங்கியது என்றாலும், கனநீர் உற்பத்தி 1985 ஆம் ஆண்டு முதல் வெகுசீக்கிரமாகவே துவங்கப்பெற்றது.[2]