உள்ளடக்கத்துக்குச் செல்

கசிமிர் பங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கசிமிர் பங்
பிறப்புகசிமிர் பங்
(1884-02-23)பெப்ரவரி 23, 1884
வொர்சோவ், கொன்கிறசு போலந்து
இறப்புநவம்பர் 19, 1967(1967-11-19) (அகவை 83)
அல்பேனி நியு யோர்க், ஐக்கிய அமெரிக்கா
குடியுரிமைபோலந்து
ஐக்கிய அமெரிக்கா
தேசியம்போல்ஸ்
துறைஉயிர் வேதியியலாளர்
பணியிடங்கள்பாஸ்டர் நிறுவனம்
லிஸ்டர் நிறுவனம்
மருத்துவ ஆராய்ச்சிக்கான பங் நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்பேர்ன் பல்கலைக்கழகம், சுவிச்சர்லாந்து
அறியப்படுவதுபோசனை ஆராய்ச்சி, வைட்டமின் கருத்துருவாக்கம்

கசிமிர் பங்(Kazimierz Funk) [1] பெப்ரவரி 23, 1884 – நவம்பர் 19, 1967[2]), பொதுவாக ஆங்கிலத்தில் Casimir Funk என மொழிவழிப்படுத்தப்பட்டு அழைக்கப்பட்ட போல்ஸ் நாட்டு உயிர் வேதியியலாளராவார்,[3].

அடைவுகள்[தொகு]

கிரிஸ்டியன் எய்க்மன் எழுதிய கட்டுரையான 'சிவப்பு அரிசியை உண்ட மக்கள் தனியே பால் பொருட்களை உண்ட மக்களை விட பெரிபெரிக்கு சகிப்புத் தன்மையை காட்டியதைக் குறுப்பிடும்' கட்டுரை ஒன்றை படித்த பின்னர் பங் அந்த கூறை வேறாக்குவதற்கு முயற்சித்து அதில் வெற்றியும் கண்டார். இதன் மூலம் அமைன் கூட்டத்தைக் கொண்ட பதார்த்தம் வைட்டாமின் எனப்பட்டது. பின்னர் அது வைட்டமின் B3 (நியாசின்) என அழைக்கப்பட்டது. ஆயினும் அவர் இது தயமின் (வைட்டமின்B1)ஆக இருக்கவேண்டுமென இவர் கருதினார். இது பெரி பெரி எதிர்ப்புக் காரணியாக கூறப்படுகின்றது. இவர் 1911இல் தனது முதலாவது ஆய்வுக் கட்டுரையான டைகைட்ரொபீனைல் அலனின் குறித்த கட்டுரையைப் பிரசுரித்தார். பங் வைட்டமின் B1 போல ஒன்றுக்கு மேற்பட்ட கூறுகள் காணப்படலாம் என நம்பினார். 1912இல் பங் அரச மருத்துவ ஆய்விதழுக்கு எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் குறைந்தது நான்கு விற்றமின்கள் இருக்கலாம் என முன்மொழிந்தார். அவை, பெரிபெரியைத் தடுப்பது, ஸ்கர்விநோயைத் தடுப்பது, பெல்லாக்ரா நோயைத் தடுப்பது, என்புருக்கி நோயைத் தடுப்பது எனக் காட்டினார். 1912இல் விற்றமின்கள் பற்றி நூல் ஒன்றை வெளியிட்டார்.[4]

ஏனைய நோய்களான என்புருக்கி,பெல்லாக்ரா, குளூட்டன் ஒவ்வாமை, ஸ்கர்வி என்பவையும் விற்றமின்களால் குணப்படுத்தக்கூடியவை எனும் எடுகோளை பங் முன்வைத்தார்.[5]

பெல்லாக்ரா பற்றிய ஆராச்சிகளை மேற்கொண்ட ஆரம்ப ஆய்வாளராக பங் கொள்ளப்படுகிறார். தானியங்களை இடிக்கும் முறை பெல்லாக்கிரா நோயை உண்டாக்குவதில் பாரிய பங்காளிப்புகளை ஆற்றுவதாக இவர் கருதினார். தானியங்களை இடிக்கும் முறையில் ஏற்படுத்தும் மாற்றம் இந்நோய்ப் பாதிப்பைத் தடுக்கும் என்பதாகக் கூறினார்.[6] ஆனால் இந்த விடயம் குறித்து அவரது இந்தக் கட்டுரையில் எந்தக் கவனத்தையும் யாரும் செலுத்தவில்லை.[7]

வைட்டமின்களில் எந்தவொரு நைதரசன் சேர்வையான அமைன் கூட்டமும் இல்லை என்பதல் அதன் ஆங்கிலப் பெயரில் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட வழக்கில் இறுதியில் இருந்த "e" அகற்றப்பட்டு "vitamin" என வழங்கப்பட்டது.

ஏனைய அவசியமான போசணைக் கூறுகளாக மற்றாஇய வைட்டமின்களான B1, B2, C, மற்றும் D ஆகியவதற்றை அறிவதக்கு இவரது கண்டுபிடிப்புகள் அடிகோலின.

1936இல் தயமினின் மூலக்கூற்றுக் கட்டமைப்பை தீர்மானித்தார். இதனை வேறாக்கிய முதல் நபர் இவராக இல்லாத போதிலும் இதன் கட்டமைப்பு இவரால் அமைக்கப்பட்டது.

பங் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இயக்குநீர், நீரிழிவு, வயிற்றுப்புண் புற்றுநோய் முதலிய துறைகள் இவற்றுள் முதன்மையானவை.

1940களில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பின்னர், வைத்தியா ஆராய்ச்சிகளுக்கான பங் நிறுவனத்தின் தலைவர் ஆனார். தனது இறுதி வருட கற்கைகளை உயிரியல் கட்டிகள் (புற்றுநோய்) பற்றிய கற்கைகளில் செலவிட்டார்.

பங் விருது[தொகு]

அமெரிக்க அறிவியல் மற்றும் கலைக்கான போளிஸ் நிறுவனம் வருடாந்தம் கசிமிர் பங் இயற்கை விஞ்ஞான விருதினை போளிஸ் அமெரிக்க அறிவியலாளர்களுக்கு வழங்கி வருகின்றது. இந்த விருதினை வென்ற பலர் நோபல் பரிசில் பெற்றவர்களாக உள்ளனர். ரொனால்ட்கோஃப்மான், அலக்சாண்டர் வொல்ஸன், கிலாரி கொப்ரொசிக்கி முதலானவர்களைக் குறிப்பிடலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Iłowiecki, Maciej (1981). Dzieje nauki polskiej (History of Polish Science). Warszawa: Wydawnictwo Interpress. p. 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-83-223-1876-8.
  2. (ஆங்கிலம்) Griminger P Casimir Funk A Biographical Sketch (1884–1967). Journal of Nutrition 1972 Sep;102(9):1105–13. PubMed. Available from: http://jn.nutrition.org/content/102/9/1105.full.pdf
  3. George Rosen, A History of Public Health, JHU Press (2015), p. 240
  4. Funk, Casimir (1914). Die Vitamine, ihre Bedeutung für die Physiologie und Pathologie: mit besonderer Berücksichtigung der Avitaminosen: (Beriberi, Skorbut, Pellagra, Rachitis); Anhang: Die Wachstumsubstanz und das Krebsproblem. Wiesbaden: J. F. Bergmann. பார்க்கப்பட்ட நாள் 23 October 2018 – via Internet Archive.. See also Funk, Casimir (1922). The Vitamines. Translated by Dubin, Harry E. from the Second German Edition. Baltimore: Williams & Wilkins. பார்க்கப்பட்ட நாள் 26 October 2018 – via Internet Archive.
  5. Casimir Funk, The etiology of the deficiency diseases. Beri-beri, polyneuritis in birds, epidemic dropsy, scurvy, experimental scurvy in animals, infantile scurvy, ship beri-beri, pellagra. In: Journal of State Medicine 20, 1912, pp. 341–68.
  6. Funk, C (1913). "Studies on pellagra. The influence of the milling of maize on the chemical composition and nutritive value of the meal". J Physiol 47 (4–5): 389–392. doi:10.1113/jphysiol.1913.sp001631. பப்மெட்:16993244. 
  7. Alfred, JAY Bollet (1992). "Politics and Pellagra: The Epidemic of Pellagra in the U.S. in the Early Twentieth Century" (PDF). The Yale Journal of Biology and Medicine 65 (3): 211–221. பப்மெட்:1285449. பப்மெட் சென்ட்ரல்:2589605. http://europepmc.org/articles/pmc2589605/pdf/yjbm00051-0058.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசிமிர்_பங்&oldid=2868613" இலிருந்து மீள்விக்கப்பட்டது