உள்ளடக்கத்துக்குச் செல்

என்புருக்கி நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என்புமெலிவு நோய்,
Rickets
தாழ் எலும்படர்த்தியும் வளைந்த தொடையெலும்பும் அமைந்த என்புருக்கியுள்ள இரண்டு அகவைக் குழந்தையின் X-கதிர்ப்படம்
பலுக்கல்
சிறப்புகுழந்தை மருத்துவ இயல், முடக்குவாதவியல், உணவூட்டவியல்
அறிகுறிகள்வளைந்த கால்கள், மட்டான வளர்ச்சி, என்புவலி, பெரிய நெற்றி, உறக்க இடர்[1][2][3]
சிக்கல்கள்எலும்பு நசிவுகள், தசைச் சுழிப்பு, மீக்கூனல் முதுகெலும்பு, அறிதிற ஊனம்[3]
வழமையான தொடக்கம்குழந்தைப்பருவம்[3]
காரணங்கள்போதுமான உயிர்ச்சத்து டி அல்லது கால்சியம் இல்லாத உணவு , மிகக் குறைந்த சூரிய ஒளி ஆட்பாடு, மிகைநிரப்பு உணவின்றி முலைப்பால் மட்டும் அருந்தல், வயிற்று நோய், சில மரபியற் சிக்கல்கள்[2][3][4]
நோயறிதல்குருதி ஓர்வுகள், X-கதிர்ப்படங்கள்[2]
ஒத்த நிலைமைகள்பங்கோனி நோய்த்தொகை, உயிர்ச்சத்து சி குறை நோய், உலோவே நோய்த்தொகை, எலும்புநலிவு[3]
தடுப்புமுலைப்பால் மட்டும் அருந்தும் குழந்தைகளுக்கு உயிர்ச்சத்து டி நிரன்புணவுகள் தரல்[5]
சிகிச்சைஉயிர்ச்சத்து டி கால்சியம் தரல்[2]
நிகழும் வீதம்ஓரளவு பரவலாக (நடுவண் கிழக்குப் பகுதி, ஆப்பிரிக்கா,ஆசியா)[4]
என்புமெலிவு நோய்
Rickets
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஉட்சுரப்பியல்
ஐ.சி.டி.-10E55.
ஐ.சி.டி.-9268
நோய்களின் தரவுத்தளம்9351
மெரிசின்பிளசு000344
ஈமெடிசின்ped/2014
பேசியண்ட் ஐ.இஎன்புருக்கி நோய்
ம.பா.தD012279

என்புமெலிவு நோய் (Rickets) என்பது குழந்தைகளில் ஏற்படும் எலும்பு நலிவு அல்லது மெலிவு நோய் ஆகும். இந்நோய் உணவுக் குறைபாடுகளாலோ மரபியற் சிக்கல்களாலோ உருவாகிறது.[2] அறிகுறிகளாக, வளைந்த அல்லது திருகிய கால்கள், மட்டான வளர்ச்சி, என்புவலி, பெரிய நெற்றி, உறக்க இடர் வாகியன் அமையும்.[2][3] சிக்கல்களாக, எலும்க் குலைவுகள், எலும்பு நசிவுகள், தசைச் சுழி(ரி)ப்பு, அல்லது மீக்கூனல் முதுகெலும்பு ஆகியன அமையும்.[2][3]

என்புருக்கி நோயின் மிகப்பொதுவான காரணமாக உயிர்ச்சத்து டி அமைந்தாலும் நோயை உருவாக்கும் மரபுப்பேறு வழியான மரபியல் வடிவங்களும் நிலவுவதுண்டு.[2] இது உயிர்ச்சத்து டி குறைந்த உணவை உண்பதாலும் சூரிய ஒளிபடாத கருப்புத் தோலாலும் டி உயிர்ச்சத்து மிகைநிரப்பின்றி முலைப்பால் அருந்துவதாலும் சில மரபியல் நிலைமைகளாலும் வயிற்று வலியாலும் ஏற்படுகிறது.[2][3] உணவில் போதுமான கால்சியமும் பாசுவரமும் இல்லாமையும் கூட நோயைத் தரும்.[4][5] வளர்ச்சித் தட்டுகளின் காலியப் போதாமை இயங்கமைப்பும் கூட நோயை உருவாக்கலாம்.[6] கால்சியக்குறைவையும் பாசுவரக்குறைவையும் பாசுவரநொதி உயர்வையும் கண்டறியும் குருதி ஓர்வுகளாலும் X-கதிர்ப்படங்களாலும் நோயறியப்படுகிறது.[2]

நோயைத் தவிர்க்க, முலைப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு உயிர்ச்சத்து டி மிகைநிரப்பிகள் தரப்படுகின்றன.[5] Otherwise, treatment depends on the underlying cause.[2] நோய உயிர்ச்சத்து டியால் ஏற்பட்டால், உயிர்ச்சத்து டியும் கால்சியமும் தரப்படுகின்றன.[2] இந்நிலையில் சில வாரங்களில் நோய் தணிந்து மேம்படுதலைக் காணலாம்.[2] இயல்பாக எலும்புக் குலைவுகள் காலத்தால் சீரடையலாம்.[5] சிலவேளைகளில் எலும்புக் குலைவைச் சரிசெய்ய அறுவை முறை கையாளப்படுவதுண்டு.[7][3] Genetic forms of the disease typically require specialized treatment.[5]

நடுவண் கிழக்குப் பகுதியிலும் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் என்புருக்கி நோய் ஓரளவு பரவலாக நிலவுகிறது.[4] சில சிறுபான்மைக் குழுக்களைத்தவிர, ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இந்நோய் பேரள்வில் நிலவுவதில்லை.[3][4] இது 3 முதல் 8 அகவை உள்ள சிறுவர்களுக்கே வருகிறது.[3][4] நோயின் வீதம் ஆண்களிலும் பெண்களிலும் சமமாகவே நிலவுகிறது.[3] இந்நோயின் தாக்கம் கிபி முதல் நுற்றாண்டில் இருந்துவருவதாக அறியப்பட்டுள்ளது;[8] இது உரோமப் பேரரசில் மிகப்பரவலாக நிலவியுள்ளது.[9] இது 20 ஆம் நூற்றாண்டில் பரவலாக அமைகிறது.[8] தொடக்கநிலையில் இதற்கு காடுலிவர் எண்ணெய்யால் மருத்துவம் செய்யப்பட்டது.[8]


சொற்பிறப்பியல்

[தொகு]

ரிக்கெட்ஸ்” என்ற சொல் பழங்கால ஆங்கில வார்த்தையான ‘ரிக்கென்’ என்பதில் இருந்து வந்திருக்கக் கூடும். இதன் திருகல் என்பதாகும். பல பெரிய ஆங்கில அகராதிகள் சொல்லின் தோற்றம் தெரியவில்லை எனக் கூறுகின்றன. இதன் ஒத்த ஒலி அமைப்பு இருக்கும் காரணத்தினால் கிரேக்கத்தில் இருந்து வந்த வார்த்தையான “ராக்கிட்டிஸ் (rachitis)” }},[10] (ραχίτις, இதன் பொருள், முதுகெலும்பு சார்) என்ற சொல்லே ரிக்கெட்ஸ் என என்புருக்கி நோய்க்குச் சரியான ஆங்கில அறிவியல் கலைச்சொல்லாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அவுபிரேயின் குறுகிய வாழ்க்கைகள் எனும் நூலில் பின்வரும் மேற்கோள் rachitis எனும் கிரேக்கச் சொல்லுக்கும் என்புருக்கி நோயைக் குறிக்கும் சொல்லூக்கும் ஏதும் தொடர்பில்லை என்பது விளங்குகிறது:

" சிறுவரில் ஏற்படும் வீங்கிய தலைகள், குறுகிய கால்கள் கொண்ட நோய்க்கு 1620 அளவில் நியூபெரியே நகர இரிக்கெட்சு எனும் உடலியல் மறுத்துவர் சிறந்த மருத்துவத்தைச் செய்துள்ளார்: அப்போது இந்த நோய் புதியது என்பதால் இதற்கு பெயரேதும் வழங்கவில்லை; இந்நோயைத் தீர்ப்பதில் இவர் வல்லுனராக விளங்கியமையால் இந்நோய்க்கு இரிக்கெட்சு எனப் பெயரிடப்பட்டுள்ளது: அரசர் தந்த கெடு அல்லது தீம்பு அரசர் தொடுகையில் தீர்தல் போல, இப்போது பல அகரமுதலிகள் வரலாற்றின் தேடலில் சோர்ந்துபோய் முதுகந்தண்டு எனப் பொருள்படும் PaXis என்னும் கிரேக்கச் சொல்லில் வேரைத் தேடும் விளையாட்டை மேற்கொண்டுள்ளது புலனாகிறது."

நோய்க்குறிகளும் அறிகுறிகளும்

[தொகு]
எலும்பு கனிமம் குறைவாக உள்ள மற்றும் தெளிவான சப்பைக்கால் (தொடை எலும்பு வளைதல்) உடைய என்புருக்கி நோயினால் தாக்கப்பட்டுள்ள ஒரு இரண்டு வயதுடைய குழந்தையின் கதிர் வரைபடம்
மணிக்கட்டு அகற்சி

உணவுக்குறைபாட்டு என்புருக்கியின் அறிகுறிகளாக, எலும்பு மென்மையாதல், எலும்பு முறிவுக்காட்படுதல், குறிப்பாக பச்சைக்கொம்பு முறிவு ஆகியன அமைகின்றன.[11] குழந்தைகளுக்கான தொடக்கநிலை எலும்பு குலைவுகளாக, மென்மை, மெலிந்த (தடிப்பில் குறைந்த) மண்டையோட்டு எலும்புகள் உருவாதல் ,[12][13] (இது என்புருக்கிக்கான முதல் அறிகுறி), மண்டையோட்டு வட்ட மேடாக்கம் நிலவல், உச்சிக்குழிகள் மெதுவாக இணைந்துகூடல் ஆகியன அமையும்.

இளங்குழந்தைகளில் திருகிய அல்லது வளைந்த கால்கள், தடித்த கணுக்கால்களும் மணிக்கட்டுகளும் அமையலாம்;[14] வளர்சிறாரில் தட்டொலி முட்டி அமையலாம்.[11] கூனல் வளைவு அல்லது அடிமுதுகு கூனல் அமையலாம். இடுப்பெலும்புகள் குலைவுறலாம். கணுக்கள் தடித்து விலாக்குருத்து மூட்டுகள் உருவாதலால் மெலிவெலும்புமாலை ஏற்படலாம். இது ஒவ்வொரு விலாவெலும்பு நடுவிலும் உடலின் இருபக்கமும் புடைப்பு எழுவதால் மாலைபோல தோன்றும் ஆரிசன் காடி உருவாகிப் புறாக்கூட்டு மார்புக் குலைவு[11] உருவாகலாம்.

குருதியில் கால்சியம் குறைந்தால் வரும் கால்சியக்குறைவு நோயில் கட்டுபாடிலாமல் ஏற்படும் தசையிழுப்பு உள்ள நரப்பிசிவு(tetany) நோய் ஏற்படலாம். மேலும், பற்சிக்கல்களும் ஏற்படலாம்.[11]

என்புருக்கி முன்னேறி முதிர்ந்த நோயாளியின் X-கதிர்ப்படங்கள் சிறப்பாக, திருகிய அல்லது வளைந்த கால்கள் (கால் எலும்புகள் வெளியே துருத்தியபடி வளைதல்), உருக்குலைத மார்பு, காப்புட் நாற்கரம் எனப்படும் சதுரத் தலை தோற்ற மண்டையோடு மாற்றங்கள் ஆகியவற்றைக் காட்டும்.[15] மருத்துவம் மேற்கொள்ளப்படவில்லையெனில் இந்த குறைபாடுகள் முதிரகவையிலும் கூட தொடரலாம்.நீண்ட காலத் தாக்கங்களில் பெரிய எலும்புகள் வடிவமிழத்தல் அல்லது நிலையாக வளைந்திருத்தல் முதுகுக் கூனல் ஆகியவை அடங்கும்.[16]

நோய்க்காரணம்

[தொகு]

குழந்தை பிறப்புக்கு முன்பும் பின்பும் கூடுதலாக எலும்பு நோய்கள் தாக்கம் ஏர்படுவதற்கு தாய்வழிக் குறைபாடுகளே காரணமாக உள்ளன.[17][18] பிறப்புவழி என்புருக்கி நோய் தோன்றுவதற்கான முதன்மைக் காணமாக, தாயின் குருதிய்ல் அமைந்த டி வகை உயிர்ச்சத்து குறைபாடே அமைந்து அது குழந்தைக்கும் பகிர்வாதலேயாகும்.[18] உயிர்ச்சத்து டி எலும்பு கனிமஉறுவதற்குப் போதுமான ஊனீர்க் கால்சியம், பாசுவர மட்டங்களை உறுதிப்படுத்துகிறது.[19] பிறப்புவழி என்புருக்கி நோய் தாயின் பிறநோய்களாலும் ஏற்படலாம். இவற்றில், கடும் எலும்புமென்மைநோயும், நோயாற்றப்படாத வயிற்றறை நோயும், உறிஞ்சுகோளாறு, சூல்வலிப்பு(கருச்சன்னி) முதிரா பிறப்பு ஆகியவை அடங்கும்.[17] சிறுவருக்கு வரும் என்புருக்கி நோயும் அகவைமுதிர்ந்தவருக்கு வரும் எலும்பு நொறுங்கலைத் த்ரும் எலும்புப்புரை நோயும் ஒத்தனவாகும். பிறப்புமுன் கவனிப்பில் உயிர்ச்சத்து மட்டக் கண்கானிப்பும் குறைபாடுகளை மிகைநிரப்பலும் உள்ளடங்கும்.[20]

முலைப்பால் மட்டுமே அருந்து குழந்தைகளுக்கு என்புருக்கியைத் தவிர்க்க,உயிர்ச்சத்து டி மிகைநிரப்பாக்கமோ அல்லது கூடுதலான நேரம் சூரிய ஒளிக்கு ஆட்படுத்தலோ தேவைப்படுகிறது.[21]

நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் போன்ற வெப்ப மண்டல நாடுகளில், இயல்பான சூரிய ஒளி ஆட்பாட்டால் போதுமான அக உயிர்ச்சத்து டி அமைகிறது. என்றாலும், இந்நோய் இந்நாட்டு முதிர்குழந்தைக்களுக்கும் சிறுவருக்கும் ஏற்படுகிறது. பெரும்பாலும் இந்நிலை முதன்மையாக, கூலஞ் சார்ந்த உணவால் அதன் தாழ்கால்சிய உள்ளடக்கத்தால் அமைகிறது.[22]

பரவும் புறநிலைமைகள்

[தொகு]

என்புமெலிவு நோய் தாக்கக் கூடிய உயரிடர் வாய்ப்பு உள்ளவர்கள்:

  • சூரிய ஒளிக்கு ஆட்படாத தாயார்களிடமிருந்து தாய்பால் குடிக்கும் குழந்தைகள்
  • சூரிய ஒளிக்கு ஆட்படாத பால்குடிக்கும் குழந்தைகள்
  • சூரிய ஒளிக்குச் சிறிதள்வே ஆட்பட்ட பால்குடிக்கும் குழந்தைகள்
  • வளரிளம் பருவக் குமரர்கள்[23]
  • உணவில் போதுமான உயிர்ச்சத்து டி அல்லது கால்சியச் சத்து இல்லாத குழந்தைகள்
  • பால்மப்பொருள் ஒவ்வாமையுள்ள குழந்தைகள்

குழந்தைகளின் எலும்பை மென்மையாக்கும் பாசுவரக்குறை நோய், பாசுவேற்றுக்குறை நோய் ஆகியன குழந்தைகளுக்கு என்புருக்கி நோயை உண்டாக்குமயூயரிடர் உள்ளது.[24]

எலும்புகளின் கால்சியம் ஏற்பை சுட்டிரான்சியம் கட்டுபடுத்துகிறது. எனவே, உயர் உணவளவை உட்கொள்ளும்போது கிடைக்கும் சுட்டிரான்சியம் என்புருக்கி நோய் தூண்டும் செயலை மேற்கொள்கிறது.

சூரிய ஒளி

[தொகு]

சூரிய ஒளி, குறிப்பாக புற ஊதா ஒளி, தோல் உயிர்க்கலங்களை உயிர்ச்சத்து டி யை செயல்முடக்கநிலையில் இருந்து செய்லூக்கநிலைக்கு மாற்றச் செய்கிறது . உயிர்ச்சத்து டயில்லாதநிலையில், உணவில் உள்ள கால்சிய்யம் சரிவர உறிஞ்சப்படுவதில்லை; இதனால், கால்சியக்குறை ஏற்படுவதால், எலும்பு, பல் குலைவுகளையும் உயர்மனக்கிளர்ச்சி ஒத்த நரம்பிழைய நோய் அறிகுறிகளையும் உருவாக்குகிறது. உயிர்சத்து டி வெண்ணெய், முட்டை, மீன் ஈரல் எண்ணெய், margarine, தரமூட்டப்பால் பழச்சாறு, அகாரிக்கசு பைசுப்போரசு, சீட்டேக் காளான்கள், டூமா, எர்ரிங்கு, சாலமன் போன்ற எண்ணெய் செறிமீன்கள் ஆகியவற்றில் அமைந்துள்ளது. ஓர் அரிய X-ஓங்கலான வடிவம் உருவாகி உயிர்ச்சத்து டி தடுப்பு என்புருக்கி அல்லது X-ஓங்கலான பாசுவேற்ருக்குறையை உருவாக்குகிறது.[சான்று தேவை]

தோல்நிறக் கோட்பாடு

[தொகு]

உயிர்ச்சத்து டி3 குறைபாட்டல் என்புருக்கி நோய் ஏற்படுகிறது. மாந்தத் தோல்நிறத்துக்கும் அகலாங்குக்கும் உள்ள ஒட்டுறவே சூரியப் புற உதா கதிர்வீச்சை வேறுபாடுள்ள மட்டங்களில் தேர்ந்தெடுக்க வைக்கிறது எனக் கருதப்படுகிறது. வடக்கு அகலாங்குகளில் வெளிர்தோல் தேர்வு, புற ஊதாக் கதிர்கள் 7-டிகைதரோகொலசுட்டிராலில் இருந்து உயிர்ச்சத்து டி யை உருவாக்குகின்றன. மாறாக, புவி நடுவரைக்கு அருகில் உள்ள அகல்லாங்குகளில் குருநிறத் தேர்வு, பெரும்பாலான புற ஊதாக்கதிர்களைத் தடுத்து உயிர்ச்சத்து டி மட்டங்களை நச்சுற்ற அதன் பகுதிகளில் இருந்தும் தோல்புற்றில் இருந்தும் காப்பாற்றுகிறது.[25]

நோயறிதல்

[தொகு]
என்புருக்கி நோய் மாற்றங்களைக் காத்தும் மணிக்கட்டு X-கதிர்ப்படங்கள். முதன்மையாக கிண்ணக்குழிவாக்கம் புலப்படுகிறது.
என்புருக்கி நோய் மாற்றங்களுள்ள மார்பு X-கதிர்ப்படம். இந்த மாற்றங்கள் மாலைமணி வடிவம் எனப்படுகிறது.

என்புருக்கி நோயைப் பின்வரும் முறைகளால்ஆறியலாம்:

  • குருதி ஓர்வுகள்:[26]
    • ஊனீர் கால்சியம் ஓர்வு. இது எலும்பின் உருவளவு அல்லது கட்டமைப்பு மாற்றங்களால் கால்சியக்குறைவையும் பாசுவரக்குறைவையும் ஊனீர் காரப் பாசுவரநொதி உயர்வையும் காட்டும். இது பெரியதாகிய கணுக்களையும் மூட்டுகளையும் காட்டும்.
  • எலும்படர்த் தி அலகீடும் (DXA) எடுக்கப்படும்.[26]
  • தமனி சார்ந்த குருதி வளிமங்கள், வளர்சிதைமாற்ற அமிலத்தன்மையைக் காட்டலாம்.
  • எலும்பு இழைய(திசு) ஓர்வு அரிதாகவே செய்யப்படும், ஆனால் இது என்புருக்கி நோயை உறுதிப்படுத்தும்.
  • கனிமமுறாத துணை என்புமுகை இடைவளரி கால்சியமேற்றக் களங்களின் அகற்சியைக் வீழல்வகை கதிர்ப்படங்கள் காட்டும்;

இவற்றில் தொடர்ந்து வளரும் எடையைத் தாங்கும் இடைவளரிகளில் உள்ள கிண்னக்குழிவையும் fraying, splaying ஆகியவற்றையும் கூட காணலாம்.[27] இந்த மாற்றங்கள் வேகமான வளர்ச்சிக் களங்களில் காணப்படும். குறிப்பாக, அண்மியுள்ள humerusகளிலும் எட்டியுள்ள ஆர எலும்புகளிலும் எட்டியுள்ள தொடையெலும்புகளிலும் அண்மிய, எட்டியுள்ள கால் முன்னெலும்புகளிலும் காணப்படும்மெனவே, என்புருக்கி நோய்க்கான ஆய்வுகள்முட்டி, மணிக்கட்டு, கணுக்கால் ஆகியவற்றின் முன்பின் கதிர்ப்பங்களை எடுத்து மேற்கொள்ளப்படும்.[27]

வகைமைகள்

[தொகு]
  • உயிர்ச்சத்து D தொடர்புள்ள என்புருக்கி நோய்கள்[28]
    • உயிர்ச்சத்து D குறைபாடு
    • உயிர்ச்சத்து D சார்ந்த என்புருக்கி (VDDR)[29]
      • வகைமை 1: செயலூக்கம் போதாமை
        • VDDR1A: 25- ஐதராக்சி உயிர்ச்சத்து D3 1-ஆல்பா- ஐதராக்சிநொதி குறைபாடு
        • VDDR1B: CYP2R1 குறைபாடு
      • வகைமை 2: கால்சிட்ரோல் தடுப்பு
        • VDDR2A: கால்சிட்ரோல் ஏற்புத் திரிபு( சடுதிமாற்றம்)
        • VDDR2B: அறியப்படாத உட்கருவன் விலாக்கருபுரதம் குறிகை மரபன்மாற்றத்தைக் குறுக்கிடல்
      • Type 3: மீமிகு செயலிழப்பு (CYP3A4 திரிபு(சடுதிமாற்றம்), ஓங்கலானது)
  • கால்சியக்குறை தொடர்புள்ள என்புருக்கி நோய்கள்
    • கால்சியக்குறை
    • நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு (CKD-BMD)
  • பாசுவரக்குறை தொடர்புள்ள என்புருக்கி நோய்கள்
    • பிறப்புவழி வருவன
      • X பிணைந்த பாசுவரக்குறை/உயிர்ச்சத்து D தடுப்பு என்புருக்கி நோய்கள்[28]
      • நிகரிணைக் குறுமவக ஓங்கல் பாசுவரக்குறை என்புருக்கி நோய்கள் (ADHR)
      • நிகரிணைக் குறுமவக ஒடுங்கல் பாசுவரக்குறை என்புருக்கி நோய்கள் (ARHR)[30]
    • பாசுவரக்குறை ( உறிஞ்சவியலாமையோடு இணைந்து)
    • பங்கோனி நோய்த்தொகை
  • பிற நோய்களோடு இணைந்து வருவன
    • புற்றுத் தூண்டல் எலும்புமெலிவு
    • மெக்கியூன் - ஆல்பிரைட் நோய்த்தொகை
    • புறத்தோல் நெவசு நோய்த்தொகை
    • டென்ட்டு நோய்

வேறுபாட்டு முறையில் நோயறிதல்

[தொகு]

எலும்புக் குலைவுகளைப் பொறுத்தவரையில் மரபியல் என்புநோய் எனப்படும் என்புக்குருத்து கணிகக்குறைமை அறிகுறிகள் என்புருக்கிக்கான மருத்துவமனைக் காட்சியைப் போலி செய்கின்றன .[31]ஊனீர் கால்சியம், பாசுவேற்று, கார பாசுவரநொதி ஆய்வக முடிவுகளும் கதிர்ப்படக் காட்சி ஆய்வுகளும் நன்கு வேறுப்படுத்தும் முத்ன்மைக் காரணிகளாகும். பிளவுன்ட்டு நோய் ஆய்வும் ஒரு சிறந்த வேறுபாட்ட்டு ஆய்வுமுறையாகும். ஏனெனில், இது என்புருக்கியொத்த முட்டிக் குலைவுகளை உருவாக்குகிறது. குறிப்பாக, வளைகால்கள் அல்லது தட்டைக்(சப்பைக்)கால்களை உருவாக்குகிறது. என்புருக்கியுள்ள குழந்தைகளில் எலும்புச் சிதைவு அல்லது நசிவு அமைகிறது. இது சிலவேளிகலில் குழந்தையைத் தவராக பயன்கொள்ளும் முறைபாடுகளுக்கு வழிவகுக்கிறது. தாழ்வான ஊட்டச்சத்தும் உயிர்ச்சத்து டி மிகைநிரப்பு உணவு இன்மையும் மிதவெப்ப மண்டலத்து இளையுதிர்காலத்தில் கருப்பு தாயரால் பாலூட்டும் குழந்தைகளில் பரவலாக காணப்படுகின்றன.[32]ஒரே சூரிய ஒளி அளவுக்கு கருநிற மக்க வெளிர்நிற மக்கலாஇ விட குறைவான உயிர்ச்சத்து டி அள்வே பெறுகின்றனர்.[33]

மருத்துவ முறைகள்

[தொகு]

உணவும் சூரிய ஒளியும்

[தொகு]
கோலேகால்சிபெரால் (D3)
எர்கோகால்சிபெரால் (D2)

நோய் தீர்ப்பதற்கான மருத்துவமாக, கால்சியம், உயிஉர்ச்சத்து டி, பாசுவேற்றுகள் அளவைக் கூட்டி, புற ஊதா B ஒளிக்கு (இது உச்சிநேரச் சூரிய ஒளிவழி கிடைக்கும்) ஆட்படுத்தி, மேலும் உயிர்ச்சத்து டி கிடைக்கிற காடுலிவெர் எண்ணெய்யையும் ஆலிபட்லிவெர் எண்ணெய்யையும் எர்கோசுட்டிரால் எண்ணெய்யையும் உட்கொள்ள செய்யலாம்.[34] ஒவ்வொரு நாளும் போதுமான அளவு பி வகைச் சூரிய ஒளிக்கு ஆட்படுத்துவதும் போதுமான அள்வுக்கு உணவில் கால்சியம், பாசுவரத்தைச் சேர்த்துகொள்லுவதும் என்புருக்கி நோயைத் தவிர்க்கும். கரிய தோல் உடைய குழந்தைகள் அதிக நேரம் புற ஊதாக்கதிருக்கு ஆட்படச் செய்ய வேண்டும். புற ஊதாக்கதிர் பி வகை ஒளியலை மருத்துவ முறைகளும் மருந்துகள் வழியாக உயிர்ச்சத்து டி யை மாற்றீடு செய்தலும் என்புருக்கி நோயைக் குணப்படுத்துவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது..[8]

குழந்தைகளுக்கும் சிறுவருக்கும் டி வகை உயிர்ச்சத்தின் 400 பன்னாட்டு அலகுகள் (IU) பரிந்துரைக்கப்படுகின்றன. போதுமான அளவு டி உயிர்ச்சத்து கிடைக்காத சிறுவருக்கு என்புருக்கி நோய் இடர்வாய்ப்பு கூடுகிறது. எலும்புச் சுண்ணமாக்கத்துக்கும் தைப் பேணுதலுக்கும் வேண்டிய கால்சியத்தை உட்கொள்ளுதலைச் சமன்செய்ய டி வகை உயிர்ச்சத்து இன்றியமையாதது.[35]

மிகைநிரப்பு உணவு சேர்த்தல்

[தொகு]

போதுமான டி உயிர்ச்சத்தை மிகைநிரப்பு உணவு வழியாகவோ சூரிய ஒளிக்கு ஆட்படுத்துவதாலோ அடையலாம்முயிர்சத்து டி3 (கோலேகால்சிபெரால்) பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இது மட்டுமே D2 ஐ விட உடனே தன்மயமாகிறது. பெரும்பாலான தோலியல் வல்லுனர்கள் சூரிய ஒளிக்கு மாற்றாக, உயிர்ச்சத்து டி யை மிகைநிரப்பாகத் தருவதையே பரிந்துறைக்கின்றனர். ஏனெனில் சூரிய ஒளிக்கு ஆட்படும்போது நிகழும் காப்பற்ற புற ஊதாக்கதிர் ஆட்பாடு தோல் புற்று இடர் வாய்ப்பைக் கூட்டிவிடுகிறது. முழு உடலைச் சூரிய ஒளிக்கு ஆட்படுத்தும்போது உருவாகும் அகநிலை உயிர்சத்து டி ஆக்கம் தோராயமாக ஒஉருநாளுக் கு 250 நுண்கிராம் (µg) (10,000 IU)ஆகும்.[36]

அமெரிக்கக் குழந்தை மருத்துவக் கல்விக்கழகத்தின் கூற்றுப்படி, முலைப்பால் மட்டுமே அருந்தும் குழந்தைகள் உட்பட்ட குழவியருக்கு, அவர்கள் குறைந்தது 17 US fluid ounces (500 ml) அளவுக்கு உயிர்ச்சத்து டி உறுதிசெய்யப்பட்ட பாலை ஒரு நாளில் குடிக்கத் தலைப்படும் காலம் வரையில் உயிர்ச்சத்து டி மிகைநிரப்பு உணவு தேவையாகும்.[37]

இந்த பரிந்துரைக்கு அப்பால், ஓர் அண்மைய ஆய்வு (கோக்கிரேன் நிறுவன முறைப்பட்ட மீள்பார்வை) உயிர்ச்சத்து டி யுடன் காலசியமும் சேர்த்து மிகைந்ரப்பாகத் தருவது சிறுவர்களின் ஊட்டவகை என்புருக்கி நோயைத் தீர்ப்பதில் மேம்பாடு காணப்படுவதாகக் கூறுகிறது.[38]

அறுவை

[தொகு]

சப்பைக்கால், இடிப்புக்கால் போன்ற முட்டியருகமைந்த கடும் நாட்பட்ட குளைவுகளைச் சரிசெய்ய அவ்வப்போது அறுவை மருத்துவம் தேவைப்படலாம். மெலிவெலும்புக் குலைவுகளை எலும்புநீக்கல் அல்லது வளர்ச்சி வழிகாட்டு அறுவை வழியாக சரிசெய்யலாம். வளர்ச்சி வழிகாட்டு அறுவை பேரளவில் எலும்புநீக்கல் அறுவைகளுக்குப் பதிலீடாக அமைந்துவருகிறது. என்புருக்கியுள்ள சிறுவர்களில் நிகழ்த்தும் வளர்ச்சி வழிகாட்டு அறுவையின் வெற்றிகள் நிறவளிக்கின்றனவாக அமைகின்றன. எலும்புநீக்கல் அறுவை கடும்மூட்டுக்குலைவை உடனடியாகத் திருத்த, வளர்ச்சி வழிகாட்டு அறுவை அடிப்படியாக திருத்துகிறது.[7]

குழந்தைகளை தவறாகப் பயன்படுத்துதலும் என்புமெலிவு நோயும்

[தொகு]

ரிக்கெட்ஸ் vs அப்யூஸ் : எ நேஷனல் அண்ட் இண்டர்நேஷனல் எபிடெமிக் இணைய தளத்தில் விவரிக்கப்பட்டுள்ளதைப் போல என்புருக்கி நோயின் அறிகுறிகள் (பிறப்பிலிருந்து வந்தவையும் உட்பட) குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துதல் முறைபாடுகள் எழ வாய்ப்பு தருகின்றன.

பரவல்

[தொகு]

வளர்ந்த நாடுகளில், என்புருக்கி மிக அருகிய நோயாகும்[39] 2,00,000 பேரில் ஒருவருக்கு இது வருகிறது. அண்மையில், உயிர்ச்சத்து டி ஊட்டப்படாத சிறுவருக்கு என்புருக்கி வருவது தெரியவந்துள்ளது.[40]

இங்கிலாந்தில் 2013/2014 ஆம் ஆண்டில் 700 பேருக்கும் குறைவாகவே என்புருக்கி நோய் வந்துள்ளது.[41] ஆனால், 2019 இல் இதுவரை 50 ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத அளவுக்கு என்புருக்கி நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.[42] என்புருக்கி நோய் ஓரளவு பரவலாக நடுவண் கிழக்குப் பகுதியிலும் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் ஏற்படுகிறது.[4]


வரலாறு

[தொகு]
என்புருக்கி நோயுள்ள குழந்தையின் எலும்புக் கூடு, 1881

மருத்துவ முறைமையியல் பள்ளியைச் சார்ந்த எபிசெசு நகரத்து சொரானசு எனும் கிரேக்க மருத்துவர் அலெக்சாந்திரியாவிலும் உரோம் நகரிலும் தன் பணியைச் செய்தபோது, கிபி முதலாம்,ஐரண்டாம் நூற்றாண்டிலேயே, குழந்தைகளுக்கு எலும்புக் குலைவுகல் ஏர்படுதலை அறிவித்துள்ளார்ரென்றாலும் 1645 வரை என்புருக்கு ஒரு மருத்துவச் சிக்கலான நிலைமையாக வரையறுக்கப்படவில்லை. அந்த ஆன்டில்தான் தானியேல் விசுலெர் எனும் ஆங்கிலேய மருத்துவர் இந்நோயின் மிக முதைய விவரிப்பை தந்துள்ளார். பிரான்சிசு கிளிசன் எனும் மருத்துவர் 1650 இல் என்புருக்கி நோய் பற்றிய நூலொன்றை முதலில் கேம்பிரிட்ஜ் காலசு கல்லூரியில் வெளியிட்டுள்ளார்;[43]இவரே மேலும், தோர்செட், சோமர்செட் கவுன்ட்டிகளில் இந்நோய் முப்பதாண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகவும் கூறியுள்ளார்.[44]செருமானியக் குழந்தை மருத்துவர் 1918-1919 இலையுதிர்காலத்தில் வெற்றிகரமாகப் புற ஊதாக்கதிர் விளக்குகளைக் கொண்டு என்புருக்கி நோய்க்கு மருத்துவம் செய்யலாம் எனச் செயல்முறை விளக்கம் ஒன்றை நிகழ்த்திக் காட்டினார். என்புருக்கி நோய் உருவாக்கத்தில் உணவின் பங்களிப்பையும் விளக்கினார்.[45][46] இதை 1918 இலும் 1920 இலும் எடுவார்டு மிலான்பை தீர்த்துள்ளார்.[8]உணவு, பிற கரிம உயிர்ப்பொருட்களின் உயிர்ச்சத்து டி மதிப்பை, 1923 இல் காரி சுட்டீன்பாக் எனும் அமெரிக்க மருத்துவர் புற ஊதக்கதிர் வழியாக ஒளிர்வூட்டலால் உயர்த்தலாம் எனச் செயல்விளக்கத்தால் நிறுவினார். இந்தச் சுட்டீன்பாக் ஒளிர்வூட்டல் நுட்பம் உணவுப்பொருட்களின் உயிர்ச்சத்து டி யை உயர்த்த, குறிப்பாக பாலின் தரமுயர்த்தப் பயன்படுத்தப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் 1945 அளவில் எஉபுருக்கி நோயே இல்லாமல் ஒழிக்கப்பட்டது.[சான்று தேவை]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rickets". Lancet 383 (9929): 1665–1676. May 2014. doi:10.1016/S0140-6736(13)61650-5. பப்மெட்:24412049. 
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 "Rickets". Genetic and Rare Diseases Information Center (GARD) – an NCATS Program (in ஆங்கிலம்). 2013. பார்க்கப்பட்ட நாள் 19 December 2017.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 "Rickets, Vitamin D Deficiency". NORD (National Organization for Rare Disorders). 2005. பார்க்கப்பட்ட நாள் 19 December 2017.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 "Nutritional rickets around the world: an update". Paediatrics and International Child Health 37 (2): 84–98. May 2017. doi:10.1080/20469047.2016.1248170. பப்மெட்:27922335. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 "Rickets - OrthoInfo - AAOS". September 2010. பார்க்கப்பட்ட நாள் 19 December 2017.
  6. Florin T, Ludwig S, Aronson PL, Werner HC (2011). Netter's Pediatrics E-Book (in ஆங்கிலம்). Elsevier Health Sciences. p. 430. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1455710645.
  7. 7.0 7.1 "Growth Modulation for Knee Coronal Plane Deformities in Children With Nutritional Rickets: A Prospective Series With Treatment Algorithm". Journal of the American Academy of Orthopaedic Surgeons. Global Research & Reviews 4 (1): e19.00009. January 2020. doi:10.5435/JAAOSGlobal-D-19-00009. பப்மெட்:32159063. 
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 "Vitamin D, cod-liver oil, sunlight, and rickets: a historical perspective". Pediatrics 112 (2): e132–e135. August 2003. doi:10.1542/peds.112.2.e132. பப்மெட்:12897318. 
  9. Brown M (2018-08-19). "Evidence in the bones reveals rickets in Roman times". The Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-20.
  10. "Greek Word Study Tool".
  11. 11.0 11.1 11.2 11.3 "Medical News – Symptoms of Rickets". March 2010.
  12. "Vitamin D supplementation in pregnancy: a systematic review". Health Technology Assessment 18 (45): 1–190. July 2014. doi:10.3310/hta18450. பப்மெட்:25025896. 
  13. "Nutritional rickets around the world". The Journal of Steroid Biochemistry and Molecular Biology 136: 201–206. July 2013. doi:10.1016/j.jsbmb.2012.11.018. பப்மெட்:23220549. 
  14. "Mayo Clinic – Signs and Symptoms of Rickets".
  15. "caput quadratum". TheFreeDictionary.com.
  16. "Rickets before the discovery of vitamin D". BoneKEy Reports 3: 478. January 2014. doi:10.1038/bonekey.2013.212. பப்மெட்:24466409. 
  17. 17.0 17.1 "The Return of Congenital Rickets, Are We Missing Occult Cases?". Calcified Tissue International 99 (3): 227–236. September 2016. doi:10.1007/s00223-016-0146-2. பப்மெட்:27245342. 
  18. 18.0 18.1 "Congenital rickets due to vitamin D deficiency in the mothers". Clinical Nutrition 34 (5): 793–798. October 2015. doi:10.1016/j.clnu.2014.12.006. பப்மெட்:25552383. 
  19. "Office of Dietary Supplements - Vitamin D".
  20. "Pregnancy and prenatal vitamins".
  21. "Vitamin D deficiency in exclusively breast-fed infants". The Indian Journal of Medical Research 127 (3): 250–255. March 2008. பப்மெட்:18497439. 
  22. "Nutritional rickets: deficiency of vitamin D, calcium, or both?". The American Journal of Clinical Nutrition 80 (6 Suppl): 1725S–1729S. December 2004. doi:10.1093/ajcn/80.6.1725S. பப்மெட்:15585795. 
  23. "Vitamin D/dietary calcium deficiency rickets and pseudo-vitamin D deficiency rickets". BoneKEy Reports 3: 524. 2014. doi:10.1038/bonekey.2014.19. பப்மெட்:24818008. 
  24. "Hypophosphatasia: Signs and Symptoms". Hypophosphatasia.com. Archived from the original on 15 October 2014. பார்க்கப்பட்ட நாள் 10 September 2014.
  25. "Skin-pigment regulation of vitamin-D biosynthesis in man". Science 157 (3788): 501–506. August 1967. doi:10.1126/science.157.3788.501. பப்மெட்:6028915. Bibcode: 1967Sci...157..501F. 
  26. 26.0 26.1 "NHS Choice - Rickets Diagnoses". 6 June 2018.
  27. 27.0 27.1 "Radiographic characteristics of lower-extremity bowing in children". Radiographics 23 (4): 871–880. 2003. doi:10.1148/rg.234025149. பப்மெட்:12853662. 
  28. 28.0 28.1 Nield, Linda S.; Mahajan, Prashant; Joshi, Aparna; Kamat, Deepak (15 August 2006). "Rickets: Not a Disease of the Past". American Family Physician 74 (4): 619–626. பப்மெட்:16939184. http://www.aafp.org/afp/2006/0815/p619.html. 
  29. "Diagnosis and Management of Vitamin D Dependent Rickets". Frontiers in Pediatrics 8: 315. 2020. doi:10.3389/fped.2020.00315. பப்மெட்:32596195. 
  30. "Autosomal-recessive hypophosphatemic rickets is associated with an inactivation mutation in the ENPP1 gene". American Journal of Human Genetics 86 (2): 273–278. February 2010. doi:10.1016/j.ajhg.2010.01.010. பப்மெட்:20137772. 
  31. "A systematized approach to radiographic assessment of commonly seen genetic bone diseases in children: A pictorial review.". J Musculoskelet Surg Res 1 (2): 25. 15 November 2017. doi:10.4103/jmsr.jmsr_28_17. 
  32. "Rickets vs. abuse: a national and international epidemic". Pediatric Radiology 38 (11): 1210–1216. November 2008. doi:10.1007/s00247-008-1001-z. பப்மெட்:18810424. https://archive.org/details/sim_pediatric-radiology_2008-11_38_11/page/1210. 
  33. Live Strong. "CDark Skin Color & Vitamin D". பார்க்கப்பட்ட நாள் 2 June 2012.
  34. "Vitamin D in foods and as supplements". Progress in Biophysics and Molecular Biology. UV exposure guidance: A balanced approach between health risks and health benefits of UV and Vitamin D. Proceedings of an International Workshop, International Commission on Non-ionizing Radiation Protection, Munich, Germany, 17–18 October 2005 92 (1): 33–38. September 2006. doi:10.1016/j.pbiomolbio.2006.02.017. பப்மெட்:16618499. https://archive.org/details/sim_progress-in-biophysics-and-molecular-biology_2006-09_92_1/page/33. 
  35. "Rickets -- Symptoms and Causes". Mayo Clinic Patient Care and Health Information. Mayo Clinic. பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  36. "Vitamin D supplementation, 25-hydroxyvitamin D concentrations, and safety". The American Journal of Clinical Nutrition 69 (5): 842–856. May 1999. doi:10.1093/ajcn/69.5.842. பப்மெட்:10232622. https://archive.org/details/sim_american-journal-of-clinical-nutrition_1999-05_69_5/page/842. 
  37. "Prevention of rickets and vitamin D deficiency: new guidelines for vitamin D intake". Pediatrics 111 (4 Pt 1): 908–910. April 2003. doi:10.1542/peds.111.4.908. பப்மெட்:12671133. 
  38. "Vitamin D, calcium or a combination of vitamin D and calcium for the treatment of nutritional rickets in children". The Cochrane Database of Systematic Reviews 2020 (4): CD012581. April 2020. doi:10.1002/14651858.CD012581.pub2. பப்மெட்:32303107. 
  39. National Health Service of England > Rickets Last reviewed: 28 January 2010
  40. "Children who drink non-cow's milk are twice as likely to have low vitamin D".
  41. "Rickets and osteomalacia". nhs.uk. பார்க்கப்பட்ட நாள் 24 December 2017.
  42. "How going hungry affects children for their whole lives". Independent. 17 May 2019. https://www.independent.co.uk/news/long_reads/hunger-food-insecurity-mental-health-physical-food-bank-children-a8859671.html. 
  43. Claerr J (6 February 2008). "The History of Rickets, Scurvy and Other Nutritional Deficiencies". An Interesting Treatise on Human Stupidity. Yahoo! Voices. Archived from the original on 2014-07-02. URL references
  44. "Rickets and the crippled child: an historical perspective". Journal of the Royal Society of Medicine 87 (12): 729–732. December 1994. பப்மெட்:7503834. 
  45. "The role of vitamin D and intestinal phytase in the prevention of rickets in rats on cereal diets". Archives of Biochemistry and Biophysics 58 (1): 194–204. September 1955. doi:10.1016/0003-9861(55)90106-5. பப்மெட்:13259690. 
  46. "Biochemical response of late rickets and osteomalacia to a chupatty-free diet". British Medical Journal 3 (5824): 446–447. August 1972. doi:10.1136/bmj.3.5824.446. பப்மெட்:5069221. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்புருக்கி_நோய்&oldid=3730995" இலிருந்து மீள்விக்கப்பட்டது