உள்ளடக்கத்துக்குச் செல்

ஓலோசீன் நாட்காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓலோசீன் நாட்காட்டி (Holocene calendar), ஓலோசீன் ஊழி (Holocene Era) அல்லது மனித ஊழி (Human Era, HE), என்பது ஓர் ஆண்டு எண்ணும் அமைப்பாகும், இது தற்போது நடப்பிலுள்ள (கிபி/கிமு அல்லது பொ.ஊ/பொ.ஊ.மு) எண்ணும் திட்டத்துடன் சரியாக 10,000 ஆண்டுகளை சேர்க்கிறது, அதன் முதல் ஆண்டை ஓலோசீன் புவியியல் சிற்றூழியிலும், மனிதர்கள் வேட்டையாடும் வாழ்க்கை முறையிலிருந்து வேளாண்மை மற்றும் நிலையான குடியிருப்புகளுக்கு மாறிய புதிய கற்காலப் புரட்சியின் தொடக்கத்தில் வைக்கிறது. கிரெகொரியின் நாட்காட்டியின்படி நடப்பு ஆண்டு, கிபி 2025, ஓலோசீன் நாட்காட்டியில் 12025 HE ஆகும். மனித ஊழித் திட்டம் HE முதன்முதலில் 1993 இல் செசரே எமிலியானி என்பவரால் முன்மொழியப்பட்டது (11993 HE).[1]

மாற்று அட்டவணை

[தொகு]

யூலியன் அல்லது கிரெகோரியின் ஆண்டுகளில் இருந்து மனித ஊழிக்கு மாற்றுவது 10,000 ஐ கிபி/கிமு ஆண்டுக்குச் சேர்ப்பதன் மூலம் மாற்றலாம். நடப்பு ஆண்டிற்கு, 2025, அதற்கு முன் 1 என்ற இலக்கத்தைச் சேர்த்து 12,025 HE என்ற ஓலோசீன் ஆண்டாக மாற்றலாம். 10,001 இல் இருந்து கிமு/பொ.ஊ.மு ஆண்டு (BC/BCE) எண்ணைக் கழிப்பதன் மூலம் கிமு/பொ.ஊ.மு ஆண்டுகள் மாற்றப்படுகின்றன.

ஓலோசீன் நாட்காட்டியில் சகாப்தங்களும் மைல்கற்களும்
கிரெகொரியின் ஆண்டு ஐ.எசு.ஓ 8601 ஓலோசீன் ஆண்டு (HE) நிகழ்வு
கிமு 10000 −9999[a] 1 HE ஓலோசீன் ஊழியின் தொடக்கம்
கிமு 9701 −9700 300 HE பிளீத்தொசீன் கால முடிவும் ஓலோசீன் ஊழியின் தொடக்கமும்[2]
கிமு 4714 −4713 5287 HE யூலியன் நாள் முறையின் ஊழிக் காலம்: யூலியன் நாள் 0 கிமு 4713 சனவரி 1 கிரீனிச்சு நண்பகலில் தொடங்குகிறது (கிரெகோரியின் நாட்காட்டியில் கிமு 4714 நவம்பர் 24)[3]:10
கிமு 3761 −3760 6240 HE எபிரேய நாட்காட்டியில் அனோ முண்டி நாட்காட்டிக் காலத்தின் தொடக்கம்[3]:11
கிமு 3102 −3101 6899 HE இந்து அண்டவியலில் கலி யுகம் தொடக்கம்[4]
கிமு 2250 −2249 7751 HE ஓலோசீன் காலத்தின் மூன்று நிலைகளில் தற்போதையதும், அதற்கு முந்தையதுமான மேகாலயா சகாப்தத்தின் தொடக்கம்[5][6]
கிமு 45 −0044 9956 HE யூலியன் நாட்காட்டி அறிமுகம்
கிமு 1 +0000 10000 HE சுழிய ஆண்டு (ISO 8601)
1 +0001 10001 HE பொது ஊழி, அனோ டொமினி தொடக்கம் (இயேசுவின் பிறப்பைப் பற்றிய தியோனீசியசின் மதிப்பீட்டிலிருந்து)
622, 1 ஹிஜ்ரி +0622 10622 HE மக்காவில் இருந்து மதீனாவுக்கு முகம்மது நபியின் புலம்பெயர்வு, (இசுலாமிய நாட்காட்டியின் தொடக்கம்)[7][8]
1582 +1582 11582 HE கிரெகொரியின் நாட்காட்டியின் அறிமுகம்[3]:47
1912 +1912 11912 HE வட கொரியாவின் நாட்காட்டி,[9] மிங்குவோ நாட்காட்டிகளின் தொடக்கம்[10]
1950 +1950 11950 HE "இன்றைக்கு முன்னர்" நாட்காட்டியின் சகாப்தம்[11]:190
1960 +1960 11960 HE ஒ.ச.நே காலம்
1970 +1970 11970 HE யுனிக்சு காலம்[12]
1993 +1993 11993 HE ஓலோசீன் நாட்காட்டியின் வெளியீடு
2025 +2025 12025 HE நடப்பு ஆண்டு
10000 +10000 20000 HE
  1. எமிலியானியின்[1] முன்மொழிவு "மனித ஊழியின் தொடக்கத்தை கிமு 10,000 இல்" வைக்கிறது, ஆனால் யூலியன் அல்லது கிரெகோரிபின் நாட்காட்டிகளைக் குறிப்பிடவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Emiliani, Cesare (1993). "Correspondence – calendar reform". Nature 366 (6457): 716. doi:10.1038/366716b0. Bibcode: 1993Natur.366..716E. "Setting the beginning of the human era at 10,000 BC would date [...] the birth of Christ at [25 December] 10,000.". 
  2. "Formal definition and dating of the GSSP (Global Stratotype Section and Point) for the base of the Holocene using the Greenland NGRIP ice core, and selected auxiliary records". Journal of Quaternary Science 24 (1): 3–17. 2009. doi:10.1002/jqs.1227. Bibcode: 2009JQS....24....3W. http://www.stratigraphy.org/GSSP/Holocene.pdf. 
  3. 3.0 3.1 3.2 Dershowitz, Nachum; Reingold, Edward M. (2008). Calendrical Calculations (3rd ed.). Cambridge University Press. ISBN 978-0-521-70238-6.
  4. See: Matchett, Freda, "The Puranas", p 139 and Yano, Michio, "Calendar, astrology and astronomy" in Flood, Gavin, ed. (2003). Blackwell companion to Hinduism. பிளக்வெல் பதிப்பகம். ISBN 978-0-631-21535-6.
  5. "ICS chart containing the Quaternary and Cambrian GSSPs and new stages (v 2018/07) is now released!". Retrieved February 6, 2019.
  6. Conners, Deanna (September 18, 2018). "Welcome to the Meghalayan age". Retrieved February 6, 2019.
  7. Aisha El-Awady (2002-06-11). "Ramadan and the Lunar Calendar". Islamonline.net. Retrieved 2006-12-16.
  8. Hakim Muhammad Said (1981). "The History of the Islamic Calendar in the Light of the Hijra". Ahlul Bayt Digital Islamic Library Project. Retrieved 2006-12-16.
  9. Hy-Sang Lee (2001). North Korea: A Strange Socialist Fortress. Greenwood Publishing Group. p. 220. ISBN 978-0-275-96917-2.
  10. Endymion Wilkinson (2000). Chinese History: A Manual. Harvard Univ Asia Center. pp. 184–185. ISBN 978-0-674-00249-4.
  11. Currie Lloyd A (2004). "The Remarkable Metrological History of Radiocarbon Dating [II]". Journal of Research of the National Institute of Standards and Technology 109 (2): 185–217. doi:10.6028/jres.109.013. பப்மெட்:27366605. பப்மெட் சென்ட்ரல்:4853109. http://nvl.nist.gov/pub/nistpubs/jres/109/2/j92cur.pdf. பார்த்த நாள்: 2018-06-24. 
  12. "The Open Group Base Specifications Issue 7, Rationale, section 4.16 Seconds Since the Epoch". The OpenGroup. 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓலோசீன்_நாட்காட்டி&oldid=3427523" இலிருந்து மீள்விக்கப்பட்டது