ஓசிசெரோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓசிசெரோசு
Ocyceros birostris head.jpg
இந்திய சாம்பல் இருவாச்சியின் தலை, பிரிட்டீஸ் இந்தியாவின் விலங்குகள் புத்தகத்திலிருந்து
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: புசெரோடிபார்மிசு
குடும்பம்: புசோரோடிடே
பேரினம்: ஓசிசெரோசு
சிற்றினம்
  • ஓசிசெரோசு கிரிசெசசு
  • ஓசிசெரோசு ஜின்கேலென்சிசு
  • ஓசிசெரோசு பைரொசிடிரசு

ஓசிசெரோசு (Ocyceros) என்ற பேரினம் புசேரோடிடே குடும்பத்தினைச் சார்ந்த இருவாச்சி பறவைகளுடையப் பேரினமாகும். இதனை 1873ஆம் ஆண்டில் ஆலன் ஆக்டவியன் ஹியூம் தோற்றுவித்தார். இது பேரினத்தின்கீழ் உள்ள சிற்றினங்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டுமே பரவிக் காணப்படுகின்றன.

விளக்கம்[தொகு]

ஓசிசெரோசு இனத்தில் உள்ள இருவாச்சிகள் வளைந்த முக்கோண வடிவ அலகினையும் சாம்பல் நிற சிறகுகளையும் கொண்ட சிறிய ஆசியச் பறவைகளாகும். இவை பெரும்பாலும் "சாம்பல் இருவாச்சி" என்று அழைக்கப்படுகின்றன. கருப்பு மற்றும் சாம்பல் கண் வளையங்களும் அடர் கருப்பு கருவிழிகளும் கண்களில் காணப்படும். ஒவ்வொரு சிற்றினமும் வெவ்வேறு வகையான வண்ண அலகுகளைக் கொண்டுள்ளன. இந்தியச் சாம்பல் இருவாச்சி இருண்ட சாம்பல் அலகினையும், இலங்கை சாம்பல் இருவாச்சி வெளிறிய மஞ்சள் நிற அலகினையும், மலபார் சாம்பல் இருவாச்சி மஞ்சள் நிறத்துடன் ஆரஞ்சு அலகினையும் கொண்டுள்ளது.

சிற்றினங்கள்[தொகு]

இந்த பேரினத்தில் மூன்று இனங்கள் உள்ளன: [1]

படம் அறிவியல் பெயர் பொது பெயர் பரவல்
Ocyceros griseus -Kerala, India -male-8a.jpg ஓசிசெரோசு கிரிசெசசு மலபார் சாம்பல் இருவாச்சி மேற்குத் தொடர்ச்சி மலைகள், தென்னிந்தியாவின் தொடர்புடைய மலைகள்.
Ceylon Grey Hornbill.jpg</img> | ஓசிசெரோசு ஜின்கேலென்சிசு இலங்கை சாம்பல் இருவாச்சி இலங்கை
Grey hornbill on tree.jpg ஓசிசெரோசு பைரொசிடிரசு இந்திய சாம்பல் இருவாச்சி இந்தியா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mousebirds, Cuckoo Roller, trogons, hoopoes, hornbills". International Ornithologists' Union (2019).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசிசெரோசு&oldid=3144625" இருந்து மீள்விக்கப்பட்டது