ஒருமைப் பண்புக் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழொட்டு உரைஒருமைப் பண்பு வகைமை என்பது ஓர் உயிரியின் ஒற்றைப் பெற்றோரில் இருந்து மரபுப் பெறாகப் பெற்ற மரபன்களின் குழுவாகும்.[1][2] ஒருமைப் பண்புக் குழு (haplogroup) அல்லது (ஓரகம் (haploid) கிரேக்க மொழி: ἁπλούς இன் haploûs, ஒருமடி, ஒற்றை, எளிய ஆங்கில மொழி: Group (disambiguation) குழு) என்பது பொது மூதாதையை ஓர் ஒற்றை கருவன் பல்லுருவாக்கச் சடுதிமாற்றத்தால் பகிரும் நிகர்த்த ஒருமைப் பண்பு வகைமைகளின் குழுவாகும்.[3][4] மேலும் குறிப்பாக, ஒருமைப் பண்புக் குழு என்பது, ஒருங்கே மரபுவழி கையளிக்கப்பட்ட நெருக்கமாகப் பிணைந்த, பல்வேறு குறுமவகங்களில் அமைந்த மாற்றுருக்களின் அல்லது மரபன் தனிமங்களின் (Allelles) சேர்மானமாகும். ஒருமைப் பண்புக் குழுவில் ஒத்த ஒருமைப் பண்பு வகைமைகள் அமைவதால், ஒருமைப் பண்பு வகைமையில் இருந்தே ஒருமைப் பண்புக் குழுவைக் கண்டறியலாம். ஒருமைப் பண்புக் குழுக்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வேறுபாடுள்ள ஒற்றைக் கால்வழியை சேர்ந்தவை, .[5] ஒருவர் ஓர் ஒருமைப் பண்புக் குழுவில் உறுப்பினராக அமைதல் அவரிடம் உள்ள மரபுப் பொருளின் மிகச் சிறிய விகிதத்தாலேயே முடிவு செய்யப்படுகிறது.

ஒவ்வொரு ஒருமைப் பண்புக் குழுவும் முந்தைய ஒற்றை ஒருமைப் பண்புக் குழுவின் (இணைகுழுவின்) எச்சங்களில் இருந்தே தோன்றுகிறது . எனவே சார்புள்ல ஒருமைப் பண்புக் குழுக்களின் தொகுப்பைத் துல்லியமாக கிளைபிரிவு படிநிலைவரிசையில் அமைக்கலாம். இதில் ஒவ்வொரு கண (set) ஒருமைப் பண்புக் குழுவும் மேலும் அகன்ற அண்மைக் கணத்தின் துணைக் கணமாகும் (இது மாந்தரினம் போன்ற இரட்டைப் பெற்றோர் கிளைபிரிவு அமைப்புக்கு எதிரானதாகும்).

ஒருமைப் பண்புக் குழுக்கள் எப்போதும் ஆங்கில நெடுங்கணக்கின் முதல் பெரிய எழுத்தால் குறிக்கப்படுகிறது, அதன் மேலும் துல்லியமான சீராக்கங்கள் கூடுதல் எண்ணாலும் சிறிய எழுத்தாலும் குறிக்கப்படும். எடுத்துகாட்டாக, A → A1 → A1a எனக் குறிக்கப்படும்.

மாந்தரின மரபியலில், ஒருமைப் பண்புக் குழுக்கள் மிக வழக்கமாக மாந்தரின ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழுக்களாலும் மாந்தரின ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்களாலும் அல்லது இவை இரண்டாலும் மக்கள்தொகை மரபியல் வரையறை செய்யப்படுகிறது.ஒய் மரபன் தந்தைக் கால்வழியாக தந்தையில் இருந்து மகனுக்கும் ஊன்குருத்து மரபன் தாய்க் கால்வழியாக இருபாலினக் குழவிகளுக்கும் மரபியலாகப் பெறப்படுகிறது. இவை இரண்டும் ஒவ்வொரு தலைமுறையிலும் தற்செயலான சடுதிமாற்றத்தால் மாறுமேயன்றி, தம்மிடையே ஊடுகலத்தலால் மாறுவதில்லை.

ஒருமைப் பண்புக் குழு உருவாக்கம்[தொகு]

  மூதாதையர் ஒருமைப் பண்புக் குழு
  ஒருமைப் பண்புக் குழு A (Hg A)
  ஒருமைப் பண்புக் குழு B (Hg B)
இந்த அனைத்து மூலக்கூறுகளும் மூதாதையர் ஒருமைப் பண்புக் குழுவின் பகுதிகளாகும். ஆனால் கடந்தகாலத்தின் ஒரு புள்ளியில் மூலக்கூற்றில் சடுதிமாற்றம் A ஏற்பாட்டபோது புதிய கால்வழி உருவாகியது; இது ஒருமைப் பண்புக் குழு Aஎனப்பட்ட்து. இது தெளிவாக சடுதிமாற்றம் A வால் உருவாகியதே. கடந்த காலத்தின் அடுத்த அண்மைப் புள்ளியில் சடுதிமாற்றம் B ஒருமைப் பண்புக் குழு A வில் ஒருவருக்கு ஏற்பட்டு ஒருமைப் பண்புக் குழு B யை உருவாக்கியது. ஒருமைப் பண்புக் குழு B, ஒருமைப் பண்புக் குழு Aவின் துனைக்குழு அல்லதுதுணைக்கவை ஆகும்; ஒருமைப் பண்புக் குழுக்கல் Aவும் B யும் மூதாதை ஒருமைப் பண்புக் குழுவின் துணைக்கவைகள் ஆகும்.

ஊன்குருத்துகள் மாந்தரில் உள்ளதுபோன்ற முழுக்கருவன் உயிர்க்கலத்தின் கலக்கணிகத்தில் அமையும் சிற்றுறுப்புகள் ஆகும். இவற்றின் முதன்மைப் பணி உயிர்க்கலங்களுக்கு ஆற்றலைத் தருவதாகும். இவை முன்பு விடுபட்டு இயங்கிய குச்சுயிரிகளின், குறுக்கமுற்ற இணைவாழ்வுக் கால்வழிகளாகும் எனக் கருதப்படுகிறது. இப்படிக் கருதுவதற்கான காரணம் இவற்றில் முழுமை வாய்ந்த ஊன்குருத்து மரபன் நிலவுவதும் இதன் கட்டமைப்பு முழுக்கருவன் உயிரியை விட குச்சுயிரியை ஒத்துள்ளதும் ஆகும் பெரும்பாலான மாந்தரின மரபன்கள் உயிர்க்கலத்தின் கலக்கருவில் உள்ள குறுமவகங்களிலேயே அமைந்தாலும் ஊன்குருத்து மரபன் மட்டும் கலக்கணிகத்தில் அமைதல் இதற்கு விதிவிலக்காகும்.

ஒருவர் கலக்கணிகத்தையும் கலக்கணிக சிற்றுறுப்புகளையும் தன் தாய்வழி அண்டத்தில் (முட்டையில்) இருந்தே மரபுப் பேறாகப் பெறுகிறார்; விந்து குறுமவக மரபன்களை மட்டுமே மரபுவழியாகக் கடத்துகிறது. அனைத்து ஊன்குருத்துகளும் முட்டைக் கலத்தால் செரிக்கப்படும். எனவே ஊன்குருத்து மூலக்கூற்றில் ஏற்படும் சடுதிமாற்றங்கள், அவை நேரடியாக தாய்க்கால்வழியாக மட்டுமே கடக்கும். சடுதிமாற்றங்கள் மரபன் வரிசைமுறையில் உள்ள பிழைகளைப் படியெடுக்கும் நிகழ்வாகும். இவ்வகைத் தனிப்பிழைகள் ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கங்கள் எனப்படுகின்றன.

மாந்தரின ஒய் குறுமவகம் ஆண்சார்ந்த பாலினக் குறுமவகமாகும். அனைத்து மாந்தரின ஒய் குருமவகங்களும் புற உருவநிலையாக ஆண் தன்மை பெற்றனவே. கலக்கருவில் ஒய், எக்சு குறுமவகங்கள் இணையாக ஒருங்கே அமைந்திருந்தாலும் ஒய் குறுமவகம், எக்சு குறுமவகத்தின் ஒய் முனையில் மட்டுமே மீளிணைய வாய்ப்புள்ளது; எஞ்சிய 95% அளவு ஒய் குறுமவகங்கள் மீளிணைவில் பங்கெடுப்பதில்லை. எனவே ஒய் குறுமவகமும் அதில் ஏற்படும் சடுதிமாற்றங்களும் தந்தையிடம் இருந்து மகனுக்கு ஆண்கால்வழியாகக் கடத்தப்படுகின்றன. இது ஒய் குறுமவகமும் ஊன்குருத்து குறுமவகமும் தமக்கே உரிய தனிப்பான்மைகளைப் பெற்றுள்ளன.

பெண்களில் அமையும் பிற குறுமவகங்களான, நிகரிணைக் குறுமவகங்களும் எக்சு குறுமவகங்களும் இனப்பெருக்கத்துக்கு உதவும் சிறப்பு உயிர்க்கலப் பிரிவான குன்றல் பகுப்பின்போது மீளினைவுக்கு குறுமவகத் தாண்டல் வழியாகத் தம் மரபுப் பொருளைப் பகிர்கின்றன. எனவே இந்தக் குறுமவகங்களின் மரபுப் பொருள்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் கலக்கின்றன. இதனால் புதிய சடுதிமாற்றங்கள் பெற்றோரில் இருந்து வழித்தோன்றல்களுக்குத் தற்போக்கில் கடத்தப்படுகின்றன.

ஒய் குறுமவக மரபன், ஊன்குருத்து மரபன் தனிக் கூறுபாடே, இவ்விருவகை மூலக்கூறுகளின் குறிப்பிட்ட துண்டத்தில் சடுதிமாற்றங்கள் தொடர்ந்து திரள இயல்வதும் அச்சடுதிமாற்றங்கள் மரபனில் நிலைத்த ஓரிடத்தில் நிலையாகத் தங்கிநிற்பதும் ஆகும். மேலும் இந்தச் சடுதிமாற்றங்களின் வரலாற்று வரிசையை உய்த்தறியவும் முடியும். எடுத்துகாட்டாக, பல மாந்தர்களில் இருந்து பெறப்பட்ட ஒய் குறுமவகங்களின் குறிப்பிட்ட கணம் சடுதிமாற்றம் A வையும் இந்தக் குறுமவகங்களின் ஐந்து மட்டும் சடுதிமாற்றம் B யையும் பெற்றிருந்தால், அப்போது கட்டாயமாக B சடுதிமாற்றம், A சடுதிமாற்றத்துக்குப் பின்னரே ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஒருமைப் பண்புக் குழு மக்கள்தொகை மரபியல்[தொகு]

இன்றுவரை வாழும் ஒருமைப் பண்புக் குழுவின் சடுதிமாற்ரத்துக்குச் சார்பாகவோ எதிராகவோ யற்கைத் தேர்வு ஏதும் இல்லையெனக் கொள்லப்படுகிறது[சான்று தேவை]; எனவே சடுதிமாற்ற விகிதங்களைத் தவிர, (இது குறிப்பானுக்குக் குறிப்பான் மாறுகிறது) மக்கள்தொகை மரபியலுக்கான முதன்மை உந்தல் மரபியல் பெயர்வு ஆகும். இம்மரபியல் பெயர்வு மக்கள்தொகையில் அமையும் ஒருமைப் பண்புக் குழுக்களின் விகிதசமங்களை மாற்ருகிறது மரபியல் பெயர்வு என்பது குறிப்பிட்ட மக்கள்தொகையின் உறுப்பினர்கள் தம் மரபுக் கூறுகளைத் தகுந்த பாலினமுள்ள அடுத்த தலைமுறை உறுப்பினர்களுக்கு கடத்தும் பதக்கூறுகளின் தற்போக்கு அல்லது வருநிகழ்வுபோக்குத் தன்மையானது உருவாக்கும் தற்போக்கு (வருநிகழ்வு) வேறுபாடு அல்லது அலைவு ஆகும்.

இதனால் குறிப்பிட்ட மரபியல் குறிப்பானின் நிலவுகை, தொடர்ந்து அது 100% அலவுக்கு உயரும் வரையோ அல்லது முற்றிலும் இல்லாமல் போகும்வரையிலோ அலைவுறுகிறது. உயர்வான கலப்பு நிகழும் பேரளவு மக்கள்தொகைகளில் மாற்றுமரபு அலகுகளின் மரபியல் பெயர்வின் வீதம் மிக்க் குறவாக அமைகிறது; என்றாலும், தாழ்வாக கலப்பு நிகழும் சிற்றளவு மக்கள்தொகைகளில் மரபியல் பெயர்வீதம் கூடுவதால் மாற்றங்கள் விரைந்து நிகழ்கிறது. குறிப்பிட்ட ஒருமைப் பண்பு வகைமைகளும் ஒருமைப் பண்பு வகைமைக் குழுக்களும் சார்ந்த செறிவும் புவிப்பரப்புப் பரவலும் நிறுவனர் விளைவைச் சந்திக்கின்றன அல்லது மீள்நிகழ் மக்கள்தொகை இடுக்கண்களைச் சந்திக்கின்றன. எனவே இதனால் மக்கள்தொகைகள் தனிப்படுதலும் அளவில் உயர்தலும் ஏற்படுகிறது.

இன்றைய கால்வழிகளில் இருந்து நாம் பின்னோக்கிச் சென்றால் பழந்தலைமுறை மக்கள்தொகையின் முழு மரபியல் வேறுபாட்டை அறிதல் முடியாது: ஏனெனில், மரபன் பெயர்வு சில வேறுபாடுகளை இறக்கச் செய்துவிடும். செலவுநோக்கில், முழு ஒய் மரபன், ஊன்குருத்து மரபன் ஓர்வுகள் அத்தரவுகளை முழுமையாகத் தரவல்லனவாக அமைவதில்லை; என்றாலும், கடந்த பத்தாண்டுகளாக அவற்றின் செலவு அல்லது அடக்க விலை குறைந்துவிட்டது. ஒருமைப் பண்புக் குழுவின் கூட்டிணைவு நேரங்களும் ந்டப்பு புவியியல் பரவலும் கணிசமான பிழை உறுதியின்மைகளைக் கொண்டுள்ளன. இது மிகவும் கூட்டிணைவு நேரங்களுக்குப் பொருந்தும்; ஏனெனில், பெரும்பாலான மக்கள்தொகை மரபியலார் இன்னமும் சிவத்தோவ்சுகி முறையைப் பின்பற்றுகின்றனர். "சிவத்தோவ்சுகி முறை", அதன் பொய்மைத் தன்மைக்காக மரபன் கால்வழியியலாரால் தொடர்ந்து எதிர்க்கப்பட்டு வருகிறது. முழுச் சமூக உயிரியான "ஆங்கிலோபாலிபியா பேலன்சு" வகைக் குளவியில் எட்டு ஒருமைப் பண்புக் குழுக்கள், அவை உள்ள இருப்பிடத்தைப் பொறுத்து, அமைகின்றன. இது மரபியல் பெயர்வு நிகழ்ந்ததைத் தெளிவாகக் காட்டுகிறது.

மாந்தரின ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்[தொகு]

முதன்மைக் கட்டுரை: மாந்தரின ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழு

மாந்தரின ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள் A முதல் T வரையி அமைந்த ஆன்ங்கிலப் பெரிய ழுத்துகளில் பெயரிடப்பட்டுள்ளன. அவை மேலும் எண்களையும் ஆங்கிலச் சிறிய எழுத்துகளையும் பயன்படுத்தி உட்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒய் குருமவக ஒருமைப் பண்புக் குழுக்களின் பெயர்கள் ஒய் குறுமவகப் பேரிணையத்தால் பேணப்படுகின்றன.[6]

ஒய் குறுமவக ஆதாம் என்பது அனைத்து வாழும் மாந்தர்களின் மிக அண்மிய பொது தந்தைக் கால்வழி (ஆண் கால்வழி) மூதாதைக்கு ஆய்வாளர்கள் இட்டுள்ள பெயராகும்.

பேரியல் ஒய் குறுமவக ஒருமைப் பண்புக் குழுக்களும் அவற்றின் புவிப்பரப்புப் பரவலும் (அண்மைய ஐரோப்பியக் குடியேற்றத்துக்கு முன்பு), கீழே காட்டப்பட்டுள்ளது:

குடியேற்றத்துக்கு முந்தைய உலக மாக்கள்தொகையில் ஓங்கலாக அமைந்திருந்த ஒய் குறுமவக ஒருமைப் பண்புக் குழுக்கள், வாய்ப்புள்ள கடற்கரையோர நகர்வுகளுடன்.

M168 சடுதிமாற்றம் நிகழாத குழுக்கள்[தொகு]

M168 சடுதிமாற்றம் உள்ள குழுக்கள்[தொகு]

(சடுதிமாற்றம் M168 தோராயமாக அமு 50,000 இல் தோன்றியது)

M89 சடுதிமாற்றம் உள்ள குழுக்கள்[தொகு]

(சடுதிமாற்றம் M89 தோராயமாக, அமு45,000 ஆண்டுகளில் தோன்றியுள்ளது)

L15 , L16 சடுதிமாற்றங்கள் உள்ள குழுக்கள்[தொகு]

சடுதிமாற்றம் M9 உள்ள குழுக்கள்[தொகு]

(சடுதிமாற்றம் M9 தோராயமாக, அமு 40,000 ஆண்டுகள் அளவில் தோன்றியுள்ளது)

சடுதிமாற்றம் M526 உள்ள குழுக்கள்[தொகு]

மாந்தரின ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்[தொகு]

மாந்தரின நகர்வுகளும் ஊன்குருத்து ஒருமைப் பண்புக் குழுக்களும்.

முதன்மைக் கட்டுரை: மாந்தரின ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழு

மாந்தரின ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள் பின்வருமாறு ஆங்கிலப் பெரிய எழுத்துகளால் பெயரிடப்பட்டுள்ளன: A, B, C, CZ, D, E, F, G, H, HV, I, J, முன்-JT, JT, K, L0, L1, L2, L3, L4, L5, L6, M, N, P, Q, R, R0, S, T, U, V, W, X, Y, and Z. மிக அண்மைய ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள் மன்னிசு வான் ஓவனால் தன் தொகுதித் தரு வலைத்தளத்தில் பேணப்படுகின்றன.[8]

ஊன்குருத்து ஏவாள் என்பது ஆய்வாளர்கள் அனைத்து வாழும்மாந்தரின் மிக அண்மிய பொதுத் தாய்க்கால்வழி (பெண் கால்வழி) மூதாதைக்குத் தந்துள்ள பெயராகும்.

மக்கள்தொகையை வரையறுத்தல்[தொகு]

ஊன்குருத்து மரபன் படியான மாந்தரின ஒருமைப் பண்புக் குழுக்களின் நகர்வுகள். இதில் அன்மைக்கு முந்தைய ஆண்டுகள், குறிப்பிட்ட ஆயிரங்களில் உள்ள ஆண்டு நெடுக்கங்கள் வண்ணங்களில் காட்டப்பட்டுள்ளன.

மக்கள்தொகைகளின் மரபியலை வரையறுக்க ஒருமைப் பண்குக் குழுக்களைப் பயன்படுத்தலாம். பெரும்பாலும் இவை புவிப்பரப்பைச் சார்ந்தே அமைகின்றன. எடுத்துகாட்டாக, கீழுள்ளவை ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்களின் பிரிவுகளாகும்:

 • கிழக்கு ஐரோப்பாசியவகை: A, B, C, D, E, F, G, Y, Z (குறிப்பு: C, D, E, G, Z ஆகியன M பேரியல் ஒருமைப் பண்புக் குழுவைச் சேர்ந்தவை)
 • அமெரிக்கத் தோற்றப் பழங்குடிகள்: A, B, C, D, X
 • ஆத்திரலோ-மலனேசியவகை: P, Q, S

ஊன்குருத்து ஒருமைப் பண்புக் குழுக்கள் L, M, N ஆகிய மூன்று முதன்மை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

மாந்தரின L குழு முதலில் L0 முதல் L1-6 வரை பிரிய, L1-6 மட்டும் L3, M, N எனும் குழுக்களாகப் பிரிந்தது. M குழுவில் ஆப்பிரிக்காவை விட்டு முதலில் வெளியேறிய மாந்தரின நகர்வுகள் அடங்கும். இவை கிழக்காகத் தென்கடலோரமாக நகர்ந்தன.

M ஒருமைப் பண்புக் குழுவின் கால்வழிவந்த மக்கள் கிழக்கு ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கப் பழங்குடிகள், மலனேசியா முழுவதிலும் அமைகின்றனர். ஆனால் இவை ஐரோப்பாவில் சற்றும் கூடக் காணப்படவில்லை. N குழு ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிய அடுத்த நகர்வைக் குறிக்கிறது. இது கிழக்காக நகராமல், வடக்காக நகர்ந்துள்ளது. இந்த நகர்வுக்கு சற்றே பின்னர் பெரிய R குழு N குழுவில் இருந்து பிரிந்துள்ளது.

புவிப்பரப்புப் பரவல்களைப் பொறுத்து R குழு இரு துனைக்குழுக்களாகப் பிரிகிறது. இவற்ரில் ஒன்றுதென்கிழ்க்கு ஆசியாவிலும் ஓசியானாவிலும் அமைய, மற்றொன்று அனைத்து ஐரோப்பிய மக்கள்தொகைகலையும் உள்லடக்குகிறது. N(xR) ஒருமைப் பண்புக் குழு, அதவது N குழுசார்ந்த ஆனால் அதன் R துணைக்குழுவைச் சாராத ஊன்குருத்து மரபன் குழு ஆத்திரேலியப் பழங்குடி மக்களில் பரவலாக அமைகிறது. மேலும் தாழ் நிகழ்வெண்களில் ஐரோப்பாசியாவிலும் அமெரிக்கப் பழங்குடிகளிலும் அமைகிறது.

L வகைமை கிட்டத்தட்ட அனைத்து ஆப்பிரிக்கர்களையும் உள்ளடக்குகிறது.

M வகைமை யில் பின்வருவன அடங்கும்:

M1 எதியோப்பியர்களும் சொமாலியர்களும் இந்தியர்களும் இதில் அடங்குவர். ஆப்பிரிக்க நிலமுனைக்கும் அரேபியத் தீவகத்துக்கும் (சவுதி அரேபியா, யேமன், ஓமன்) இடையில் இவை செங்கடலுக்கும் ஏதேன் வளைகுடாவுக்கும் குறுகிய நீர்ச்சந்தியால் மட்டும் பிரிக்கப்பட்டுள்ளதால் மரபன் பெயர்வுநடந்த்தால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

CZ பல சைபீரியன்களி உள்ளது; கிளை C சில அமரிந்தியர்களில் உள்ளது; கிளை Z பல சாமியர்களிலும் கொரியர்களிலும் வட சீனர்களிலும்நடுவண் ஆசிய மக்களிலும் உள்ளது.

D சில அமரிந்தியர்களிலும் பல சைபீரியர்களிலும் வடகிழக்கு ஆசியர்களிலும் உள்ளது.

E மலாய், போர்னியா, பிலிப்பைன்சு, தைவானியப் பழங்குடிகள், பாப்புவா நியூகினியாஆகி இடங்களில் உள்ளது.

G பல வடகிழக்கு சைபீரியர்களிலும் வடகிழக்கு ஆசியர்களிலும் நடுவண் ஆசியர்களிலும் உள்ளது.

Q- மலனேசியா, பாலினேசியா, நியூகினியா மக்கள்தொகைகளில் உள்ளது.

N வகைமை யில் பின்வருவன அடங்கும்:

A சில அமெரிக்க இந்தியர்களிலும் சிலயப்பானியர்களிலும் கொரியர்களிலும் அமைகிறது.

I 10% நிகழ்வெண்ணில் வடக்கு,கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது.

S ஆத்திரேலியத் துணைக்குழுக்களில் அமைகிறது.

W சில கிழக்கு ஐரோப்பியர்களிலும் தெற்காசியர்களிலும் தென்கிழக்கு ஆசியர்களிலும் அமைந்துள்ளது.

X சில அமரிந்தியர்களிலும் தெற்கு சைபீரியர்களிலும் தென்மேற்கு ஆசியர்களிலும் தெற்கு ஐரோப்பியர்களிலும் காணப்படுகிறது.

Y பெரும்பாலான நிவிக்குகளிலும் ஐனர்களிலும் உள்ளது; 1% அளவுக்கு தெற்கு சைபீரியர்களில் அமைகிறது.

R பேரியல் குழு, N வகைமையுள் அடங்குகிறது. இது மேற்கு, கிழக்கு ஐரோப்பாசியா புவிப்பரப்புகளில் பரவியுள்ளது. இன்று வாழும் பெரும்பாலான ஐரோப்பிய மக்கள்தொகைகளும் நடுவண் கிழக்குப் பகுதி மக்கள்தொகைகளும் இக்கிளைப் பிரிவில் அமைகின்றனர். இக்குழுவின் சிறு விழுக்காட்டு (%) அளவு மக்கள் பிற N வகைக் குழுக்களில் காணப்படுகின்றனர். R வகையின் துணைக்குழுக்கள் கீழே தரப்படுகின்றன:

B குழு, சில சீனர்களிலும் திபெத்தியர்களிலும் மங்கோலியர்களிலும் நடுவண் ஆசியர்களிலும் கொரியர்களிலும் அமரிந்தியர்களிலும் தென் சைபீரியர்களிலும் யப்பானியர்களிலும் ஆத்திரோனேசியர்களிலும் அமைகின்றனர்.

F குழு, முதன்மையாக, தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக வியட்நாமில் அமைகிறது; 8.3% அளவுக்குக் குரோசியாவின் உவார் தீவில் உள்ளது.[9]

R0 குழு, அரேபியாவில் எத்தியோப்பியர்களிலும் சொமாலியர்களிலும் காணப்படுகிறது; கிளை HV (கிளை H; கிளை V) குழு, ஐரொப்பாவிலும் மேற்கு ஆசியாவிலும் வட ஆப்பிரிக்காவிலும் அமைகிறது;

முந்து JT குழு, இலவாண்டில் தோன்றியது (நிகழ்கால இலெபனான் பகுதி). இது பெதவின் மக்கள்தொகையில் 25% அளவு நிகழ்வெண்ணில் காணப்படுகிறது; கிளை JT (கிளை J; கிளை T) குழு, வட, கிழக்கு ஐரோப்பாவிலும் சிந்துவெளியிலும் நடுத்தரைக் கடல் பகுதியிலும் உள்ளது.

U குழு, மேற்கு ஐரோப்பாசியாவிலும் இந்தியத் துணைக்கண்ட்த்திலும் அல்ஜீரியாவிலும் உயர் நிகழ்வெண்ணில் உள்ளது; இது இந்திவில் இருந்து நடுத்தரைக் கடல் பகுதியூடாக எஞ்சிடும் ஐரோப்ப்பா முழுவதிலும் அமைகிறது; U5 குழு, சுகாண்டிநேவியாவிலும்பால்டிக் நாடுகளிலும் உயர் நிகழ்வெண்ணில் உள்ளது. இது குறிப்பாக, சாமி மக்களில் மிகமிக உயர்வெண்ணில் உள்ளது.

ஒய் ஒருமைப் பண்புக் குழுக்களுக்கும் ஊன்குருத்து ஒருமைப் பண்புக் குழுக்களுக்கும் இடையே உள்ள மேற்படிவு[தொகு]

ஒய் ஒருமைப் பண்புக் குழுக்கள், ஊன்குருத்து ஒருமைப் பண்புக் குழுக்கள் ஆகியவற்றின் குறிப்பிட்ட நெடுக்கங்கள் ஒன்றின் மேலொன்று மேற்படிகின்றன. இது ஒய் ஒருமைப் பண்புக் குழுவும் ஊன்குருத்து ஒருமைப் பண்புக் குழுவும் கலந்த குறிப்பிட்ட சேர்மானம் கொண்ட மக்கள்தொகைகள் நிலவலை உருவாக்குகிறது.

ஒய் சடுதிமாற்றங்களும் ஊன்குருத்துச் சடுதிமாற்றங்களும் ஒரே காலத்தில் நேர்வதில்லை. இருபாலினங்களுக்கு இடையில் நிகழும் பாலியல் தேர்வின் வேறுபட்ட வீதங்களும் நிறுவனர் விளைவும் மரபனியல் நகர்வும் சேர்ந்து மக்கள்தொகையின் ஒருமைப் பண்புக் குழு உள்ளியைபை மாற்றுவதால் மேற்படிவுகள் மிகமிகத் தோராயமாகவே அமையும்.

மிகமிகத் தோராயமான இவ்வொருமைப் பண்புக் குழுக்களின் மேற்படிவுகள் கீழே தரப்படுகின்றன:

ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள் ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள் புவிப்பரப்பு/அல்லது மக்கள்
A L0 கிழக்கு, தென் ஆப்பிரிக்கா
B L1, L4 கிழக்கு, ந்டுவண் ஆப்பிரிக்கா
E L2, L3 ஆப்பிரிக்கா எங்கும்
D, O, N, C2 (முன்பு C3) CZ/C/Z, D, G (M வகைமைகள்); A, N9/Y (N types); B, F (R வகைமைகள்) கிழக்காசியா, சைபீரியா
K2b1, C1 (முன்பு CxC3), PxQR (பிலிப்பைன்சு திமோர்களிலும் நீக்ரிதோவர்களிலும்) B, P (Rவகைமைகள்); N; Q (M வகைமை) மேலும் ஓசியானா சார்ந்த குறிப்பிட்ட M துணைக்கவைகள் ஓசியானா
R, I, T, J, E (V13, M81, and M123 வகைமைகள்) R0, HV/H/V, JT/J/T, U/K (R வகைமைகள்), M1 (Mவகைமை) ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்கா, ஆப்பிரிக்க குளம்பகம்
H, R1a-z93, R2, L U2, U7 பிற R, M துணைக்கவைகள். தெற்காசியா
Q, C2 (முன்பு C3) A, X (N வகைமைகள்); C, D (M வகைமைகள்) சைபீரியாவின் நெடுங்கிழக்கில், அமெரிக்கப் பழங்குடிகள்

புவியியலாக ஒய் குறுமவக, ஊன்குருத்து மரபன்களின் ஒருமைப்பண்புக் குழுக்களின் தோற்றம்[தொகு]

பெகாடா குழுவினர் 2013 இல் முன்மொழிந்த புவியியலான ஒய் குருமவக, ஊன்குருத்து மரபன்களின் ஒருமைப்பண்புக் குழுக்களின் தோற்றம் கீழே உள்ளன.[10]

ஒய் குறுமவக மரபன்[தொகு]

முதல் பேரழிவு நிகழ்ச்சிக் கால ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கங்கள் சார்ந்த ஒருமைப் பண்புக் குழுக்கள் தோராயமாக, அமு 45–50 ஆண்டுகளில் தோன்றியுள்ளன. மால்டா பண்பாட்டின்படி, இரண்டாம் பேரழிவு நிகழ்ச்சிக் கால ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கங்கள் சார்ந்த ஒருமைப் பண்புக் குழுக்கள் அமு32–35 ஆயிரம் ஆண்டுகள் அளவில் பிரிந்துள்ளன. சுழிப் பேரழிவு நிகழ்ச்சிக் காலம் டோபா எனும் முற்றுப் பேறழிவுக் காலம் ஆகும். இக்கட்டத்தில் CDEF* ஒருமைப் பண்புக் குழுக்கள் தோன்றி, C, DE, F. C ஆகப் பிரிந்தன. F பொதுவான மாற்றங்களைக் கொண்டில்லை. ஆனால் Dயும் E யும் பொதுக் கூறுபாடுகளைக் கொண்டுள்ளன. நடப்பு நிலவரப்படி, முதல் பேரழிவு நிகழ்ச்சிக் காலம் டோபாவுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ளது. ஆனால் தொன்மை வாய்ந்த பழமரபனின் காலம் சுழி பேரழிவு நிகழ்ச்சியை டோபாவுக்கு நெடுங்காலத்துக்கு முன்னே தள்ளுகிறது. மேலும் முதல் பேரழிவு நிகழ்வையும் டோபாவுக்கு அண்மையதாக்குகிறது. எனவே இவர்களின் பேரழிவு நிகழ்ச்சிகளின் காலம் நம்பவியலாத கற்பிதங்கள் ஆகும்.பெரும்பாலான இவர்களின் குறிப்புகளும் கூட ஊகங்களாகவே அமைகின்றன. ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கத்தால் கணிக்கும் தொல்பழ மரபனின் காலம் மிகப்பெரும் வேறுபாடு உடையதாக உள்லது. மேலும் இந்த ஒருமைப் பண்புக் குழுகளின் பிரிந்துவிலகல் ஒருங்கே நிகழ்ந்து இருந்தாலும் துல்லியமாக எப்போது இவை தோன்றினவெனக் கூறமுடியாது.[11][12]

தோற்றம் ஒருமைப் பண்புக் குழு குறிப்பான்
ஐரோப்பா E1b1b1a2 V13
ஐரோப்பா (இரண்டாம் பேரழிவு நிகழ்ச்சி?) I M170, M253, P259, M227, M507
ஐரோப்பா I1b P215,M438, P37.2, M359, P41.2
ஐரோப்பா I1b2 M26
ஐரோப்பா I1c M223, M284, P78, P95
ஐரோப்பா J2a1 M47
ஐரோப்ப J2a2 M67, M166
ஐரோப்பா J2a2a M92
ஐரோப்பா J2b M12,M102, M280, M241
ஐரோப்பா R1b1b1a M412, P310
ஐரோப்பா R1b1b1a1 L11
ஐரோப்பா R1b1b1a1a U106
ஐரோப்பா R1b1b1a1b U198, P312, S116
ஐரோப்பா R1b1b1a1b1 U152
ஐரோப்பா R1b1b1a1b2 M529
ஐரோப்பா R1b1b1a1b3,4 M65, M153
ஐரோப்பா R1b1b1a1b5 SRY2627
தெற்காசியா அல்லது மெலனேசியா C1(முன்பு CxC3) Z1426
வடக்காசியா C2 (முன்பு C3) M217+
இந்தோனேசியா அல்லது தெற்காசியா (முதல் பேரழிவு நிகழ்ச்சி?) F M89, M282
ஐரோப்பா (காகாச்சு) (இரண்டாம் பேரழிவு நிகழ்ச்சி?) G M201, M285, P15, P16, M406
தெற்காசியா H M69, M52, M82, M197, M370
ஐரோப்பா அல்லது நடுவண் கிழக்குப் பகுதி (இரண்டாம் பேரழிவு நிகழ்ச்சி?) J1 M304, M267, P58, M365, M368, M369
ஐரோப்பா அல்லது நடுவண் கிழக்குப் பகுதி (இரண்டாம் பேரழிவு நிகழ்ச்சி?) J2 M172, M410, M158, M319, DYS445=6, M339, M340
ஐரோப்பாசியாவில் மேற்கு பர்மா (முதல் பேரழிவு நிகழ்ச்சி?)[13]
இந்தோனேசியா (முதல் பேரழிவு நிகழ்ச்சி?) [13] K2 (NOPS) M526
தெற்காசியா L M11, M20, M27, M76, M317, M274, M349, M357
கிழக்காசியா, தென்கிழக்காசியா N M231, M214, LLY22g, Tat, M178
கிழக்காசியா, தென்கிழக்காசியா, தெற்காசியா (இரண்டாம் பேரழிவு நிகழ்ச்சி?) O M175, M119
இந்தோனேசியா,பிலிப்பைன்சு (முதல் பேரழிவு நிகழ்ச்சி?) P (xQR) 92R7, M207, M173, M45
தெற்காசியா, சைபீரியா (இரண்டாம் பேரழிவு நிகழ்ச்சி?) R and Q (QR) split [13] MEH2, M242, P36.2, M25, M346
நடுவன் கிழக்குப் பகுதி, ஐரோப்பா, சைபீரியா,தெற்காசியா R1a1 M420, M17, M198, M204, M458
அனதோலியா, தென்கிழக்கு ஐரோப்பா ? R1b M173, M343, P25, M73
ஐரோப்பா R1b1b M269
ஐரோப்பா R1b1b1 L23
பாக்கித்தானம், இந்தியா (இரண்டாம் பேரழிவு நிகழ்ச்சி?) R2 M479, M124
நடுவண் கிழக்குப் பகுதி T M70
வட ஆப்பிரிக்கா E1b1b1a M78
வட ஆப்பிரிக்கா E1b1b1a1 V12
வட ஆப்பிரிக்கா E1b1b1a1b V32
வட ஆப்பிரிக்கா E1b1b1a3 V22
வட ஆப்பிரிக்கா E1b1b1a4 V65
வட ஆப்பிரிக்கா E1b1b1b M81
மேற்கு ஆப்பிரிக்கா, வட ஆப்பிரிக்கா A M91, M13
கிழக்கு ஆப்பிரிக்கா B M60, M181, SRY10831.1, M150, M109, M112
ஆசியா, ஆப்பிரிக்கா DE M1, YAP, M174, M40, M96, M75, M98
கிழக்காசியா, D M174
கிழக்கு ஆப்பிரிக்கா (E1b1a மூதாதை பிரிவு நேர்ந்தது, இரண்டாம் பேரழிவு நிகழ்வின்போது) E1b1b1 M35
கிழக்காப்பிரிக்கா E1b1b1c M123, M34
மேற்கு ஆப்பிரிக்கா (முதல் பேரழிவு நிகழ்ச்சி?) E1a M33
கிழக்கு ஆப்பிரிக்கா (முதல் பேரழிவின்போது E1b1, E1a பிரிவு; இரண்டாம் பேரழிவின்போது, E1b1b, E1b1a பிரிவு) E1b1 P2, M2, U175, M191
நடுவண் கிழக்குப் பகுதி R1b1a V88, M18

ஊன்குருத்து மரபன் (mtDNA)[தொகு]

தோற்றம் ஒருமைப் பண்புக் குழு
ஐரோப்பா H1
ஐரோப்பா H11a
ஐரோப்பா H1a
ஐரோப்பா H1b
ஐரோப்பா H2a
ஐரோப்பா H3
ஐரோப்பா H5a
ஐரோப்பா H6a
ஐரோப்பா H7
ஐரோப்பா HV0/HV0a/V
ஐரோப்பா I4
ஐரோப்பா J1c7
ஐரோப்பா J2b1
ஐரோப்பா T2b*
ஐரோப்பா T2b4
ஐரோப்பா T2e
ஐரோப்பா U4c1
ஐரோப்பா U5*
ஐரோப்பா U5a
ஐரோப்பா U5a1b1
ஐரோப்பா U5b*
ஐரோப்பா U5b1b*
ஐரோப்பா U5b1c
ஐரோப்பா U5b3
ஐரோப்பா X2c'e
நடுவண் கிழக்குப் பகுதி I
நடுவண் கிழக்குப் பகுதி A
நடுவண் கிழக்குப் பகுதி B
நடுவண் கிழக்குப் பகுதி C/Z
நடுவண் கிழக்குப் பகுதி D/G/M9/E
நடுவண் கிழக்குப் பகுதி F
நடுவண் கிழக்குப் பகுதி H*
நடுவண் கிழக்குப் பகுத H13a1
நடுவண் கிழக்குப் பகுதி H14a
நடுவண் கிழக்குப் பகுதி H20
நடுவண் கிழக்குப் பகுதி H2a1
நடுவண் கிழக்குப் பகுதி H4
நடுவண் கிழக்குப் பகுதி H6b
நடுவண் கிழக்குப் பகுதி H8
நடுவண் கிழக்குப் பகுதி HV1
நடுவண் கிழக்குப் பகுதி I1
நடுவண் கிழக்குப் பகுதி J / J1c / J2
நடுவண் கிழக்குப் பகுதி J1a'b'e
நடுவண் கிழக்குப் பகுதி J1b1a1
நடுவண் கிழக்குப் பகுதி J1b2a
நடுவண் கிழக்குப் பகுதி J1d / J2b
நடுவண் கிழக்குப் பகுதி J1d1
நடுவண் கிழக்குப் பகுதி J2a
நடுவண் கிழக்குப் பகுதி J2a2a1
நடுவண் கிழக்குப் பகுத K*
நடுவண் கிழக்குப் பகுதி K1a*
நடுவண் கிழக்குப் பகுதி K1b1*
நடுவண் கிழக்குப் பகுதி N1a*
நடுவண் கிழக்குப் பகுதி N1b
நடுவண் கிழக்குப் பகுதி N1c
நடுவண் கிழக்குப் பகுதி N2
நடுவண் கிழக்குப் பகுதி N9
நடுவண் கிழக்குப் பகுதி R*
நடுவண் கிழக்குப் பகுதி R0a
நடுவண் கிழக்குப் பகுதி T
நடுவண் கிழக்குப் பகுதி T1*
நடுவண் கிழக்குப் பகுதி T1a
நடுவண் கிழக்குப் பகுதி T2
நடுவண் கிழக்குப் பகுதி T2c
நடுவண் கிழக்குப் பகுதி T2i
நடுவண் கிழக்குப் பகுதி U1*
நடுவண் கிழக்குப் பகுதி U2*
நடுவண் கிழக்குப் பகுதி U2e
நடுவண் கிழக்குப் பகுதி U3*
நடுவண் கிழக்குப் பகுதி U4
நடுவண் கிழக்குப் பகுதி U4a*
நடுவண் கிழக்குப் பகுதி U7
நடுவண் கிழக்குப் பகுதி U8*
நடுவண் கிழக்குப் பகுதி U9a
நடுவண் கிழக்குப் பகுதி X
நடுவண் கிழக்குப் பகுதி X1a
நடுவண் கிழக்குப் பகுதி X2b1
வட ஆப்பிரிக்கா L3e5
வட ஆப்பிரிக்கா M1
வட ஆப்பிரிக்கா M1a1
வட ஆப்பிரிக்கா U6a
வட ஆப்பிரிக்கா U6a1'2'3
வட ஆப்பிரிக்கா U6b'c'd
கிழக்கு ஆப்பிரிக்கா L0*
கிழக்கு ஆப்பிரிக்கா L0a1
கிழக்கு ஆப்பிரிக்கா L0a1b
கிழக்கு ஆப்பிரிக்கா L0a2*
கிழக்கு ஆப்பிரிக்கா L3c/L4/M
கிழக்கு ஆப்பிரிக்கா L3d1a1
கிழக்கு ஆப்பிரிக்கா L3d1d
கிழக்கு ஆப்பிரிக்கா L3e1*
கிழக்கு ஆப்பிரிக்கா L3f*
கிழக்கு ஆப்பிரிக்கா L3h1b*
கிழக்கு ஆப்பிரிக்கா L3i*
கிழக்கு ஆப்பிரிக்கா L3x*
கிழக்கு ஆப்பிரிக்கா L4a'b*
கிழக்கு ஆப்பிரிக்கா L5*
கிழக்கு ஆப்பிரிக்கா L6
கிழக்கு ஆப்பிரிக்கா N* / M* / L3*
மேற்கு ஆப்பிரிக்கா L1b*
மேற்கு ஆப்பிரிக்கா L1b3
மேற்கு ஆப்பிரிக்கா L1c*
மேற்கு ஆப்பிரிக்கா L1c2
மேற்கு ஆப்பிரிக்கா L2*
மேற்கு ஆப்பிரிக்கா L2a
மேற்கு ஆப்பிரிக்கா L2a1*
மேற்கு ஆப்பிரிக்கா L2a1a2'3'4
மேற்கு ஆப்பிரிக்கா L2a1b
மேற்கு ஆப்பிரிக்கா L2a1b'f
மேற்கு ஆப்பிரிக்கா L2a1c1'2
மேற்கு ஆப்பிரிக்கா L2a1(16189)
மேற்கு ஆப்பிரிக்கா L2a2
மேற்கு ஆப்பிரிக்கா L2b*
மேற்கு ஆப்பிரிக்கா L2c1'2
மேற்கு ஆப்பிரிக்கா L2d
மேற்கு ஆப்பிரிக்கா L2e
மேற்கு ஆப்பிரிக்கா L3b
மேற்கு ஆப்பிரிக்கா L3b1a3
மேற்கு ஆப்பிரிக்கா L3b(16124!)
மேற்கு ஆப்பிரிக்கா L3b2a
மேற்கு ஆப்பிரிக்கா L3d*
மேற்கு ஆப்பிரிக்கா L3e2'3'4
மேற்கு ஆப்பிரிக்கா L3f1b*

மேலும் காண்க[தொகு]

ஒருமைப் பண்பு வகைமை

மாந்தரின ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழு

மாந்தரின ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழு

நிகரிணைக் குறுமவகம்

தொல்மரபியல்

மேற்கோள்கள்[தொகு]

 1. By C. Barry Cox, Peter D. Moore, Richard Ladle. Wiley-Blackwell, 2016. ISBN 978-1-118-96858-1 p106. Biogeography: An Ecological and Evolutionary Approach
 2. Editorial Board, V&S Publishers, 2012, ISBN 9381588643 p137.Concise Dictionary of Science
 3. Arora, Devender; Singh, Ajeet; Sharma, Vikrant; Bhaduria, Harvendra Singh; Patel, Ram Bahadur (2015). "Hgs Db: Haplogroups Database to understand migration and molecular risk assessment". Bioinformation 11 (6): 272–5. doi:10.6026/97320630011272. பப்மெட்:26229286. 
 4. International Society of Genetic Genealogy 2015 Genetics Glossary
 5. "Haplogroup definition in DNA--NEWBIE GLOSSARY". The International Society of Genetic Genealogy.
 6. "Y Chromosome Consortium". Archived from the original on 2017-01-16. பார்க்கப்பட்ட நாள் 2016-10-09.
 7. "Phylogeography of Y-chromosome haplogroup I reveals distinct domains of prehistoric gene flow in europe". American Journal of Human Genetics 75 (1): 128–37. Jul 2004. doi:10.1086/422196. பப்மெட்:15162323. பப்மெட் சென்ட்ரல்:1181996. http://www.familytreedna.com/pdf/DNA.RootsiHaplogroupISpread.pdf. பார்த்த நாள்: 2016-10-22. 
 8. "PhyloTree.org".
 9. "The evidence of mtDNA haplogroup F in a European population and its ethnohistoric implications". European Journal of Human Genetics 9 (9): 717–23. Sep 2001. doi:10.1038/sj.ejhg.5200709. பப்மெட்:11571562. 
 10. "Introducing the Algerian mitochondrial DNA and Y-chromosome profiles into the North African landscape". PLOS ONE 8 (2): e56775. 2013. doi:10.1371/journal.pone.0056775. பப்மெட்:23431392. 
 11. "Common genetic ancestors lived during roughly same time period". 1 Aug 2013. பார்க்கப்பட்ட நாள் 23 Jan 2015.
 12. "Upper Palaeolithic Siberian genome reveals dual ancestry of Native Americans". Nature 505 (7481): 87–91. Jan 2014. doi:10.1038/nature12736. பப்மெட்:24256729. 
 13. 13.0 13.1 13.2 "Improved phylogenetic resolution and rapid diversification of Y-chromosome haplogroup K-M526 in Southeast Asia". European Journal of Human Genetics 23 (3): 369–73. Mar 2015. doi:10.1038/ejhg.2014.106. பப்மெட்:24896152. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Haplogroups
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


பொது[தொகு]

செய்திகள்[தொகு]

அனைத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்[தொகு]

Y-Chromosome - *http://www.scs.uiuc.edu/~mcdonald/WorldHaplogroupsMaps.pdf

ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்[தொகு]

ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்[தொகு]

மென்பொருள்[தொகு]

 1. "PhyloTree.org".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒருமைப்_பண்புக்_குழு&oldid=3792916" இலிருந்து மீள்விக்கப்பட்டது