மாந்தரின ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கருதுகோள்நிலை மாந்தரின நகர்வுக்கான உலகப் பரவல் படம். மையத்தில் உலக வடமுனை உள்ளது.. நகர்வு தொடங்கும் ஆப்பிரிக்கா மேல் இடதும் நகர்வு முடியும் தென் அமெரிக்கா மிக வலதிலும் காட்டப்பட்டுள்ளது. நகர்வு ஊன்குருத்து மரபன் ஆய்வு வெளிப்படுத்தும் தாய்க்கால்வழி வரிசைப்படி உள்ளது. எழுத்துகள் ஒருமைப் பண்புக் குழுக்களைக் குறிக்கின்றன.வண்ணங்களும் எண்களும் அண்மாஇக்கு முந்தைய ஆண்டுகளைக் குறிக்கின்றன.
ஊன்குருத்து மரபன் வேறுபாட்டின்படி ஆப்பிரிக்கவில் இருந்தான மாந்தரின நகர்வு வழித்தட முன்மொழிவு

மாந்தரின மரபியலில், மாந்தரின ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழு (human mitochondrial DNA haplogroup) என்பது மாந்தரின ஊன்குருத்து மரபன் வேறுபாட்டல் வரையறுக்கப்படுகிறது. இவை தொகுதிமரபுக் கால்வ்ழியின் கிளைபிரிவுப் புள்ளியைக் குறிக்கின்றன. தாய்வழிக் கால்வழியில் படிமலர்ச்சி வழித்தட்த்தைப் புரிந்துக்கொள்ளல் மக்கள்தொகை மரபியலில் இக்கால மாந்தரின் தாய்வழி மரபுக் கையளிப்பை மாந்தனின் ஆப்பிரிக்கத் தோற்றநிலையில் இருந்தே அறியவும் பின்னர் நேர்ந்த உலகப் பரவலை அறியவும் உதவுகிறது.

ஒருமைப் பண்புக் குழுக்களின் எழுத்துப் பெயர்கள் ஏ (A) முதல் இசட் (Z) வரை அமைந்துள்ளன. இவை கண்டுபிடிப்பு வரிசையில் அமைதலால், அவை உண்மையான மரபியல் உறவைக் காட்டுவதில்லை.

இந்த ஊன்குருத்துமரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள் அனைத்துக்குமான வேராக விளங்கும் கருதுகோள்நிலைப் பெண் அல்லது தாய்வழி மூதாதை மிக அண்மைப் பொது மூதாதை (MRCA), நிகழ்காலத்தில் வாழும் உலக மக்களின் மிக அண்மைப் பொது மூதாதை ஊன்குருத்து ஏவாள் எனப்படுகிறார்.


படிமலர்ச்சி உறவு[தொகு]

மாந்தரினப் புலம்பெயர்வுகளும் ஊன்குருத்து ஒருமைப் பண்புக் குழுக்களும்.PNG

கால்வழிக் கண்ணோட்டம்[தொகு]

இந்த்த் தொகுதிமரபுக் கிளைபிரிவு அமைப்பு 2009 இல் வெளியிட்ட வான் ஓவனு டைய கிளைபிரிவையும் [1] பின்னர் நடந்த ஆய்வுகளையும் சார்ந்தது .


பட்டியல் கண்ணோட்டம்[தொகு]

ஒருமைப் பண்புக் குழுக்களின் தோற்றக் காலநிரல்[தொகு]

ஐரோப்பிய ஒருமைப் பண்புக் குழுக்கள்[தொகு]

ஒருமைப் பண்புக் குழு தோன்றிய காலம் தோன்றிய இடம் மீஉயர் நிகழ்வெண்கள்
N 75,000 ஆண்டுகள் முன்பு மேற்காசியா, இந்தியா அல்லது தெற்காசியா
R 70,000 ஆண்டுகள் முன்பு மேற்காசியா, இந்தியா அல்லது தெற்காசியா
U 60,000 ஆண்டுகள் முன்பு years ago வடக்கிழக்கு ஆப்பிரிக்கா அல்லது தென்மேற்காசியா
pre-JT 55,000 ஆண்டுகள் முன்பு நடுவண் கிழக்குப் பகுதிகள்
JT 50,000 ஆண்டுகள் முன்பு நடுவண் கிழக்குப் பகுதிகள்
U5 50,000 ஆண்டுகள் முன்பு மேற்காசியா
U6 50,000 ஆண்டுகள் முன்பு வடக்காப்பிரிக்கா
U8 50,000 ஆண்டுகள் முன்பு மேற்காசியா
pre-HV 50,000 ஆண்டுகள் முன்பு அண்மைக் கிழக்குப் பகுதிகள்
J 45,000 ஆண்டுகள் முன்பு அண்மைக் கிழக்குப் பகுதிகள் அல்லது காகாசசு
HV 40,000 ஆண்டுகள் முன்பு அண்மைக் கிழக்குப் பகுதிகள்
H over 35,000 ஆண்டுகள் முன்பு மேற்காசியா
X over 30,000 ஆண்டுகள் முன்பு வடக் கிழக்கு ஐரோப்பா
U5a1 30,000 ஆண்டுகள் முன்பு ஐரோப்பா
I 30,000 ஆண்டுகள் முன்பு காகாச்சு அல்லது வடக் கிழக்கு ஐரோப்பா
J1a 27,000 ஆண்டுகள் முன்பு அண்மைக் கிழக்குப் பகுதி
W 25,000 ஆண்டுகள் முன்பு வடக் கிழக்கு ஐரோப்பா அல்லது வடமேற்கு ஆசியா
U4 25,000 ஆண்டுகள் முன்பு நடுவண் ஆசியா
J1b 23,000 ஆண்டுகள் முன்பு அண்மைக் கிழக்குப் பகுதி
T 17,000 ஆண்டுகள் முன்பு மெசப்பட்டோமியா
K 16,000 ஆண்டுகள் முன்பு அண்மைக் கிழக்குப் பகுதி
V 15,000 ஆண்டுகள் முன்பு இபேரியா, பின் சுகாண்டிநேவியாவுக்குப் புலம்பெயர்தல்
H1b 13,000 ஆண்டுகள் முன்பு ஐரோப்பா
K1 12,000 ஆண்டுகள் முன்பு அண்மைக் கிழக்குப் பகுதிகள்
H3 10,000 ஆண்டுகள் முன்பு மேற்கு ஐரோப்பா (எசுப்பானியம்)

ஆப்பிரிக்க ஒருமைப் பண்புக் குழுக்கள்[தொகு]

ஆப்பிரிக்காவில் A, B, C, D, E, F, G ஆகிய ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள் அமைந்துள்ளன.

ஆசிய ஒருமைப் பண்புக் குழுக்கள்[தொகு]

F, C, W, M, D, N, K, U, T, A, B, C, Z, U எனும் ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்களும் ஒவ்வொரு வகையிலும் பல வேறுபாடுகளும் உள்ளன.

மேலும் காண்க[தொகு]

 • கால்வழி வரிசை
  • ஏவாளின் ஏழு பெண்கள்
  • கால்வழி வரிசை மரபன் ஓர்வு
  • மரபியல் கால்வழி வரிசை
  • மக்கள்தொகைவாரியாக ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழு
 • மரபியல்
  • மாந்தரின ஊன்குருத்து மூலக்கூற்றுக் கடிகாரம்
  • மாந்தரின ஊன்குருத்து மரபியல்
  • மக்கள்தொகை மரபியல்

மேற்கோள்கள்[தொகு]

 1. "Updated comprehensive phylogenetic tree of global human mitochondrial DNA variation". Human Mutation 30 (2): E386–94. February 2009. doi:10.1002/humu.20921. பப்மெட் 18853457. 

வெளி இணைப்புகள்[தொகு]