ஒனகோனா

ஆள்கூறுகள்: 20°34′52″N 81°26′31″E / 20.581°N 81.442°E / 20.581; 81.442
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒனகோனா
ஒடமாதி
கிராமம்
கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோயில்
கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோயில்
ஒனகோனா is located in சத்தீசுகர்
ஒனகோனா
ஒனகோனா
சத்தீசுகரில் கிராமத்தின் அமைவிடம்
ஒனகோனா is located in இந்தியா
ஒனகோனா
ஒனகோனா
ஒனகோனா (இந்தியா)
ஆள்கூறுகள்: 20°34′52″N 81°26′31″E / 20.581°N 81.442°E / 20.581; 81.442
நாடுஇந்தியா
மாநிலம்சத்தீசுகர்
மாவட்டம்துர்க்
வட்டம்குருர்
அரசு
 • நிர்வாகம்ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்3.3673 km2 (1.3001 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்182
 • அடர்த்தி54/km2 (140/sq mi)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்491226

ஒடமாதி (Odemadih) என்றும் அழைக்கப்படும் ஒனகோனா(Onakona) என்பது இந்தியாவின் சத்தீசுகரின் துர்க் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். [1]

ஒனகோனா மகாநதி ஆற்றின் மீது கட்டப்பட்ட கேங்க்ரல் அணை நீர்த்தேக்கத்தின் கரையில் அமைந்துள்ளது. 21 ஆம் நூற்றாண்டில், தம்தரியைச் சேர்ந்த தீரத் ராஜ் புதான், மகாராட்டிராவில் உள்ள திரிம்பகேசுவர் சிவன் கோயிலைப் போல, ஒனகோனாவில் ஒரு சிவன் கோயிலைக் கட்டுவதற்கு ஆணையிட்டார். [2] கோயில் ஒருபுறம் மலையாலும், மறுபுறம் நீர்த்தேக்கத்தாலும் சூழப்பட்டுள்ளது. அருகில் ஒரு அருவி குளம் உள்ளது. இது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது. [3]

ஒனகோனா குருர் வட்டத்தில் அமைந்துள்ளது . கர்ராஜர் ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் வருகிறது. [4] 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, கிராமத்தில் 38 வீடுகளில் வசிக்கும் 95 ஆண்கள் மற்றும் 87 பெண்கள் உட்பட 182 பேர் வசிக்கின்றனர். 7 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 72.53% ஆகும். [5]

சான்றுகள்[தொகு]

  1. "PCA: Primary Census Abstract C.D. Block wise, Chhattisgarh - District Durg - 2011". Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  2. "ओनाकोना बनेगा पर्यटन स्थल" (in Hindi). Dainik Bhaskar. https://www.bhaskar.com/news/MAT-CHH-OTH-c-206-82046-NOR.html. 
  3. "नया साल मनाने के लिए जिले में है कई खूबसूरत स्थान" (in Hindi). Nai Dunia. https://www.naidunia.com/chhattisgarh/balod-there-are-many-beautiful-places-in-the-district-to-celebrate-the-new-year-7209589. 
  4. "बालोद के पर्यटन व धार्मिक स्थलों पर नए वर्ष में आज जुटेंगे पर्यटक". https://www.bhaskar.com/news/CHH-OTH-MAT-latest-dallirajhara-news-031503-1701920-NOR.html. 
  5. "PCA: Primary Census Abstract C.D. Block wise, Chhattisgarh - District Durg - 2011". Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2022-12-08."PCA: Primary Census Abstract C.D. Block wise, Chhattisgarh - District Durg - 2011". Office of the Registrar General & Census Commissioner, India. Retrieved 8 December 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒனகோனா&oldid=3814338" இலிருந்து மீள்விக்கப்பட்டது