உள்ளடக்கத்துக்குச் செல்

ஏ. கே. பசுலுல் ஹக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாக்காவிலுள்ள சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கத்துடன் குழப்பிக் கொள்ளவேண்டாம்
சேர்-இ-பங்களா
شیر بنگال
শের-এ-বাংলা
அபுல் காசெம் ஃபசுலுல் ஹக்
ابوالقاسم فضل الحق
আবুল কাশেম ফজলুল হক
கிழக்கு பாக்கிஸ்தான் ஆளுநர்
பதவியில்
1956–1956
குடியரசுத் தலைவர்இசுகந்தர் மிர்சா
பின்னவர்சுல்த்தானுதின் அகமது
கிழக்கு வங்காளத்தின் முதலமைச்சர்
பதவியில்
1954–1955
தலைமை ஆளுநர்குலாம் முகமது
இசுகந்தர் மிர்சா
பின்னவர்அபு உசைன் சர்க்கார்
வங்காளப் பிரதமர்
பதவியில்
1 ஏப்ரல் 1937 – 29 மார்ச் 1943
தலைமை ஆளுநர்விக்டர் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு
ஆளுநர்ஜான் ஆர்த்தர் எர்பெர்ட்டு
முன்னையவர்பதவி உருவாக்கம்
பின்னவர்கவஜா நசிமுத்தின்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அபுல் காசெம் ஃபசுலுல் ஹக்

(1873-10-26)26 அக்டோபர் 1873
பேகர்கஞ்சு, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(தற்போது ஜலோகட்டி, வங்காளதேசம்)
இறப்பு27 ஏப்ரல் 1962(1962-04-27) (அகவை 88)
டாக்கா, கிழக்கு பாக்கிஸ்தான், பாக்கித்தான்
(தற்போது டாக்கா, வங்காளதேசம்)
இளைப்பாறுமிடம்முத்தலைவர்களின் உயர்வேலைச் சமாதி (மோசோலியம்)
குடியுரிமைபிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (1873–1947)
பாக்கித்தான் மேலாட்சி அரசு (1947–1956)
பாக்கித்தான் (1956–1962)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
அகில இந்திய முசுலிம் லீக்
வேளாண் குடிமக்கள் கட்சி (கிரிசக் பிரஜா கட்சி )
தொழிலாளர் விவசாயி கட்சி
துணைவர்(கள்)குர்சிது பேகம்
ஜன்னத்துன்னிசா பேகம்
கதீஜா
பிள்ளைகள்ஏ. கே. ஃபேசுல் ஹக்
முன்னாள் கல்லூரிகொல்கத்தா பல்கலைக்கழகம்

அபுல் காசெம் ஃபசுலுல் ஹக் (Abul Kasem Fazlul Huq, உருது: ابوالقاسم فضل الحق‎;வங்காள மொழி: আবুল কাশেম ফজলুল হক; 26 அக்டோபர் 1873—27 ஏப்ரல் 1962);[1] பரவலாக சேர்-இ-பங்களா (வங்காளப் புலி) என்ற பட்டத்தால் அறியப்படுபவர், 1940இல் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்த பிரித்தானிய இந்தியாவின் கிழக்கு, வடமேற்கு மாகாணங்களை தன்னாட்சி பெற்ற இறைமையுள்ள மாகாணங்களாக உருவாக்க வேண்டும் என முழங்கியவரும் அதனை இலாகூர் முன்மொழிவில் வெளியிட்டவரும் ஆவார்.[2] 1943இல் பிரித்தானியப் பேரரசின் வங்காள மாகாணத்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] சிறப்பான வழக்கறிஞராகவும் வழக்குரைஞராகவும் இருந்த ஹக் இந்திய தேசிய காங்கிரசில் பொதுச் செயலராக பணியாற்றினார்; பின்னர் அகில இந்திய முசுலிம் லீக்கின் செயற்குழு உறுப்பினராக இருந்தார். 1929இல் வேளாண் குடிமக்கள் கட்சியை (கிரிசக் பிரஜா கட்சி ) நிறுவினார்.

டாக்காவிலுள்ள ஏ. கே. பசுலுல் ஐக்கின் சமாதி.

பாக்கித்தான் மேலாட்சி அரசு, இந்திய ஒன்றியம் என இரண்டு நாடுகளாகப் பிரிந்து இந்தியா விடுதலை பெற்றபோது, ஹக் பாக்கித்தானிற்கு குடிபெயர்ந்தார். புதிய கிழக்குப் பாக்கித்தானில் ஐக்கிய முன்னணி அரசில் முதலமைச்சராகவும் ஆளுநராகவும் பணியாற்றினார். பின்னதாக நடுவண் அரசில் உள்துறை, உணவு, வேளாண்மை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். வாழ்நாள் முழுமையும் வங்காளத் தேசியவாதியாகத் திகழ்ந்த ஹக், பாக்கித்தானின் விடுதலையில் முக்கியப் பங்காற்றிய தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். டாக்காவில் வங்காள அகாதெமியை நிறுவினார். 1962இல் மறைந்த இவர் இரம்னா பூங்காவில் (முத்தலைவர்களின் உயர்நிலை சமாதி) அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புள்ள பக்கங்கள்

[தொகு]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Gandhi, Rajmohan. (1986) Eight Lives, SUNY Press. p. 189. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88706-196-6.
  2. Rahman, Jahed (2014). Bends and Shades. Xlibris Corp. p. 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781493175048.
  3. "Post-Independence, a Prime Minister for Bengal!". The Times of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கே._பசுலுல்_ஹக்&oldid=3867206" இலிருந்து மீள்விக்கப்பட்டது