ஏலகிரி விரைவுத் தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஏலகிரி எக்ஸ்பிரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஏலகிரி விரைவுத் தொடருந்து (Yelagiri express) ஜோலார்பேட்டை, சென்னை இரயில் நிலையங்களுக்கு இடையில் இயக்கப்படும் ஒரு தினசரி தொடர்வண்டியாகும் [1][2]. வாணியம்பாடி, ஆம்பூர், மேல்பட்டி, வளத்தூர், குடியாத்தம், காட்பாடி, முகுந்தராயபுரம், வாலாசா சாலை, சோளிங்கர், அன்வர்த்திகான்பேட்டை, சித்தேரி, அரக்கோணம் சந்திப்பு, திருவள்ளூர், திருநின்றவூர், பெரம்பூர், சென்னை சென்ட்ரல் ஆகிய இடங்களில் இந்தத் தொடருந்து நிறுத்தப்படுகிறது.

ஏலகிரி விரைவுவண்டி

சார்புத் தகவல்[தொகு]

ஜோலார்பேட்டை அருகேயுள்ள ஏலகிரி மலைக்கு அருகே இருந்து இத்தொடருந்து புறப்படுவதால் ஏலகிரி விரைவுத் தொடருந்து என்பதை தன் பெயராகக் கொண்டுள்ளது. ஜோலார்பேட்டை ஏலகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஏலகிரி விரைவுத் தொடருந்து இப்பகுதி மக்களால் சுருக்கமாக ஜே.பி என்றழைக்கப்படுகிறது.

கூட்டமைவு[தொகு]

இந்த இரயில் பொதுவாக சக்தி வாய்ந்த அரக்கோணம் டபிள்யூ.ஏ.பி 4 இயந்திரத்தால் இழுக்கப்படுகிறது. இவ்வண்டியின் மொத்தமுள்ள 24 பெட்டிகளில் 20 பெட்டிகள் பொதுவான இரண்டாம் வகுப்புப் பெட்டிகளாகவும், 2 முதல் வகுப்புப் பெட்டிகளாகவும், 2 பெட்டிகள் சுமப்பு மற்றும் தடையுந்துப் பெட்டிகளாகவும் பிரிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று பெட்டிகள் பெண் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

சேவை[தொகு]

இந்தத் தொடருந்து விரைவுத் தொடருந்து என வகைப்படுத்தியிருந்தாலும் பல தொடருந்து நிலையங்களில் நின்று செல்கிறது. சென்னை சென்ட்ரலுக்கு காலை 9:10 மணிக்கு வந்து சேரும் இந்த இரயில் மாலையில் மீண்டும் 17:55 மணிக்கு புறப்படுகிறது.[3]

சான்றுகள்[தொகு]