ஏஃபெய்

ஆள்கூறுகள்: 31°52′N 117°17′E / 31.867°N 117.283°E / 31.867; 117.283
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏஃபெய் (Hefei, சீனம்: 合肥) சீனாவின் அன்ஹுயி மாகாணத்தின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமுமாகும்.[1] மாவட்ட நிலையிலுள்ள இந்த நகரம் அன்ஹுயியின் அரசியல், பொருளியல்,பண்பாட்டு மையமாகும். மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள இந்த நகரத்தின் வடக்கில் கூவைனானும், வடகிழக்கில் சூசௌவும், தென்கிழக்கில் உகுவும், தெற்கில் டோங்லிங்கும், தென்மேற்கில் அன்கிங்கும் மேற்கில் லுவான் நகரமும் எல்லைகளாக உள்ளன.

ஏஃபெய்
合肥市
மாவட்ட நிலை நகரம்
அன்ஹுயி மாகாணத்தில் ஏஃபெய் நகரின் அமைவிடம்
அன்ஹுயி மாகாணத்தில் ஏஃபெய் நகரின் அமைவிடம்
ஏஃபெய் is located in சீனா
ஏஃபெய்
ஏஃபெய்
சீனாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 31°52′N 117°17′E / 31.867°N 117.283°E / 31.867; 117.283
நாடுசீன மக்கள் குடியரசு
மாகாணம்அன்ஹுயி மாகாணம்
கவுன்ட்டி நிலை பிரிவுகள்7
அரசு
 • பொதுவுடமைக் கட்சி செயலர்சோங் குவோகுவாங் (宋国权)
 • நகரத் தந்தைலிங் யுன் (凌云)
பரப்பளவு
 • மாவட்ட நிலை நகரம்11,434.25 km2 (4,414.79 sq mi)
 • நகர்ப்புறம்725 km2 (280 sq mi)
 • Metro438.2 km2 (169.2 sq mi)
ஏற்றம்37 m (123 ft)
மக்கள்தொகை (2016 மதிப்பீடு)
 • மாவட்ட நிலை நகரம்78,69,000
 • அடர்த்தி690/km2 (1,800/sq mi)
 • நகர்ப்புறம் (2018)[2]38,65,000
 • நகர்ப்புற அடர்த்தி5,300/km2 (14,000/sq mi)
 • பெருநகர்37,18,000
 • பெருநகர் அடர்த்தி8,500/km2 (22,000/sq mi)
நேர வலயம்சீன நேரம் (ஒசநே+8)
அஞ்சல் குறியீடு230000
தொலைபேசி குறியீடு551
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுCN-AH-01
தானுந்து உரிம எண்ணொட்டுகள்皖A
மொ.உ.உ (2016)CNY 721.3 பில்லியன்
 - தனி நபர்CNY 92000
இணையதளம்hefei.gov.cn
நகர மரங்கள்
மக்னோலியா கிராண்டிஃபுளோரா (Magnolia grandiflora L.)
நகர மலர்கள்
இனிய ஒஸ்மான்ஹஸ் (Osmanthus fragrans Lour.)
மாதுளைப்பூ (Punica granatum L.)
ஏஃபெய்
"Hefei" in Chinese characters
சீன மொழி 合肥
PostalHofei
Literal meaning"Junction of the Fei [Rivers]"

இன்றைய ஏஃபெய் நகரம் சாங் வம்சத்திலிருந்து வந்தது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் அடிப்படையில் ஒரு நிர்வாக மையமாகவும், தெற்கே வளமான சமவெளிக்கான பிராந்திய சந்தையாகவும் இருந்தது. இது சமீபத்திய ஆண்டுகளில் உள்கட்டமைப்பின் வளர்ச்சியைக் கடந்துவிட்டது.[3]

புவியியல்[தொகு]

ஏஃபெய் நகரம் தென்-மத்திய அன்ஹுயியில் நாஞ்சிங்கிலிருந்து மேற்கே 130 கிலோமீற்றர் (81 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. நகரின் தென்கிழக்கில் 15 கிமீ (9 மைல்) தொலைவில் அமைந்துள்ள சாவோ ஏரி சீனாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றாகும். இருப்பினும் சமீபத்திய ஆண்டுகளில் துரதிர்ஷ்டவசமாக இந்த ஏரி நைதரசன் மற்றும் பாசுபரஸ் என்பவற்றால் மாசடைந்துள்ளது. அரசாங்கம், மக்களின் முயற்சிகளினால் மேம்பாட்டு நிலை அடைந்து வருகின்றது.

காலநிலை[தொகு]

ஏஃபெய் நகரம் கோப்பனின் காலநிலை வகைப்பாட்டுக்கமைய ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலையை கொண்டுள்ளது. இந்த நகரின் சராசரி ஆண்டு வெப்பநிலை 16.18 °C (61.1 °F) ஆகும். அதன் வருடாந்திர மழைவீழ்ச்சி 1,000 மில்லிமீற்றருக்கு (39 அங்குலம்) சற்று அதிகமாகும். இங்குள்ள கோடைகாலங்கள் வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும். சூலை மாதத்தின் சராசரி வெப்பநிலை 28.3 °C (82.9 °F) ஆகும். சூன், சூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில், தினசரி வெப்பநிலை 37 °C (99 °F) ஐ அடையலாம் அல்லது அதிகமாகலாம். நகரம் ஆண்டுதோறும் 1,868 மணிநேர பிரகாசமான சூரிய ஒளியைப் பெறுகிறது.[4]

வளி மாசுபாடு[தொகு]

மே மற்றும் சூன் மாதங்களில் காற்றின் தரம் குறைகிறது. நகரத்திற்கு வெளியே உள்ள விவசாயிகள் அடுத்த பயிரை நடவு செய்வதற்கான தயாரிப்பில் தங்கள் வயல்களை எரிப்பதன் விளைவாக நகரத்தில் புகைமூட்டம் ஏற்படுகின்றது. அன்ஹூயைச் சுற்றியுள்ள ஏஃபெய், ஷாங்காய் மற்றும் தியான்ஜின் உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களிலும் அடர்த்தியான புகை மூட்டம் இதனால் ஏற்படுகின்றது.

புள்ளிவிபரங்கள்[தொகு]

ஏஃபெயில் வாழ்கின்ற பெரும்பான்மையான மக்கள் ஹான் சீனர்கள் ஆவார்கள். நகரத்தில் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான ஹுய் சீனர்கள் வசிக்கின்றனர். அவர்களுக்காக ஒரு சில மசூதிகள் கட்டப்பட்டுள்ளன. நகரத்தில் உள்ள ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்களில் சிலர் அன்ஹூயின் பிற பகுதிகளிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவார்கள்.

பொருளாதாரம்[தொகு]

2016 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 627.43 பில்லியன் டாலராக (சுமார் 91.12 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) இருந்தது.

சீன உள்நாட்டுப் போருக்கு முன்பு, ஏஃபெயிற் முக்கிய தொழில் விவசாயமாக இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அன்ஹூயின் தலைநகரம் அன்கிங்கிலிருந்து ஏஃபெயிற்கு மாற்றப்பட்டது. நகரத்தின் வளர்ச்சிக்கு உதவுவதற்காக, நாட்டின் பல பகுதிகளிலிருந்து பல திறமையானவர்கள் வரவழைக்கப்பட்டனர். நவீன காலத்தில் இயந்திரங்கள், மின்னணுவியல், வேதியியல், எஃகு, வெண்சுருட்டு மற்றும் நெசவு ஆகிய தொழில்கள் நடைப்பெறுகின்றன.

2005 கோடையில் நகராட்சி அரசாங்கம் சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கட்டமைப்புகளை இடிப்பதன் மூலம் நகரத்தை அழகுபடுத்த வடிவமைக்கப்பட்ட மாற்றங்களைச் செயற்படுத்தியது. மேலும் நகரின் பல பகுதிகளில் நீண்டகாலமாக நிறுவப்பட்ட சந்தைகளை அகற்றியது. இந்த நடவடிக்கைகளால் உரிமம் பெறப்படாத, பெரும்பாலும் சுகாதாரமற்ற உணவகங்கள் அகற்றப்பட்டன. இந்த மாற்றங்களினால் நகரம் முழுவதும் ஒரே இரவில் நீண்டகாலம் பல தெருக்களில் வரிசையாகக் அமைந்திருந்த வர்த்தக நிலையங்கள் அகற்றப்பட்டன. குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போனதால் இதன் தாக்கம் உள்ளூர் பொருளாதாரத்தில் உடனடியாக உணரப்பட்டது.

ஏஃபெய் சீனாவில் வளர்ந்து வரும் முதல் 20 நகரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.[5]

இந்த நகரம் உலகின் மிக வேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் பெருநகரமாக 2012 ஆம் ஆண்டில் திசம்பரில் தி எகனாமிஸ்ட்டால் அடையாளம் காணப்பட்டது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions". PRC Central Government Official Website. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
  2. Cox, W (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition. St. Louis: Demographia. பக். 22. http://www.demographia.com/db-worldua.pdf. 
  3. "The Economist Intelligence Unit". country.eiu.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-12.
  4. "Hefi climate". web.archive.org. Archived from the original on 2013-03-18. பார்க்கப்பட்ட நாள் 2019-11-12.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  5. "THE RISE OF THE 'CHAMPS' - NEW REPORT MAPS BUSINESS OPPORTUNITY IN CHINA'S FASTEST GROWING CITIES". ResponseSource Press Release Wire. Archived from the original on 2019-11-12. பார்க்கப்பட்ட நாள் 2019-11-12.
  6. "Metro economies".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஃபெய்&oldid=3706539" இலிருந்து மீள்விக்கப்பட்டது