எஸ். எம். ஸ்ரீநாகேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராணுவத் தளபதி
எஸ். எம். ஸ்ரீநாகேஷ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1903-05-11)11 மே 1903
கோலாப்பூர், கோலாப்பூர் அரசு, பிரித்தானிய இந்தியா
(தற்போதைய மகாராட்டிரம், இந்தியா)
இறப்பு27 திசம்பர் 1977(1977-12-27) (அகவை 74)
புது தில்லி, இந்தியா
துணைவர்இராஜ்குமார் கோச்சார்
பிள்ளைகள்5

இராணுவத் தளபதி சத்யவந்த் மல்லன்னா ஸ்ரீநாகேஷ் (Satyawant Mallanna Shrinagesh) (சத்யவந்த் ஸ்ரீநாகுலே மல்லன்னா என்றும் அழைக்கப்படுகிறார்) (11 மே 1903 - 27 டிசம்பர் 1977) ஒரு இந்திய இராணுவ அதிகாரி ஆவார். இவர் 14 மே 1955 முதல் 7 மே 1957 வரை இந்தியத் தரைப்படையில் 3 வது இராணுவத் தளபதியாக பணியாற்றினார். [1] [2] [3] ஓய்வுக்குப் பிறகு இவர் 14 அக்டோபர் 1959 முதல் 12 நவம்பர் 1960 வரையிலும், மீண்டும் 13 ஜனவரி 1961 முதல் 7 செப்டம்பர் 1962 வரையிலும் அசாம் ஆளுநராகப் பணியாற்றினார். 8 செப்டம்பர் 1962 முதல் 4 மே 1964 வரை ஆந்திரப் பிரதேச ஆளுநராகவும், 4 மே 1964 முதல் ஏப்ரல் 2, 1965 வரை மைசூர் ஆளுநராகவும் இருந்தார். 1957 முதல் 1959 வரை ஐதராபாத் இராச்சியத்தில் ஐதராபாத்தில் இந்திய நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

1934 இல், ஸ்ரீநாகேஷ், ராஜ்குமாரி கோச்சார் என்பவரை மணந்தார் . [4] [5] இவர்களுக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் இருந்தனர். சதீஷ் என்ற இவரது ஒரு மகன் இந்திய ராணுவத்தில் சேர்ந்து மேஜராக ஓய்வு பெற்றார். [4]

இறப்பு[தொகு]

1950 களின் பிற்பகுதியில் நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட [6] ஸ்ரீநாகேஷ் 27 டிசம்பர் 1977 அன்று காலை ராணுவ மருத்துவமனையில் இறந்தார்.[7] [8]

மேலும் படிக்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Devon, destiny, drama in the skies". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2014-02-13.
  2. "Satyavant Mallannah Shrinagesh - Munzinger Biographie".
  3. "The Sunday Tribune - Spectrum".
  4. 4.0 4.1 "Showers of love as Army's grand old lady turns 100". The Tribune (Chandigarh). 15 April 2015. https://www.tribuneindia.com/news/archive/chandigarh/showers-of-love-as-army-s-grand-old-lady-turns-100-67639. 
  5. "Rajkumari Shrinagesh". The Times of India. 2 February 2017. https://timesofindia.indiatimes.com/rajkumari-shrinagesh/articleshow/56931766.cms. 
  6. "Showers of love as Army's grand old lady turns 100". The Tribune (Chandigarh). 15 April 2015. https://www.tribuneindia.com/news/archive/chandigarh/showers-of-love-as-army-s-grand-old-lady-turns-100-67639. 
  7. "General S.M. Shrinagesh Passes Away" (PDF). Press Information Bureau of India - Archive. 27 December 1977. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
  8. "General Shrinagesh Cremated" (PDF). Press Information Bureau of India - Archive. 28 December 1977. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எம்._ஸ்ரீநாகேஷ்&oldid=3784928" இலிருந்து மீள்விக்கப்பட்டது