எம்மி நோய்தர்
எம்மி நோய்தர் | |
---|---|
பிறப்பு | அமாலி எம்மி நோய்தர் 23 மார்ச்சு 1882 எர்லாங்கன், பவாரியா இராச்சியம், செருமானியப் பேரரசு |
இறப்பு | 14 ஏப்ரல் 1935 பென்சில்வேனியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் | (அகவை 53)
தேசியம் | ஜெர்மானியார் |
துறை | கணிதம் மற்றும் இயற்பியல் |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் | எர்லாங்கன் பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | மும்மடங்கு இருவகை அமைப்புகளுக்கான மாறுபாடுகளின் முழுமையான அமைப்புகளில் ஆய்வு (1907) |
ஆய்வு நெறியாளர் | பால் கார்டன் |
அறியப்படுவது |
|
விருதுகள் | அக்கர்மேன்-டியூப்னர் நினைவு விருது(1932) |
அமாலி எம்மி நோய்தர் (Amalie Emmy Noether)[a] , 23 மார்ச் 1882 – 14 ஏப்ரல் 1935) செருமானிய கணிதவியலாளர் ஆவார். சுருக்க இயற்கணித ஆய்வுகளுக்காக அறியப்படுகிறார். கணித இயற்பியலில் அடிப்படையான நோதரின் முதல் மற்றும் இரண்டாவது தேற்றத்தை கண்டுபிடித்தார்.[1] பாவெல் அலெக்ஸாண்ட்ரோவ், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஜீன் டியூடோன், ஹெர்மன் வெயில் மற்றும் நார்பர்ட் வீனர் ஆகியோரால் கணித வரலாற்றில் "மிக முக்கியமான பெண்மணி" என்று வர்ணிக்கப்படுகிறார்.[2] இவரது காலத்தின் முன்னணி கணிதவியலாளர்களில் ஒருவராக, இவர் வளையம், களங்கள் மற்றும் இயற்கணிதங்களின் சில கோட்பாடுகளை உருவாக்கினார். இயற்பியலில், நோதரின் தேற்றம் சமச்சீர் மற்றும் காப்பு விதிகளுக்கு இடையிலான தொடர்பை விளக்குகிறது.[3]
வாழ்க்கை
[தொகு]பிராங்கோனிய நகரமான எர்லாங்கனில் யூதக் குடும்பத்தில் கணிதவியலாளர் மாக்ஸ் நோதர் என்பவருக்கு மகளாக பிறந்தார். ஆரம்பக் கல்விக்குப் பிறகு பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் கற்க திட்டமிட்டார். ஆனால் அதற்கு பதிலாக இவரது தந்தை விரிவுரை செய்து வந்த எர்லாங்கன் பல்கலைக்கழகத்தில் கணிதம் படித்தார். பால் கோர்டனின் மேற்பார்வையின் கீழ் 1907-இல்[4] தனது முனைவர் பட்டத்தை முடித்த பிறகு, எர்லாங்கனின் கணித நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் ஊதியம் இல்லாமல் பணியாற்றினார். அந்த நேரத்தில், பெண்கள் பெரும்பாலும் கல்வி நிலைகளில் இருந்து விலக்கப்பட்டிருந்தனர். 1915 ஆம் ஆண்டில், உலகப் புகழ்பெற்ற கணித ஆராய்ச்சி மையமான கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் சேர டேவிடு இல்பேர்ட்டு மற்றும் பெலிக்ஸ் க்ளீன் ஆகியோரால் அழைக்கப்பட்டார். இருப்பினும், தத்துவ பீடத்தினர் ஆட்சேபித்தனர். மேலும் இவர் ஹில்பர்ட்டின் பெயரில் நான்கு ஆண்டுகள் விரிவுரை ஆற்றினார். 1919 ஆம் ஆண்டில் இவரது குடியேற்றம் அங்கீகரிக்கப்பட்டது. இதனால் இவர் பிரைவேட்டோசென்ட் பதவியைப் பெற முடிந்தது.[4]
பணிகள்
[தொகு]1933 வரை கோட்டிங்கன் கணிதத் துறையின் முன்னணி உறுப்பினராக நோதர் இருந்தார்; இவரது மாணவர்கள் சில நேரங்களில் "நோதர் பாய்ஸ்" என்று அழைக்கப்பட்டனர். 1924 இல், டச்சுக் கணிதவியலாளர் பிஎல் வான் டெர் வேர்டன் இவருடன் சேர்ந்து, விரைவில் நோதரின் கருத்துகளின் முன்னணி விளக்கமளிப்பவராக ஆனார்; 1931 ஆம் ஆண்டு இவரது செல்வாக்குமிக்க பாடப்புத்தகமான மாடர்ன் அல்ஜிப்ராவின் இரண்டாம் தொகுதிக்கு அவரது பணி அடித்தளமாக அமைந்தது. 1932 ஆம் ஆண்டு சூரிக்கு நகரில் நடந்த அனைத்துலகக் கணித அறிஞர் பேரவையில் இவர் உரையாற்றிய நேரத்தில், இவரது இயற்கணித அறிவு உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, ஜெர்மனியின் நாஜி அரசாங்கம் யூதர்களை பல்கலைக்கழக பதவிகளில் இருந்து நீக்கியது. இதனால் நோதர் அமெரிக்காவிற்குச் சென்று பென்சில்வேனியாவில் உள்ள பிரைன் மாவர் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். அங்கு அவர் மேரி ஜோஹன்னா வெயிஸ், ரூத் உள்ளிட்ட முனைவர் மற்றும் முதுகலை பட்டதாரிகளைப் பயிற்றுவித்தார். அதே நேரத்தில், நியூ செர்சியின் பிரின்ஸ்டனிலுள்ள மேம்பட்ட படிப்புக்கான நிறுவனத்தில் விரிவுரை மற்றும் ஆராய்ச்சியையும் மேற்கொண்டார்.[4]
பிரபலமான நுண் இயற்கணிதம் என்ற நூலை எழுதியவர். அவரது சுருக்க இயற்கணித பகுதிக்காக பெரும்பான்மையான நேரத்தை செலவிட்ட மிக முக்கியமான கணிதவியலாளர்களில் ஒருவர். இவர் இயற்கணித மாறுபாடுகள் மற்றும் எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தினார். நோட்ஹெரின் தாளில், தியரி ஆஃப் ஐடில்ஸ் இன் ரிங்க் களங்கள், என்ற தனது கருத்துக்களை வழங்கினார். இவரது "பரிமாற்ற விதி " இயற்கணிதத்தின் ஒரு சுருக்கமான துணை பகுதியாகும்.
1908 முதல் 1919 வரை இவர் இயற்கணித மாற்றமிலிகள் குறித்தும் எண் புலங்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார். இவரது நோய்தரின் தேற்றம் "தற்கால இயற்பியல் மேம்பாடிற்கு மிகவும் துணைபுரிந்த மிக முதன்மையான கணிதத் தேற்றங்களில் ஒன்றாக" கருதப்படுகின்றது.[5] 1920 முதல் 1926 வரை அவர் பரிமாற்று வளையங்களில் சீர்மங்கள் குறித்த கருதுகோளை உருவாக்கினார். 1927–35 காலகட்டத்தில் பரிமாற்று வளையங்களைக் குறித்தும் அதிபர சிக்கலெண்கள் குறித்தும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். தவிரவும் பிற கணிதவியலாளர்களுக்கும் அவர்களது ஆய்விற்கு பல கருத்துருக்களை வழங்கி பல ஆய்வு கட்டுரைகளுக்கு வழிகாட்டியுள்ளார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Emmy is the Rufname, the second of two official given names, intended for daily use. Cf. for example the résumé submitted by Noether to Erlangen University in 1907 (Erlangen University archive, Promotionsakt Emmy Noether (1907/08, NR. 2988); reproduced in: Emmy Noether, Gesammelte Abhandlungen – Collected Papers, ed. N. Jacobson 1983; online facsimile at physikerinnen.de/noetherlebenslauf.html பரணிடப்பட்டது 29 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்). Sometimes Emmy is mistakenly reported as a short form for Amalie, or misreported as "Emily". e.g. Smolin, Lee, "Special Relativity – Why Can't You Go Faster Than Light?", Edge, archived from the original on 30 July 2012, பார்க்கப்பட்ட நாள் 6 March 2012,
Emily Noether, a great German mathematician
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Emily Conover (12 June 2018). "Emmy Noether changed the face of physics; Noether linked two important concepts in physics: conservation laws and symmetries". Sciencenews.org. பார்க்கப்பட்ட நாள் 2 July 2018.
- ↑ Alexandrov 1981, ப. 100.
- ↑ Ne'eman, Yuval, The Impact of Emmy Noether's Theorems on XXIst Century Physics in Teicher (1999)Teicher 1999, ப. 83–101.
- ↑ 4.0 4.1 4.2 Ogilvie, M. B., & Harvey, J. D. (2000). The biographical dictionary of women in science: Pioneering lives from ancient times to the mid-20th century. New York: Routledge. p. 949
- ↑ Lederman & Hill 2004, ப. 73.
வெளியிணைப்புகள்
[தொகு]- Personal documents
- Noether Lebensläufe (in ஜெர்மன்), DE: Physikerinnen, archived from the original on 29 September 2007, பார்க்கப்பட்ட நாள் 20 October 2006. Noether's application for admission to the University of Erlangen and three curricula vitae, two of which are shown in handwriting, with transcriptions. The first of these is in Emmy Noether's own handwriting.
- "Letter from Emmy Noether to Dr. Marion Edwards Park, President of Bryn Mawr College". TriArte. Bryn Mawr College.
Letter from Emmy Noether to Marion Edwards Park
- Photographs
- "Amalie Emmy Noether". TriArte. Bryn Mawr College.
Photograph of Emmy Noether
- "Noether", Oberwolfach (collection of photographs), Germany: MFO
- Academic biographies
- Byers, Nina, "Emmy Noether", Contributions of 20th Century Women to Physics, UCLA, archived from the original on 12 February 2008
- Kimberling, Clark, Emmy Noether, Mentors & Colleagues, Evansville, archived from the original on 22 February 2007
- கணித மரபியல் திட்டத்தில் எம்மி நோய்தர்
- O'Connor, John J.; Robertson, Edmund F., "எம்மி நோய்தர்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- "Emmy Noether", Biographies of Women Mathematicians, Agnes Scott College.
- "Special Issue on Women in Mathematics". Notices of the American Mathematical Society (American Mathematical Society) 38 (7): 701–773. September 1991. https://www.ams.org/journals/notices/199109/199109FullIssue.pdf.
- 2019 Interdisciplinary conference on the occasion of the 100th anniversary of Emmy Noether's habilitation organized by de:Exzellenzcluster MATH+; Central Women's Representative, de:Freie Universität Berlin and de:Max-Planck-Institut für Wissenschaftsgeschichte (in German)
- Huffman, Cynthia (27 July 2018). "Activity: Emmy Noether and Modular Arithmetic". Open Educational Resources - Math (Pittsburg State University). https://digitalcommons.pittstate.edu/oer-math/11/.
- Rowe, David E.; Koreuber, Mechthild (2020). Proving it her way : Emmy Noether, a life in mathematics. Cham, Switzerland: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-030-62811-6.
- Rowe, David E. (2021). Emmy Noether -- mathematician extraordinaire. Cham, Switzerland: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-030-63810-8.
- Newspaper articles
- Angier, Natalie (26 March 2012), "The Mighty Mathematician You've Never Heard Of", The New York Times
- Phillips, Lee (May 2015). "The female mathematician who changed the course of physics—but couldn't get a job". Ars Technica. California: Condé Nast.
- Audio discussions
- Melvyn Bragg, தொகுப்பாசிரியர் (2019-01-24). "Emmy Noether". In Our Time (London: பிபிசி). http://open.live.bbc.co.uk/mediaselector/6/redir/version/2.0/mediaset/audio-nondrm-download/proto/http/vpid/p07jtkv7.mp3. "With: Colva Roney-Dougal, Professor of Pure Mathematics at the University of St Andrews; David Berman, Professor in Theoretical Physics at Queen Mary, University of London; Elizabeth Mansfield, Professor of Mathematics at the University of Kent.".