எண்குணத்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இறைவனுக்குக் குணம் உண்டு. நம் எண்ணந்தான் அவன் குணம். எப்படி இருப்பான், எப்படி நடந்துகொள்வான் என நாம் எண்ணுகிறோமோ அப்படி இருப்பான். அப்படி நடந்துகொள்வான். கண் தெரியாத ஒருவனுக்கு வெள்ளைநிறம் என்பது என்ன என்று தெரியாது. காது கேளாத ஒருவனுக்கு ஆங்கிலமோ, தமிழோ எந்த மொழி பேணினாலும் தெரியாது. இவை ‘கோள்-இல் பொறி’கள் . என் மனத்துக்குத் தெரியும் இறைவன் இன்னொருவர் மனத்துக்குத் தெரிவதில்லை. இப்படித்தான் இறைவனைப்பற்றிய எண்ணங்களும் அவரவர் எண்ணத்தின் அளவினவே.

உரையாசிரியர்கள் பார்வை[தொகு]

 • மணக்குடவர் – எட்டுக் குணத்தினை உடையவன்
 • பரிதியார் – அனந்த ஞானம், அனந்த வீரியம், அனந்த குணம், அனந்த தெரிசனம், நாமம் இன்மை, கோத்திரம் இன்மை, அவா இன்மை, அழியா இயல்பு – என்னும் எட்டுக் குணம்.
 • காலிங்கர் – எண்ணப்பட்ட குணங்களை உடைய இறைவன்
 • பரிமேலழகர் – (3 வகையான 8 பிரிவுகளைக் காட்டுகிறார்)
  • (1)சைவ ஆகமத்தில் கூறப்பட்ட எண்வகைப்பட்ட குணங்கள் - தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என்பன.
  • (2) அணிமா முதலாக உடையன எட்டை எண்குணம் என்பர்
  • (3) கடையில்லா அறிவை முதலாக உடையன என்பர்
 • புலவர் குழந்தை – எளிமையாகிய குணம் உடையவன் எண்பொருளவாகச் செலச்சொல்லித் தான் பிறர் வாய் நுண்பொருள் காண்பது அறிவு – என்னும் திருக்குறளில் ‘எண்’ என்னும் அடைமொழி எளிமை என்னும் பொருளில் கையாளப்பட்டுள்ளதை இங்கு எண்ணவேண்டும்.
 • பகுத்தறிவாளர் சிலர் திருக்குறள் வழியே கூறும் 8 குணம்
 1. ஆதிபகவாக முதன்மை பெறுதல்
 2. வாலறிவாக முயலுதல்
 1. மலர்தலின் ஊடே ஏகல்
 2. விருப்புவெறுப்பு இன்மை
 1. வினையின்மை
 2. பொறிகளுக்குப் புலப்படாமை
 1. தனக்கு உவமை இல்லாமை
 2. அறவாழியாய்த் திகழ்தல்

காண்க[தொகு]

இறைவன், வள்ளுவர் பார்வை
இறைவன், அகப்பார்வை | ஆதிபகவன் | வாலறிவன் | மலர்மிசை ஏகினான் | வேண்டுதல் வேண்டாமை இலான் | பொறிவாயில் ஐந்து அவித்தான் | தனக்கு உவமை இல்லாதான் | அறவாழி அந்தணன் | எண்குணத்தான் | இறை வணக்கம் | நீத்தார் | தெய்வம் | ஊழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்குணத்தான்&oldid=1193739" இருந்து மீள்விக்கப்பட்டது