பேச்சு:எண்குணத்தான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டையுந் தனிதனிவைப்பதே நன்று. ஏனெனில் எண்குணத்தான் என்ற திருக்குறட் டொடரின் போக்கு வேறு. திருக்குறட் சூழலில் அதை வளர்க்கநேரிடும். சான்றாக ஒருவர் எளிய குணமுடையவன் என்ற புலவர் குழந்தையின் உரையைச் சுட்டியுள்ளார்; அது தவறு என்பதும் புலவர் குழந்தை ஆராய்ச்சியின் ஆராய்ச்சித்திறனை அது குறைபடுத்திகிறது என்பதும் வேறு. ஆனால் எண்குணம் என்பது பண்டை இந்தியாவுக்கு மரபான எண்குணங்கள் என்பதில் மாற்றமில்லை. அங்கே மேலும் பல தத்துவச் செய்திகளை விரிவாகக் குறிப்பிட வாய்ய்புண்டு.--Perichandra (பேச்சு) 01:48, 29 மார்ச் 2020 (UTC)

எண்குணம் என்ற கட்டுரையில் திருக்குறளில் கூறப்பட்ட எண்குணத்தானை மேலதிக தகவலாக உபதலைப்பாக இணைக்கலாம். அதனை வளர்க்க விரும்பின் வளர்க்கலாம். ஆனால் அது மேலும் வளர்வதற்கு வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். எண்குணத்தான் என்பதும் எண்குணத்தின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது. எண்குணம் கட்டுரையிலும் திருக்குறளை அடிப்படையாகக் கொன்டே எழுதப்பட்டுள்ளது. இரண்டு கட்டுரைகள் தேவையற்றது. எண்குணம் என்ற தலைப்பை முன்னிலைப்படுத்தி இணைக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 01:58, 29 மார்ச் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எண்குணத்தான்&oldid=2941189" இலிருந்து மீள்விக்கப்பட்டது