ஆதிபகவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதிபகவன் (ஒலிப்பு) என்னும் தொடரால் இறைவனைத் திருக்குறள் குறிப்பிடுகிறது.[1]
ஆதிபிரான் என்று திருப்பாணாழ்வார் திருமாலைக் குறிப்பிடுகிறார்.[2]
திருமந்திரம் ஆதிபரன் [3] ஆதி பராபரம் [4] ஆதிப்பிரான் [5] ஆதி அனாதி அகாரணி காரணி [6] என்னும் தொடர்களால் சிவபெருமானைக் குறிப்பிடுகிறது.

குடிமக்களை ஆளும் இறைவனைத் திருவள்ளுவர் 'ஆதி' எனக் குறிப்பிடுகிறார்.[7]

பகவு என்னும் சொல்லால் திருவள்ளுவர் தமக்குத் தெரியாமல் பகுதிபட்டிருக்கும் பொருளைக் குறிப்பிடுகிறார். அந்தப் பகவு எள்ளுக்குள் எண்ணெய் போலப் பகவுபட்டிருக்கும் என்பது அவர் விளக்கம்.[8]

வள்ளுவர் (கி.மு. 31) கண்ட இறை[தொகு]

இவற்றால் நாம் அறிவது என்ன?

  • அரசனைப் போல இறைவன் தனித்திருந்து நம்மை ஆளும்போது ஆதி.
  • உண்ட உணவை நமக்குள் சத்தாக மாற்றித் தரும்போதும், அறிவாக வெளிப்படுபோதும் நமக்குள் பகுதியாக விளங்கும் அவன் பகவு.
  • இதுவே ஆதிபகவு.
  • உள்ளேயும் வெளியேயும் இறைந்து கிடப்பது 'இறை'. இறையை இறைவன் என்பதும். 'ஆதிபகவு'-ஐ ஆதிபகவன் என்பதும் நம் கற்பனைச் சொல்லாக்கம். (personification)

தொடர் விளக்கம்

  • ஆதிபகவன் - 'சோழமன்னன்', 'கபிலபரணர்' என்பன போன்ற உயர்திணைச் சொற்களின் சேர்க்கை.
  • ஆதிப்பிரான் - ஆதியாகிய பிரான்

உவமை விளக்கம்

  • மேலே கண்ட விளக்கங்களைப் புரிந்துகொள்வதற்குத் திருவள்ளுவர் ஓர் உவமையைத் தந்துள்ளார். [அ] எழுத்தொலி மொழியிலுள்ள ஏனைய எழுத்தொலிகள் எல்லாவற்றிற்கும் முதலாய் விளங்குவது போல 'ஆதிபகவன்' உலகுக்கு முதலாய் விளங்குகிறான் என்கிறார்.
  • வாய் திறக்கும் முதல் முயற்சியில் பிறப்பது [அ].[9] உயிர் எழுத்துக்கள் எல்லாவற்றுக்குள்ளும் [அ] ஒலி உள்ளது. தனித்து இயங்கமுடியாத மெய்யெழுத்துக்கள் [அ] ஒலியுடன் கூடி ஒலிக்கின்றன. அதுபோல ஆதிபகவன் உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும், உடல்களுக்கும் முதலாய் விளங்குகிறான். 'உலகு' என்னும் சொல் உலவும் உரு, அரு ஆகிய அனைத்தையும் குறிக்கும்.[10]
  • ஆதிபகவன் = internal, initiative and inventive extension.
  • ஆதி = The Extensive
  • பகவு = The Intensive

அறிஞர் கண்ட விளக்கம்[தொகு]

ஆதிபகவன் என்னும் தொடருக்கு அறிஞர் கண்ட விளக்கங்கள்

’ஆதி’ தமிழ்ச்சொல்
பரிமேலழகர் ஆதிபகவன் என்னும் தொடரை வடநூல் முடிபு எனக் கூறுவது இரண்டு வடசொற்களால் ஆய தொடர் என்றபடி. ஆதல் என்னும் வினைப்பெயர் தமிழ்.[11] ஆதும் என்பது அதன் வினைச்சொல் [12] ஆதல் நிகழும் முதல் ஆதி.
’பகவன்’ தமிழ்ச்சொல்
எள்ளின் பகவாகிய எண்ணெய் போலக் கலந்திருப்பவனைக் குறிக்கும் தமிழ்ச்சொல்.[13]

மேலும் காண்க[தொகு]

இறைவன், வள்ளுவர் பார்வை
இறைவன், அகப்பார்வை | ஆதிபகவன் | வாலறிவன் | மலர்மிசை ஏகினான் | வேண்டுதல் வேண்டாமை இலான் | பொறிவாயில் ஐந்து அவித்தான் | தனக்கு உவமை இல்லாதான் | அறவாழி அந்தணன் | எண்குணத்தான் | இறை வணக்கம் | நீத்தார் | தெய்வம் | ஊழ்


அடிக்குறிப்பு[தொகு]

  1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - திருக்குறள் 1

  2. அமல னாதிபிரான் அடியார்க்கு என்னை யாட்படுத்த விமலன் நாலாயிர திவ்விய பிரபந்தம், பாடல் 927
  3. திருமந்திரம் 2751
  4. திருமந்திரம் 2543
  5. திருமந்திரம் 319, 2646, 3005,
  6. திருமந்திரம் 1114
  7. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல் - திருக்குறள் 543

  8. எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
    உட்பகை உள்ளதாம் கேடு. - திருக்குறள் 889

  9. அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும் - தொல்காப்பியம், பிப்பியல், 3
  10. உல் < உலவு < உலகு < உலண்டு(நூற்கண்டு)
  11. பணிவுடையன் என்சொலன் ஆதல் – திருக்குறள் 95,
  12. “ஆஅதும் என்னுமவர்” என்பது திருக்குறள் 653
  13. எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு – திருக்குறள் 889
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிபகவன்&oldid=2539012" இலிருந்து மீள்விக்கப்பட்டது