பொறிவாயில் ஐந்து அவித்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன நமது அறிவை இயக்கும் பொறிகள். இந்த அறிவுகளை இறைவன் நமக்குள் இயங்க வைத்துவிட்டு, தனக்குள் அவித்து வைத்துக்கொண்டான். அவித்த கரிக்கட்டை போலவும், அவித்த பயறு போலவும் வைத்துக்கொண்டுள்ளான். உலகைப் பார்ப்பது பொய்-ஒழுக்கம். உலகைக் கண்டும் காணாமல் இருப்பது ‘பொய்தீர் ஒழுக்கம்’.

உரையாசிரியர்கள் பார்வை[தொகு]

  • மணக்குடவர் – மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வழியாக வரும் ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்னும் ஐந்தின்கண்ணும் செல்லும் மனநிகழ்ச்சியை அடக்கியவன்
  • தாமத்தர் – ஐந்து ஆசைகளையும் அறுத்தவன்
  • நச்சர் – ஐம்புலன்களையும் வென்றவன்
  • தருமர் – ஐம்பொறிகளையும் அகத்து அடக்கிய இறைவன்.
  • பரிமேலழகர் – ஐந்து அவாவினையும் அறுத்தவன்
  • புலவர் குழந்தை – ஐம்புலன்களையும் அடக்கியவன்

இறைவனையும், மனிதனையும் வேறுபடுத்திக் காட்டுகிறது, இந்தக் குறள்.

இறைவன், வள்ளுவர் பார்வை
இறைவன், அகப்பார்வை | ஆதிபகவன் | வாலறிவன் | மலர்மிசை ஏகினான் | வேண்டுதல் வேண்டாமை இலான் | பொறிவாயில் ஐந்து அவித்தான் | தனக்கு உவமை இல்லாதான் | அறவாழி அந்தணன் | எண்குணத்தான் | இறை வணக்கம் | நீத்தார் | தெய்வம் | ஊழ்