எட்வர்ட் நீளவால் பெரும் எலி
எட்வர்ட் நீளவால் பெரும் எலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | மெய்க்கருவுயிரி |
திணை: | விலங்கு |
பிரிவு: | முதுகெலும்பி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | கொறிணி |
குடும்பம்: | முறிடே |
பேரினம்: | லியோபோல்டாமிசு |
இனம்: | லி. எட்வர்சி |
இருசொற் பெயரீடு | |
லியோபோல்டாமிசு எட்வர்சி தாமசு, 1882 | |
![]() |
எட்வர்ட் நீளவால் பெரும் எலி (Edwards's long-tailed giant rat)(லியோபோல்டாமிசு எட்வர்சி) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும். இது சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பர்மா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[2]
உணவு[தொகு]
எட்வர்ட் நீண்ட வால் பெரும் எலி இரவாடுதல் வகையினைச் சார்ந்தது. இரவு நேரங்களில் உணவு தேடும். இது முக்கியமாக நிலப்பரப்பில் உள்ள விதைகளைத் தேடுகிறது. இருப்பினும் உணவு தேவைக்காக மரங்களிலும் ஏறும்.[3]
வாழிடம்[தொகு]
முதன்மை மற்றும் இரண்டாம் நிலை ஈரமான தாழ் நில பசுமைமாறா மற்றும் மலைக் காடுகளில் கடல் மட்டத்திலிருந்து 1400 மீட்டர் உயரம் வரை காணப்படும்.
கூடுகள்[தொகு]
எட்வர்ட் நீண்ட வால் பெரும் எலி, வலைகளுக்குள் இலைகளைக் கொண்டு கூடுகளை உருவாக்குகிறது. கூடுகள் பெரும்பாலும் தரையில் இருக்கும் அல்லது மரப் பொந்துகளில் அமைக்கும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Aplin, K.; Lunde, D.; Molur, S. (2017). "Leopoldamys edwardsi". IUCN Red List of Threatened Species 2016: e.T11518A115103707. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T11518A22434258.en. https://www.iucnredlist.org/species/11518/115103707. பார்த்த நாள்: 12 March 2023.
- ↑ "Leopoldamys edwardsi (Thomas, 1882)" (in en). https://www.gbif.org/species/2437925.
- ↑ Musser , GG . 1981. A new genus of arboreal rat from West Java , Indonesia . Zool Verh . 189 : 1-35 . 7673