உள்ளடக்கத்துக்குச் செல்

எட்டுத்திக்கும் பற

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்டுத்திக்கும் பற
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கீரா
தயாரிப்புபி. பவினா பவுல்
விஜய ராமச்சந்திரன்
கதைகீரா
இசைஎம். எஸ். சிறீகாந்த்
நடிப்புசமுத்திரக்கனி
சாந்தினி தமிழரசன்
நிதிஷ் வீரா
முனீஷ்காந்த் ராமதாஸ்
ஒளிப்பதிவுசிபின் சிவன்
படத்தொகுப்புசாபு ஜோசப்
கலையகம்வர்ணாலயா சினி கிரியேசன்ஸ்
வெளியீடு6 மார்ச்சு 2020 (2020-03-06)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எட்டுத்திக்கும் பற (Ettuthikkum Para) என்பது 2020ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். கீரா இயக்கிய இப்படத்தில் சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, நிதிஷ் வீரா, முனீஷ்காந்த் ராமதாஸ் ஆகியோர் பிற வேடங்களில் நடித்துள்ளனர்.[1] இப்படமானது இளவரசன் திவ்யா திருமணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தருமபுரி கலவரத்தையும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த இளவரசன் மரணத்தையும் தாக்கமாக கொண்டு எடுக்கபட்டது.[2]

சுருக்கம்

[தொகு]

சமூக ஆர்வலரான அம்பேத்கர் ( சமுத்திரக்கனி ) அரசாங்கத்தின் இருண்ட பக்கங்களை கண்டறியும் பணியில் ஈடுபடுகிறார். இதனால், அவரது மகனும் நண்பர்களும் கொல்லப்படுகிறார்கள். ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞன் ( நிதிஷ் வீரா ) உயர் சாதிப் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறார். ஒரு பெண் ( சாந்தினி தமிழரசன் ) தனக்கு விருப்பமான நபரை திருமணம் செய்து கொள்ள சென்னை செல்கிறார். இரண்டு மூத்த குடிமக்கள் அவர்கள் இறக்கும் நாளுக்காக காத்திருக்கிறார்கள். தனது மகனின் உயிரைக் காப்பாற்ற பட்டாக்கதிக்கு ( முனீஷ்காந்த் ராமதாஸ் ) ரூ .20,000 தேவை. இந்த ஐந்து தனித்தனி கதைகள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பது மீதமுள்ள கதையாகும்.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

முன்னதாக பச்சை என்கிற காத்து (2012), மெர்லின் (2018) ஆகிய படங்களை இயக்கிய கீரா இந்த படத்தை இயக்கியுள்ளார், இது கௌரவக் கொலைகள் பற்றியது. இத்திரைப்படத்தின் பணிகளானது 2018 இல் பற என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ஆனால் இது ஒரு சாதியின் பெயரை ஒத்ததாக இருப்பதால் எட்டுத்திக்கும் பற என்று மாற்ற முடிவு செய்யப்பட்டது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சமுத்திரக்கனி ஒப்பந்தமானார்.[3] இந்த படம் பன்னிரண்டு மணிநேர காலப்பகுதியில் நடைபெறுவதாகவும், தற்செயலாக ஒன்று சேரும் பல்வேறு வகையான மனிதர்களைச் சுற்றியதாகவும் உள்ளது. இப்படம் வட சென்னை மற்றும் நாகர்கோவில் படமாக்கப்பட்டது.[4] சாதியை அடிப்படையாகக் கொண்ட கௌரவக் கொலைகளின் எதிர்மறை அம்சங்களை படம் எடுத்துக்காட்டுகிறது.[5]

இசை

[தொகு]

பாடல்களுக்கு எம். எஸ். ஸ்ரீகாந்த் இசையமைத்துள்ளார்.

பாடல் பெயர் பாடலாசிரியர் பாடகர்கள் நீளம்
"பற பற" சாவி முகேஷ் 3:15
"உசுருக்குள் உன் பேரா" சினேகன் அனுராதா ஸ்ரீராம், கேசவ் வினோத் 4:28
"வாடி செல்லம்" உமா தேவி அனந்து, சுகந்தி 4:55
முழு நீளம்: 12:38

வெளியீடு

[தொகு]

இப்படம் 2020 மார்ச்சில் வெளியிடப்பட்டது.[6]

தினமலர் படத்திற்கு ஐந்து புள்ளிகளில் ஒன்றை வழங்கியது.[7] மலை மலரின் விமர்சகர் ஒருவர் படத்தின் கதை, நடிகர்களின் நடிப்பு, இசை மற்றும் ஒளிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டினார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சமகாலத்தில் நடந்த-நடந்து கொண்டிருக்கிற ஆணவ கொலையை ரத்தமும், சதையுமாக சொல்கிறது - எட்டுத்திக்கும் பற". Daily Thanthi. 11 March 2020.
  2. "இயக்குநரின் குரல்: தீவில் மலரும் காதல்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  3. "Ettuthikkum Para: A new take on an old issue". The New Indian Express.
  4. Subramanian, Anuapama (14 July 2018). "Para: A journey of 12 hours". Deccan Chronicle.
  5. "'எட்டுத்திக்கும் பற' ஆணவக் கொலைக்கு எதிரான படம் - இயக்குநர் கீரா". Maalaimalar. 5 March 2020.
  6. . 
  7. "எட்டுத்திக்கும் பற - விமர்சனம் {1/5} : எட்டுத்திக்கும் பற - எழும்பினால்தானே பறப்பதற்கு... - Ettuthikkum para". Dinamalar.
  8. "ஐந்து கதைகள்... ஒரே மையப்புள்ளி - எட்டுத்திக்கும் பற விமர்சனம்". Maalaimalar. 9 March 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டுத்திக்கும்_பற&oldid=4161905" இலிருந்து மீள்விக்கப்பட்டது