2012 தருமபுரி வன்முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தருமபுரி வன்முறை அல்லது தருமபுரி கலவரம் என்பது 2012 நவம்பர் 7 அன்று தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டம் நத்தம், பழைய கொண்டாம்பட்டி, புதிய கொண்டாம்பட்டி, அண்ணாநகர் போன்ற ஊர்களில் உள்ள தலித் குடியிருப்புகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகளை எரித்த நிகழ்வைக் குறிக்கிறது. செல்லன் கொட்டாயைச் சேர்ந்த ஒரு வன்னிய பெண்ணும், அருகில் உள்ள நத்தம் தலித் குடியிருப்பைச் சேர்ந்த தலித் இளைஞனும் காதலித்தத் திருமணம் செய்துகொண்டனர். இத்திருமணத்தை எதிர்த்த வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்கள், நவம்பர் 7 அன்று நாயக்கன் கொட்டாயில் கூட்டம் நடத்தி, காலனியைச் சேர்ந்த பெரியவர்களிடம் அப்பெண்ணை அவரது பெற்றோரிடம் அனுப்பிவைக்க வேண்டுமென வற்புறுத்தினர். அந்தப் பெண் தன் கணவரின் வீட்டில் தங்க முடிவுச் செய்தார். இதை அடுத்து, இந்தத் திருமணத்தால் மனமுடைந்த அவரது தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த வன்னியர்களைக் கொண்ட 1500க்கும் மேற்பட்ட கும்பல் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த ஆதிதிராவிடர்களின் 200க்கும் மேற்பட்ட வீடுகள், வீட்டுப் பொருட்கள், வாகனங்கள் போன்றவற்றை சேதப்படுத்தியதுடன், தீயிட்டும் கொளுத்தியது. இதனால் இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் பணம் நாசமானது. நான்கு மணிநேரம் நீடித்த இந்த கும்பலின் சூறையாடல் காவல்துறையினரால் 90 பேர் கைது செய்யப்பட்டபிறகு கட்டுப்பாட்டுக்கு வந்தது. பாதுகாப்புக்காக 1,000க்கு மேற்பட்ட காவலர்கள் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டனர்.[1]

இந்த நிகழ்வானது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரான ச. இராமதாசும், அவரது கட்சியாலும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாக பலர் குற்றஞ்சாட்டினர், பல தலித்துகள் வேறு விதமாகவும் நம்புகிறார்கள். இந்த நிகழ்வுக்கும் பா.ம.க.க்கும் தொடர்பில்லை, இது வன்னியர் மற்றும் தலித் ஆகிய இரு சாதியினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலே என்றது.[2]

பாதிக்கப்பட்ட பலர் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் செயலற்றத் தன்மையே இந்த இழப்புகளுக்குக் காரணம் என குற்றம் சாட்டினர். இந்த வன்முறையில் ஈடுபட அருகில் உள்ள 22 கிராமங்களில் இருந்து ஒரே சாதியைச் சேர்ந்த கும்பல் திட்டமிட்டு திரட்டப்பட்டது. 300க்கும் மேற்பட்ட காவலர்கள் இருந்த போதிலும், அவர்களால் வன்முறைக் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, ஏனெனில் சேர்க்கப்பட்ட கும்பலானது பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களை விட எட்டு மடங்கு அதிகமாக இருந்தனர்.[3][4] இளைஞனின் சாதியைச் சேர்ந்தவராக காவல் துணை ஆய்வாளர் என நம்பப்படுகிறது. அந்தப் பகுதியில் அமைதி காக்கும் பொறுப்பில் இருந்த காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர் அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பின்னணி[தொகு]

வட தமிழ்நாட்டில் கணிசமாக வாழும் வன்னியர்களின் மக்கள் தொகையானது 12-13 விழுக்காடு என மதிப்பிடப்பட்டுள்ளது, அதே சமயம் ஆதிதிராவிடர்கள் (தலித்) 11.5 விழுக்காடாக உள்ளனர். ஒரு காலத்தில் இப்பகுதியில் நக்சல்வாதம் ஓங்கி இருந்தது. அக்காலகட்டத்தில் இங்கு தீண்டாமை பாகுபாடு போன்றவற்றிற்கு எதிரான நிலைப்பாடு பெருமளவு நிலவியது. நக்சலியம் வீழ்ச்சியுற்றப் பிறகு, இப்பகுதி மக்கள் சாதி அடையாளம் மற்றும் அதிகாரத்தின் வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்டனர். இதனால் தலித்துகள் ஒடுக்குமுறை குழுக்களால் பாதிக்கப்படக்கூடிய ஒரு காலகட்டத்தை சந்தித்தனர் மற்றும் வன்னியர்கள் சாதிப்பெருமிதம் ஊட்டப்பட்டவர்களாக மாறினர். எனவே, வன்னியர்கள் மற்றும் தலித்துகளுக்கு இடையே தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டன.[5] 2012 ஏப்ரலில் மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெருவிழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற ஊறுப்பினரான, செ. குரு வன்னிய இன பெண்களை கலப்பு திருமணம் செய்பவர்களை வெட்டவேண்டும் என்றார்.[6][7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. K A Shaji, TNN; V Senthil Kumaran; Karthick S (9 November 2012). "Inter-caste marriage sparks riot in Tamil Nadu district, 148 dalit houses torched". Times of India இம் மூலத்தில் இருந்து 27 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130127015708/http://articles.timesofindia.indiatimes.com/2012-11-09/india/35015844_1_dalit-houses-dalit-youth-dalit-boy. பார்த்த நாள்: 30 April 2013.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-27. பார்க்கப்பட்ட நாள் 2018-05-30.
  2. http://www.indianexpress.com/news/love-and-violence-in-dharmapuri/1035856/2o
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-29. பார்க்கப்பட்ட நாள் 2018-05-30. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-29. பார்க்கப்பட்ட நாள் 2018-05-30.
  4. "Love and violence in Dharmapuri - Indian Express". பார்க்கப்பட்ட நாள் 9 December 2016.
  5. Warrier, Shobha. "The Rediff Interview/R Thirumalvalavan". Rediff. Rediff. பார்க்கப்பட்ட நாள் 30 April 2013.
  6. Chakra. "வெட்டி தள்ளுங்க..: சாதி உணர்வை தூண்டிய காடுவெட்டி குரு மீது மாமல்லபுரம் போலீஸ் வழக்குப்பதிவு". OneIndia. பார்க்கப்பட்ட நாள் 30 April 2013. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)
  7. "Double disadvantage". Archived from the original on 13 May 2014. பார்க்கப்பட்ட நாள் 9 December 2016.
  8. "Why I want to ask disturbing questions and say the unsaid". Archived from the original on 27 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 December 2016. ...Kaduvetti Guru has repeatedly been broadcasting this message. At a Chitra Pournami event in Mahabalipuram addressing Vanniyar youth, Guru openly exhorted that men of other castes marrying Vanniyar women should be killed.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2012_தருமபுரி_வன்முறை&oldid=3676418" இலிருந்து மீள்விக்கப்பட்டது