எச்டி 63765

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
HD 63765 / Tapecue
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Carina
வல எழுச்சிக் கோணம் 07h 47m 49.719s[1]
நடுவரை விலக்கம் −54° 15′ 50.93″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)8.10
இயல்புகள்
விண்மீன் வகைG9V
தோற்றப் பருமன் (B)8.85
தோற்றப் பருமன் (J)6.768
தோற்றப் பருமன் (H)6.442
தோற்றப் பருமன் (K)6.316
B−V color index0.75
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)22.1 கிமீ/செ
Proper motion (μ) RA: 147.67 ± 0.66[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −279.19 ± 0.71[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)30.07 ± 0.56[1] மிஆசெ
தூரம்108 ± 2 ஒஆ
(33.3 ± 0.6 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)5.537
விவரங்கள்
திணிவு0.85 ± 0.03[2] M
ஆரம்0.84 ± 0.02[2] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.51 ± 0.04[2]
ஒளிர்வு0.58 ± 0.01[2] L
வெப்பநிலை5483 ± 421[2] கெ
சுழற்சி26.7±6.7 d[3]
அகவை7.2 ± 3.6[2] பில்.ஆ
வேறு பெயர்கள்
CD−53°2007, HIP 38041, LTT 2952, NLTT 18486, PPM 336398, SAO 235521
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
NStEDdata
Extrasolar Planets
Encyclopaedia
data

எதிப 63765 (HD 63765) என்பது கரினா விண்மீன் தொகுப்பில் சுமார் 106 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள 8-ஆவது பருமை ஜி-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . இந்த விண்மீன் சூரியனை விட சிறியதும் குளிர்ச்சியானதும் மங்கலானதும் குறைவான பொருண்மை கொண்டதும் ஆகும், மேலும் சூரியனின் இரும்பு- ஐதரசன் விகிதத்தில் சுமார் 69% அளவுக்குக் குறைந்த இரும்பு உள்ளடக்கம் கொண்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில், விண்மீனைச் சுற்றி ஒரு வளிமப் பெருங்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

எதிப 63765 என்ற விண்மீன் தப்பெக்கு எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் புற உலகங்கள் பெயரிடை பரப்புரைத் திட்டத்தின் ஒரு பகுதியாக அதன்ன் 100வது ஆண்டு விழாவில் பொலிவியாவால் தேர்ந்தெடுக்கப்பட்டது. Tapecue (நவீன Tapekue) என்பது அதாவது குரானியில் உள்ள 'நித்திய பாதை', புவியின் முதல் மக்கள் வந்து திரும்பி வரக்கூடிய பால்வெளி ஆகும். எதிப 63765 பி கோளுக்கு இவகா என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்பெயர் என்பது குரானியில் 'வானம்' அல்லது 'துறக்கம்' என்று பொருள்படும். மேலும், பால்வெளளீவகாவுக்குச் செல்லும் வழித்தடம் என்று அறியப்பட்டது. [4] [5]

கோள் அமைப்பு[தொகு]

எதிப 63765 பி என்பது விண்மீனைச் சுற்றி வரும் ஒரு புறக்கோள் ஆகும். இந்தக் கோள் வியாழனை விட சிறியதும் 0.64 மடங்கு பொருண்மை கொண்டதும் ஆகும். இது 0.94 வானியல் அலகு தொலைவில் ஓர் அரை பெரச்சில் விண்மீனைச் சுற்றி வர 358 நாட்கள் ஆகிறது. 2009 அக்தோபரில் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் இந்தக் கோள் அறிவிக்கப்பட்டது.

எச்டி 63765 தொகுதி[6]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b / Yvaga ≥0.64 ± 0.05 MJ 0.940 ± 0.016 358.0 ± 1.0 0.240 ± 0.043

மேலும் பார்க்கவும்[தொகு]

  • சூரியப் புறக்கோள்களின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V. http://www.aanda.org/articles/aa/full/2007/41/aa8357-07/aa8357-07.html. Vizier catalog entry
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Bonfanti, A. et al. (2015). "Revising the ages of planet-hosting stars". Astronomy and Astrophysics 575: A18. doi:10.1051/0004-6361/201424951. Bibcode: 2015A&A...575A..18B. http://www.aanda.org/articles/aa/full_html/2015/03/aa24951-14/aa24951-14.html. 
  3. Suárez Mascareño, A.; et al. (September 2015), "Rotation periods of late-type dwarf stars from time series high-resolution spectroscopy of chromospheric indicators", Monthly Notices of the Royal Astronomical Society, 452 (3): 2745–2756, arXiv:1506.08039, Bibcode:2015MNRAS.452.2745S, doi:10.1093/mnras/stv1441, S2CID 119181646.
  4. "International Astronomical Union | IAU". பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
  5. "Approved names". பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
  6. Ségransan, D. et al. (2011). "The HARPS search for southern extra-solar planets. XXIX. Four new planets in orbit around the moderately active dwarfs HD 63765, HD 104067, HD 125595, and HIP 70849". Astronomy and Astrophysics 535: A54. doi:10.1051/0004-6361/200913580. Bibcode: 2011A&A...535A..54S. http://www.aanda.org/articles/aa/full_html/2011/11/aa13580-09/aa13580-09.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_63765&oldid=3830435" இலிருந்து மீள்விக்கப்பட்டது