எசுபார்த்தாவின் நிகோமெடிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிகோமெடிஸ் ( fl. கிமு 457 ) என்பவர் ஒரு எசுபார்தன் இராணுவத் தளபதி மற்றும் வாரிசு ஆவார். இவருடைய சகோதரர் பாசேனியசின் மகன் சிறுவனாக இருந்த காரணத்தால், அவனது அரச பிரதிநிதியாக இருந்து எசுபார்த்தாவை ஆண்டார்.

வாழ்கை குறிப்பு[தொகு]

நிகோமெடிஸ் என்பவர் கிளியோம்ப்ரோடசின் (இறப்பு கிமு 479 ) மகன் ஆவார். தேர்மோபிலே போரில் அவரது சகோதரர் முதலாம் லியோனிடாசு (ஆட்சி காலம் கிமு 489-480 ) இறந்த பிறகு எசுபார்த்தாவின் அரசப் பிரதிநிதியாக கிளியோம்ரோடஸ் நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில், லியோனிடாசின் மகன் பிளீஸ்டார்கஸ் (ஆட்சிக் காலம் கி.மு. 480-458 ) ஆளும் வயதை எட்டியிருக்கவில்லை. கிளியோம்ப்ரோடஸ் இறந்த பிறகு, அவரது மகன் பாசேனியஸ் (இறப்பு கிமு 477) அரச பிரதிநிதி பொறுப்புக்கு வந்தார். இராச துரோக சந்தேகத்தின் பேரில் எசுபார்த்தான்களால் பாசேனியாஸ் அடைக்கப்பட்டு பட்டினியால் இறந்தார். பிளீஸ்டார்கசுக்குப் பின் பாசேனியசின் மகன் பிளீஸ்டோனாக்ஸ் (ஆட்சி காலம் கி.மு. 458-409) ஆட்சிக்கு வந்தார். அவர் மன்னரானபோது அவரும் சிறுவனாக இருந்தார். அதனால் நிகோமெடிஸ் அரச பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

எசுபார்தாவிற்கும் அதன் கூட்டாளிகளுக்கும் ( பெலோபொன்னேசியன் கூட்டணியில் இருந்த தீப்ஸ் உட்பட) மற்றும் ஏதென்ஸ் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு இடையே ( டெலியன் கூட்டணியில் இருந்த ஆர்கோஸ் உட்பட) முதல் பெலோபொன்னேசியன் போர் கிமு 460 இல் வெடித்தது. எசுபார்த்தாவில் வாழும் டோரியரியர்களின் தாயகமாகக் கருதப்பட்ட டோரிசை போசியன்கள் தாக்கியபோது டோரிசுக்கு ஆதரவாக வந்த எசுபார்தன்கள் பதிலடி கொடுத்தனர். [1] மன்னருக்குப் பதிலாக நிகோமெடிசுக்கு இந்தப் போர்த் தொடரின்போது தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது. 1,500 எசுபார்தன்கள் மற்றும் 10,000 நேச நாட்டு ஹாப்லைட்டுகளைக் கொண்ட இராணுவம் வடக்கே அனுப்பப்பட்டது. [2] இவர் போசியன்களை விரட்டினார் மேலும் இவரது சமாதான விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார்.

நிகோமெடிஸ் பின்னர் பெலோபொன்னீசியாவுக்குச் செல்ல முடிவு செய்தார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட குழப்பம் என்னவென்றால் கொரிந்து வளைகுடாவின், கடல் வழியாக மிகக் குறுகிய பாதை இருந்தது. அதில் ஏதெனியன் கடற்படை அ்வப்போது ரோந்து செல்லும். அதேசமயம் ஏதெனியர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய பகுதிகளைக் கொண்ட மோசமான நிலப்பரப்பு வழியாக தரை வழி இருந்தது. எனவே தீப்சில் முக்கிய நகரமாக இருந்த போயோடியாவில் தங்க முடிவு செய்தார். இதை ஏதெனியர்கள் ஒரு சிறந்த வாய்ப்பாக கருதினர். இதனால் கிமு 457 இல் 14,000 பேர் கொண்ட இராணுவத்தைக் திரட்டினர். அதில் 1,000 ஆர்கிவ்ஸ் மற்றும் அவர்களது மற்ற கூட்டாளிகளின் குழுக்கள் அடங்கும், மேலும் அவர்களின் எதிரிகளுடன் சண்டையிட வடக்கு நோக்கி அணிவகுத்துச் சென்றனர். இரு படைகளும் தீப்சுக்கு கிழக்கே 20 கிமீ (12 மைல்) தொலைவில் உள்ள தனக்ராவில் சந்தித்தன தீப்ஸின் கிழக்கே. கடுமையான சண்டைக்குப் பிறகு, பெலோபொன்னேசியர்கள் வெற்றி பெற்றனர். இறுதியில் இவர்கள் கொரிந்தின் பூசந்தி வழியாக தரைவழியாக நாடு திரும்பினர். அவர்கள் சென்றபோது வழியில் மெகாராவில் சில சேதங்களை உண்டாக்கினர். நிகோமெடிஸ் அதன் பிறகு வரலாற்றில் காணப்படவில்லை. [3] [4]

குறிப்புகள்[தொகு]