முதலாம் லியோனிடாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லியொனிடாசு
Statue of a hoplite, known as “Leonidas.” 5th cent. B.C.jpg
எபார்தாவின் தொல்லியல் அருங்காட்சியகத்தில் லியோனிடாஸ் என்று அழைக்கப்படும் ஹாப்லைட்டின் சிலை (கிமு 5 ஆம் நூற்றாண்டு).
எசுபார்த்தாவின் மன்னர்
ஆட்சிக்காலம்கி.மு. 489–480
முன்னையவர்Cleomenes I
பின்னையவர்Pleistarchus
பிறப்புஅண். 540 BC
எசுபார்த்தா, கிரேக்கம்
இறப்பு19 செப்டம்பர் 480 கி.மு (60 வயதில்)
தெர்மோஃபைலே, கிரேக்கம்
இராணிகார்கோ
குடும்பம்பிளெய்சுடார்சசு
GreekΛεωνίδᾱς
மரபுAgiad
தந்தைஇரண்டாம் அனெக்சுட்ரான்டிடாசு
மதம்பண்டைய கிரேக்க சமயம்

முதலாம் லியொனிடாசு[1] (தோரிக கிரேக்கம்: Λεωνίδας, [Leōnidas] error: {{lang}}: unrecognized variant: latin (உதவி); ஐயோனிக கிரேக்கம்: Λεωνίδης, Leōnidēs; "சிங்கத்தின் மகன்"; பொ.மு.540 - ஆகத்து 9 480 BCE)[2] என்பவர் சுபார்டாவின் நாயகன் மற்றும் மன்னனாவார். இவர் ஹெரக்கில்சு என்ற தொன்ம நாயகனின் வழிவந்தவர்களாக கருதப்படும் எசியட் பரம்பரையின் 17ஆவது மன்னர். இரண்டாம் அனெக்சுட்ரான்டிடாசு மைந்தர்களில் ஒருவர். இவர் தேமோபைலேச் சமர் என்ற கிரேக்க பாரசீக யுத்தத்திற்காக அறியப்படுபவர்.

தேமோபைலேச் சமர்[தொகு]

இவர் கிரேக்க பாரசீக போர் சமர்களில் ஒன்றான தேமோபைலேச் சமரில் முதலாம் செர்க்சீசு என்ற பாரசீக பேரரசனின் 30,000 படைவீரர்களை எதிர்த்து தன்னுடைய 300 இசுபாட்டன் வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு பாரசீக படைக்கு பெரும் சேதத்தை உண்டாக்கினார். தன் 300 வீரர்கள் கொண்ட படை அழிந்துவிடும் என்பதை அறிந்தும் சுபார்டானியர்களின் கொள்கையான "வெற்றி அல்லது வீரமரணம்" என்பதின்படி பாரசீக பெரும்படையிடம் வீரமரணம் அடைந்தார்.

திரைப்படம்[தொகு]

இம்மன்னனின் கதாப்பாத்திரத்தையும் 300 வீரர்களின் கதாப்பாத்திரங்களையும் நாயகமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தமிழ் மொழிமாற்று திரைப்படமே 300 பருத்திவீரர்கள் என்ற திரைப்படமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. The usual English pronunciation is /liːˈɒnɨdəs/ lee-ON-i-dəs or /liːˈɒn.ɨ.dæs/.
  2. Robert Chambers, Book of Days
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_லியோனிடாசு&oldid=3413307" இருந்து மீள்விக்கப்பட்டது