உள்ளடக்கத்துக்குச் செல்

பெலோபொன்னேசியன் கூட்டணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிமு 431 இல் பெலோபொன்னேசியன் போரின் போது எசுபார்த்தா மற்றும் பெலோபொன்னேசியன் கூட்டணி (சிவப்பு)

பெலோபொன்னேசியன் கூட்டணி (Peloponnesian League) என்பது கிமு 6 முதல் 4 ஆம் நூற்றாண்டு வரை பண்டைய கிரேக்கத்தின் எசுபார்த்தாவின் ஆதிக்கத்தில் இருந்த பெலோபொன்னேச்சிய பிராந்தியத்தில் இருந்த ஒரு கூட்டணியாகும். ஏதென்சின் ஆதிக்கத்தில் இருந்த டெலியன் கூட்டணிக்கு எதிரான பெலோபொன்னேசியப் போரில் (கிமு 431-404) இரண்டு அணிகளில் ஒன்றாக இது முக்கியமாக அறியப்படுகிறது.

ஆரம்பகால வரலாறு

[தொகு]

கிமு 7 ஆம் நூற்றாண்டின் இறுதியில், எசுபார்த்தா பெலோபொன்னீசிய பிராந்தியத்தில் மிகவும் சக்திவாய்ந்த நகர அரசாக மாறியது. மேலும் கிட்டத்தட்ட முழு பெலோபொன்னீசீயா பிராந்தியத்தின் மீது அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் மேலாதிக்கம் செய்தது. இந்த அணியில் இணையாமல் இருந்தது, அடுத்த சக்திவாய்ந்த நகரமான ஆர்கோஸ் ஆகும். மேலும் பண்டைய கொரிந்து மற்றும் எலிஸ் (நகர அரசுகள்) ஆகிய இரண்டு சக்திவாய்ந்த கூட்டாளிகளை இந்த அணிக்கு கொண்டுவந்தது கொரிந்தை கொடுங்கோன்மையிலிருந்து விடுவித்து. மேலும் எலிஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளின் கட்டுப்பாட்டைப் பாதுகாக்க உதவியது. எசுபார்த்தா பிற கூட்டாளிகளைச் சேர்ப்பதற்கு வெளியுறவுக் கொள்கை மற்றும் இராணுவத் தலையீடு ஆகியவற்றின் கலவையை தீவிரமாகப் பயன்படுத்தியது. எசுபார்த்தா ஒரு எல்லைப் போரில் டெஜியாவிடம் ஒரு சங்கடமான இழப்பை சந்தித்தது. மற்றும் இறுதியில் அவர்களுக்கு ஒரு நிரந்தர தற்காப்பு கூட்டணியை வழங்கியது; இது எசுபார்த்தன் வெளியுறவுக் கொள்கையில் திருப்புமுனையாக அமைந்தது. நடு மற்றும் மாகாண வடக்கு பெலோபொன்னீஸில் உள்ள பல அரசுகள் கூட்டணியில் இணைந்தன. இறுதியில் ஆர்கோஸ் மற்றும் அக்கேயாவைத் தவிர அனைத்து அரசுகளும் பெலோபொன்னேசிய அரசுகளும் இதில் இணைந்தன.

கூட்டணி அமைப்பு

[தொகு]

கூட்டணியானது எசுபார்த்தாவின் மேலாதிக்கத்தில் ஒழுங்கமைக்கபட்டிருந்தது. இது கூட்டாணிக் குழுவால் கட்டுப்படுத்தப்பட்டது. இது இரண்டு அமைப்புகளைக் கொண்டிருந்தது: ஸ்பார்டியேட்ஸ் கூட்டமைப்பு மற்றும் கூட்டாளிகளின் பேராயம். ஒரு அரசின் அளவு அல்லது புவிசார் அரசியல் அதிகாரத்தைப் பொருட்படுத்தாமல், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு அரசுக்கும் பேராயத்தில் ஒரு வாக்கு இருந்தது. ஒரு அரசின் இராணுவத்தில் மூன்றில் ஒரு பங்கைக் போரின் போது (முக்கியமாக டெலியன் கூட்டணிக்கு எதிராக) கோரக்கூடியதைத் தவிர, கப்பம் எதுவும் செலுத்தப்படவில்லை. எசுபார்த்தாவால் மட்டுமே கூட்டணியின் பேராயத்தைக் கூட்டமுடியும். இந்தக் கூட்டடணியானது எசுபார்த்தாவுடன் மட்டுமேயானது. எனவே பிற அரசுகள் விரும்பினால், உறுப்பு நாடுகள் ஒருவருக்கொருவர் தனித்தனியான கூட்டணிகளை உருவாக்கிக்கொள்ளலாம். பெலோபொன்னேசியன் போரின் போது மன்டினியனுக்கும் டீஜியனுக்கும் (மற்றும் அந்தந்த கூட்டாளிகளுக்கு) இடையே நடந்த போரை துசிடிடீஸ் குறிப்பிடுவதன் வழியாக உறுப்பினர்களிடையே போர்களும் நடக்கும் சாத்தியம் இருந்தது. ஒவ்வொரு அரசுக்கும் ஒரு வாக்கு இருந்தபோதிலும், கூட்டணியின் தீர்மானங்கள் எசுபார்த்தாவைக் கட்டுப்படுத்தவில்லை. கூடுதலாக, "ஒரு அரசு, ஒரு வாக்கு" கொள்கை எசுபார்த்தா நேரடியாக ஆதிக்கம் செலுத்தக்கூடிய சிறிய நகர அரசுகள் மூலம் பெரும்பான்மையை உறுதிப்படுத்த முடிந்தது.

கூட்டணி அதன் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பையும் வழங்கியது. இது ஒரு பழமைவாத கூட்டணியாகும், இது சிலவர் ஆட்சியை ஆதரித்தது மற்றும் சர்வாதிகாரம் மற்றும் ஜனநாயகத்தை எதிர்த்தது.

பெலோபொன்னேசியன் கூட்டணியின் முக்கிய உறுப்பினர்களாக எசுபார்த்தா, கொரிந்த்து, கைதிரா, மெலோஸ், பிலியஸ், மாண்டினியா, எலிஸ், எபிடாரஸ், போயோட்டியா, லெஃப்கடா, அம்ப்ராசியா ஆகியவை இருந்தன.

பிற்கால வரலாறு

[தொகு]

பாரசீகப் போர்களின் போது, கூட்டணியானது எலனிக் கூட்டணிக்காக விரிவுபடுத்தப்பட்டது. அதில் ஏதென்ஸ் மற்றும் பிற நகர அரசுகளை உள்ளடக்கியதாக ஆனது. எலெனிக் கூட்டணி பௌசானியாஸ் மற்றும் அவர் திரும்ப அழைக்கப்பட்ட பிறகு, ஏதென்சின் சிமோனால் வழிநடத்தப்பட்டது. பாரசீகப் போர்களுக்குப் பிறகு, எசுபார்த்தா எலனிக் கூட்டணியிலிருந்து விலகியது. பின்னர் பெலோபொன்னேசியன் கூட்டணியை அதன் முந்தைய கூட்டாளிகளுடன் சீர்திருத்தியது. டெலியன் கூட்டணியின் அதிகாரத்தை அதிகரிக்க ஏதெனியனியர் எடுத்த முயற்சிகளுக்கு எதிர்வினையாக இது ஏற்பட்டிருக்கலாம்.

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]