உள்ளடக்கத்துக்குச் செல்

எகிப்து ஏர் பறப்பு 804

ஆள்கூறுகள்: 33°40′33″N 28°47′33″E / 33.6757°N 28.7924°E / 33.6757; 28.7924
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எகிப்துஏர் பறப்பு 804
நிகழ்வு சுருக்கம்
நாள்மே 19, 2016 (2016-05-19)
சுருக்கம்நிகழ்வு புலனாய்வில்
இடம்நடுநிலக் கடல்
33°40′33″N 28°47′33″E / 33.6757°N 28.7924°E / 33.6757; 28.7924
பயணிகள்56
ஊழியர்10
வானூர்தி வகைஏர்பஸ் ஏ320-232
இயக்கம்எகிப்துஏர்
வானூர்தி பதிவுஎஸ்யூ-ஜிசிசி
பறப்பு புறப்பாடுசார்லசு டிகால் வானூர்தி நிலையம், பாரிசு, பிரான்சு
சேருமிடம்கெய்ரோ பன்னாட்டு வானூர்தி நிலையம், கெய்ரோ, எகிப்து

எகிப்துஏர் பறப்பு 804 (EgyptAir Flight 804 (MS804/MSR804) பாரிசு சார்லசு டிகால் வானூர்தி நிலையம்|பாரிசு சார்லசு டி கால் வானூர்தி நிலையத்திலிருந்து கெய்ரோ பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு எகிப்துஏர் நிறுவனத்தால் இயக்கப்பட்ட பன்னாட்டு பயணிகள் வான்பயணம் ஆகும். இது 2016 மே 19 அன்று எகிப்து சீர்தர நேரம் (UTC+2) 02:30  மணிக்கு நடுநிலக் கடற்பகுதியில் காணாமல் போனது.[1][2]

இந்த வானூர்தியின் சிதைந்த பாகங்களாகக் கருதப்படுபவை வானூர்தியின் கடைசியாக அறியப்பட்ட அமைவிடத்திலிருந்து தென்கிழக்கே ஏறத்தாழ 80 km (50 mi) தொலைவில், கார்பதோசு என்ற கிரேக்கத் தீவருகே கண்டறியப்பட்டதாக நாளின் பிற்பகுதியில் எகிப்திய அலுவலர்கள் அறிவித்தனர். இருப்பினும், கிரேக்க வான்விபத்து ஆய்வாளர் இதனை மறுத்துள்ளார்;[3] பின்னதாக, எகிப்துஏர் அலுவலர்கள் தங்களது அறிக்கையை மீட்டுக் கொண்டனர்.[4]

இந்த வான்பயணத்தில் 66 பேர் பயணித்தனர்: 56 பயணிகள், 7 வான்சேவையாளர்கள், மற்றும் 3 பாதுகாப்பு அலுவலர்கள்.[5] தற்போது இவர்களில் எவராவது தப்பித்துள்ளனரா எனத் தெரியவில்லை. பன்னாட்டு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கியுள்ளன.[6][7][8]

கிரேக்க படைத்துறை ராடார் தரவுகளின்படி எகிப்திய பறப்புத் தகவல் மண்டலத்தை எட்டிய பிறகு பறப்பு804 தனது வழியிலிருந்து மாறியது; 37,000 அடிகள் (11,000 மீட்டர்கள்) உயரத்திலிருந்த வானூர்தி 90-பாகை இடதுபுறம் திரும்பி, பின்னர் முழு வட்டமாக வலதுபுறம் திரும்பி, பின் திடீரெனக் கீழே இறங்கத் தொடங்கியது. 10,000 அடி (3,000 m) உயரத்தில் ரடார் தொடர்பு அற்றுப்போனது.[9][10]

வானூர்தி[தொகு]

விபத்திற்குள்ளான வானூர்தி ஏர்பஸ் ஏ320-232 ஆகும்.[a] வானூர்தியின் வால்எண் எஸ்யூ-ஜிசிசி ஆகும். தயாரிப்பாளரின் தொடர்எண் 2088 ஆகும்.[11] இந்த வானூர்தி முதன்முறையாக சூலை 25, 2003இல் பறந்தது; எகிப்துஏர் நிறுவனத்திற்கு நவம்பர் 3, 2003இல் வழங்கப்பட்டது.[12] வழக்கமான பராமரிப்புப் பணிகள் மே 18 அன்று கெய்ரோவில், பாரிசுக்குப் புறப்படுவதற்கு முன்பாக, மேற்கொளப்பட்டதாக வான்சேவை நிறுவன அலுவலர் கூறியுள்ளார்.

பறப்பு[தொகு]

Route of flight MS804 in green. The red star indicates where SU-GCC's ADS-B signal was lost, and the yellow line indicates its intended flightpath.

மே 18, 2016 அன்று 23:09 மணிக்கு (அனைத்தும் உள்ளூர் நேரத்தில், UTC+2, பிரான்சுக்கும் எகிப்துக்கும் ஒரே நேர வலயம்) சார்லசு டிகால் வானூர்தி நிலையத்திலிருந்து கெய்ரோ பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு புறப்பட்டது.[13][14][15]

37,000 அடி (11,000 m) உயரத்தில் பறந்துகொண்டிருக்கும்போது தெளிந்த வானிலையில் எகிப்திய கடலோரத்திற்கு வடக்கே 280 km (170 mi; 150 nmi) தொலைவில் காணாமற்போனது;[16] கிழக்கு நடுநிலப்பகுதியில் காசுடெல்லோரிசோ தீவிலிருந்து கிட்டத்தட்ட அதே தொலைவில் மே 19, 2016 02:30 மணிக்கு காணமற்போனது.[1][17][18] பறப்புத் தொடங்கிய 3 மணி நேரம் 25 நிமிடங்களில் வானூர்தி காணாமற்போனது. காணாமற்போவதற்கு முன்னதாக வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளருக்கு எந்தவித நெருக்கடிநிலை அழைப்பும் வரவில்லை.[2]

வானூர்தி கெய்ரோவில் காலை 03:05க்கு இறங்க வேண்டும். கடைசி ரடார் தொடர்பிற்கு இரண்டு மணி நேரம் கழித்து 04:26 மணிக்கு எகிப்திய படைத்துறைநினர் நெருக்கடி கருவியிலிருந்து சங்கேதம் பெற்றதாக துவக்கத்தில் அறிவித்தனர்; ஆனால் இக்கூற்றை பின்னர் மீட்டுக்கொண்டனர்.[19]

கிரேக்க பாதுகாப்பு அமைச்சர் பனோசு காமெனோசு வானூர்தி தனது நிலையை 90 பாகை இடதுபுறம் திரும்பி பின்னர் முழு 360 பாகை வட்டமடித்து வலதுபுறம் திரும்பி 37,000 அடி உயரத்திலிருந்து திடீரென 15,000 அடிகள் (4,600 m)க்கு இறங்கியதாக கூறினார்.[7][20]

வானூர்தியின் தயாரிப்பாளரான ஏர்பஸ் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு அறிவித்துள்ளது: "Airbus regrets to confirm that an A320 operated by EgyptAir was lost at around 02:30 (Egypt local time) today over the Mediterranean sea."[21]

பயணிகளும் பணியாளர்களும்[தொகு]

பயணித்தவர் குடியுரிமை வாரியாக[22]
குடியுரிமை எண்.
 Algeria 1
ஆத்திரேலியா/ஐ.இ[23] 1
 Belgium 1
 Canada 2[24]
 Chad 1
 Egypt 30
 France 15
 Iraq 2
 Kuwait 1
 Portugal 1
 Saudi Arabia 1
 Sudan 1
Crew 10
Some passengers had multiple citizenship.
Counts are based on preliminary data
and do not total 66.

பயணிகள்[தொகு]

பதின்மூன்று நாடுகளைச் சேர்ந்த ஐம்பத்தாறு பயணிகள் வானூர்தியில் இருந்தனர்.[22] இதில் மூவர் சிறுவர்களாவர்; அதிலும் இருவர் மழலையர்.[25] வானூர்தியில் பயணித்த சிலரது இரட்டைக் குடியுரிமை நிலையால் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.[23]

பணியாளர்கள்[தொகு]

பயணித்த பத்து பணியாளர்களில் மூவர் எகிப்துஏர் பாதுகாப்பு அலுவலர்கள் ஆவர். ஐவர் பறப்புச் சேவைப் பணியாளர்கள், இரண்டு வானோட்டிகளாவர்.[26] எகிப்துஏர் அறிக்கையின்படி, கட்டுப்படுத்திய வானோட்டிக்கு 6,275 மணிநேரம் பறந்த அனுபவமும் குறிப்பிட்ட ஏ320 இரக வானூர்தியில் 2,101 மணிநேரம் பறந்த அனுபவமும் இருந்தது; உடனிருந்த முதல் அலுவலருக்கு 2,766 மணிநேர அனுபவம் இருந்தது.[7][27]

குறிப்புகள்[தொகு]

 1. The aircraft was an Airbus A320-200 model, also known as the A320ceo to distinguish it from the newer A320neo; the infix -32 specifies it was fitted with IAE V2527-A5 engines.

மேற்சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 Karimi, Faith; Alkhshali, Hamdi (19 May 2016). "EgyptAir flight disappears from radar". CNN. http://www.cnn.com/2016/05/18/middleeast/egyptair-flight-disappears/. பார்த்த நாள்: 19 May 2016. 
 2. 2.0 2.1 "EgyptAir flight MS804 crash: Plane 'fell 22,000 feet, spun sharply, then disappeared'". The Telegraph. 19 May 2016. http://www.telegraph.co.uk/news/2016/05/19/egyptair-flight-from-paris-to-cairo-disappears-from-radar/. பார்த்த நாள்: 19 May 2016. 
 3. "EgyptAir crash: Plane wreckage found near Greek island" (in en-GB). BBC News. 19 May 2016. http://www.bbc.com/news/world-middle-east-36333664. பார்த்த நாள்: 19 May 2016. 
 4. Pearson, Michael; Karimi, Faith; Lee, Ian (19 May 2016). "EgyptAir Flight 804: Greek official says debris not from plane, report". CNN. http://www.cnn.com/2016/05/18/middleeast/egyptair-flight-disappears/index.html. பார்த்த நாள்: 19 May 2016. 
 5. EgyptAir [Egyptair] (18 May 2016). "Souls on board MS804" (Tweet). பார்க்கப்பட்ட நாள் 19 May 2016. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 6. "EgyptAir flight MS804 disappears from radar between Paris and Cairo – live updates". The Guardian. 18 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 May 2016.
 7. 7.0 7.1 7.2 Noueihed, Lin; Knecht, Eric (18 May 2016). "EgyptAir flight from Paris to Cairo missing with 66 on board". ராய்ட்டர்ஸ். http://www.reuters.com/article/us-egyptair-airplane-idUSKCN0YA08W. பார்த்த நாள்: 19 May 2016. 
 8. "EgyptAir flight MS804 crash: Military searching for wreckage in Mediterranean Sea, officials say". The Independent. 18 May 2016. http://www.independent.co.uk/news/world/europe/egyptair-flight-ms804-missing-passenger-jet-has-crashed-into-the-mediterranean-sea-officials-confirm-a7037146.html. பார்த்த நாள்: 18 May 2016. 
 9. "Π. Καμμένος: Στα 10.000 πόδια χάθηκε η εικόνα του airbus - Συνεχίζονται οι έρευνες" (in Greek). YouTube. 19 May 2016. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016. {{cite web}}: Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
 10. "EgyptAir flight MS804 crash: Plane 'swerved' suddenly before dropping off radar over Mediterranean Sea". The Independent. 19 May 2016. http://www.independent.co.uk/news/world/europe/egyptair-flight-ms804-crash-plane-swerved-suddenly-before-dropping-off-radar-over-mediterranean-sea-a7037516.html. பார்த்த நாள்: 19 May 2016. 
 11. "SU-GCC Accident description". Aviation Safety Network. Flight Safety Foundation. 19 May 2016. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
 12. "EgyptAir SU-GCC". Air Fleets. 18 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 May 2016.
 13. "EgyptAir flight MS804 disappears from radar between Paris and Cairo – live updates". The Guardian. 18 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 May 2016.
 14. "EgyptAir flight 804 disappears en route from Paris to Cairo with over 60 on board". Russia: RT. 19 March 2016. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
 15. "EgyptAir Flight MS804 from Paris has disappeared from radar, airline says". CBC News. 19 May 2016. http://www.cbc.ca/news/world/egyptair-flight-ms804-paris-cairo-1.3588755. பார்த்த நாள்: 19 May 2016. 
 16. "EgyptAir flight MS804 disappears from radar between Paris and Cairo – live updates: Contact lost 280km from Egyptian coast". The Guardian. 18 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 May 2016.
 17. "EgyptAir Flight MS804 from Paris to Cairo 'disappears from radar'". BBC. 18 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 May 2016.
 18. "EgyptAir flight MS804 disappears from radar between Paris and Cairo – live updates: Contact lost 280km from Egyptian coast". The Guardian. 18 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 May 2016.
 19. "EgyptAir flight MS804 disappears from radar between Paris and Cairo – live updates". The Guardian. 19 May 2016. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
 20. "EgyptAir crash: Greek minister says flight 'turned 360 degrees right'". BBC News. BBC. 19 May 2016. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
 21. "Airbus confirms EgyptAir flight 804 'lost' over Mediterranean". The Guardian. 19 May 2016. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
 22. 22.0 22.1 Nielsen, Kevin; Azpiri, Jon (19 May 2016). "EgyptAir flight from Paris to Cairo crashes in Mediterranean; Canadian among 66 on board". The Canadian Press. Toronto: Global News. http://globalnews.ca/news/2710304/egyptair-flight-ms804-headed-to-cairo-from-paris-has-disappeared-from-radar. பார்த்த நாள்: 19 May 2016. 
 23. 23.0 23.1 "EgyptAir flight MS804: Australian dual national on missing aircraft". Sydney Morning Herald. 20 May 2016. http://www.smh.com.au/world/egyptair-flight-ms804-missing-plane-crashed-in-mediterranean-sea-20160519-gozdds.html. 
 24. "Statement by Minister Dion on crash of EgyptAir flight MS804". Government of Canada. 19 May 2016. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
 25. "EgyptAir: 5 questions you asked, answered". CNN. 19 May 2016. http://www.cnn.com/2016/05/19/middleeast/egyptair-questions-asked-answered/index.html. பார்த்த நாள்: 19 May 2016. 
 26. Walsh, Declan (19 May 2016). "EgyptAir Plane Disappears Over Mediterranean, Airline Says". The New York Times. http://www.nytimes.com/2016/05/19/world/middleeast/egyptair-plane-disappears-over-mediterranean-airline-says.html. பார்த்த நாள்: 19 May 2016. 
 27. "EgyptAir Flight MS804 latest updates". BBC News. 19 May 2016. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எகிப்து_ஏர்_பறப்பு_804&oldid=3354766" இலிருந்து மீள்விக்கப்பட்டது