இரட்டைக் குடியுரிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரட்டைக் குடியுரிமை (multiple citizenship) என்பது ஒருவர் ஒரே வேளையில் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளில் அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்ப குடியுரிமை பெற்றிருக்கும் நிலையைக் குறிக்கும். ஒருவர் எந்த நாட்டின் குடிமகன் என்பதை முடிவு செய்யும் பன்னாட்டு மரபு ஏதும் இல்லை. இது அந்தந்த நாடுகளின் சட்டங்களின் அடிப்படையிலேயே முடிவாகும். இச்சட்டங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டும் முரணாகவும் ஒன்று மற்றொரு நாட்டின் சட்டத்தை மீறாமலும் கூட அமையலாம்.

சில நாடுகள் இரட்டைக் குடியுரிமையை ஏற்பதில்லை. இவை குடியுரிமை கோரும் நபர்களை அவரது மற்ற குடியுரிமைகளைத் துறக்கக் கோரலாம். அல்லது, இன்னொரு நாட்டில் புதிய குடியுரிமை பெறுபவரிடம் இருந்து தம் நாட்டுக் குடியுரிமைகளைப் பறித்துக் கொள்ளலாம். சில நாடுகள் எல்லா நாடுகளிலும் கூடுதல் குடியுரிமைகள் பெறுவதை ஏற்கின்றன. மற்ற சில நாடுகளோ, குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இரட்டைக் குடியுரிமை பெறலாம் என்று கட்டுப்பாடு விதிக்கக்கூடும்.

இரட்டைக் குடியுரிமையை ஏற்கும் பல்வேறு நாடுகள் கூட, தத்தம் ஆட்சிப் பகுதிகளில் கூடுதல் குடியுரிமைகளுக்கு ஏற்பு வழங்குவதில்லை. எடுத்துக்காட்டுக்கு, தேர்தலில் வாக்களித்தல், தேசிய இராணுவச் சேவை ஆகியவற்றுக்கு இது பொருந்தும். இதே போல, தூதரகங்களில் பணியாற்றுதல், இராணுவம் / காவல் துறையில் பணியாற்றுதல், குறிப்பிட்ட சில அரசுப் பணிகள் ஆகியவற்றில் ஈடுபடவும் இரட்டைக் குடியுரிமை உள்ளோருக்கு ஏற்பு இருப்பதில்லை.

மேலும் அறிய[தொகு]

  • Randall Hansen, Patrick Weil, தொகுப்பாசிரியர் (January 2002). Dual Nationality, Social Rights and Federal Citizenship in the U. S. and Europe: The Reinvention of Citizenship. Berghahn Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-57181-804-9. 
  • Thomas Faist, தொகுப்பாசிரியர் (August 2007). Dual Citizenship in Europe: From Nationhood to Societal Integration. Aldershot, UK: Ashgate. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7546-4914-4. 
  • Thomas Faist, Peter Kivisto, தொகுப்பாசிரியர் (November 2007). Dual Citizenship in Global Perspective: From Unitary to Multiple Citizenship. Houndmills, UK: Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-230-00654-6. 
  • Thomas Faist and Jürgen Gerdes (2008). "Dual Citizenship in an Age of Mobility" (PDF). Transatlantic Council on Migration (MPI). Archived from the original (PDF) on 2009-07-11. பார்க்கப்பட்ட நாள் 2012-04-26.
  • Federal Investigative Services Division of the US Office of Personnel Management (2001). "Citizenship Laws of the World: A Directory" (PDF). Archived from the original (PDF) on 2006-04-04. பார்க்கப்பட்ட நாள் 2008-01-28.

வெளியிணைப்புகள்[தொகு]

பன்னாட்டு முறைமைகள்
ஐரோப்பிய ஆயம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டைக்_குடியுரிமை&oldid=3543954" இலிருந்து மீள்விக்கப்பட்டது