ஊரளி அப்பூப்பன் காவு
ஊரளி அப்பூப்பன் காவு இந்தியாவின் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கல்லெலி என்ற இடத்தில் அச்சன்கோவில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு பழமையான கோயிலாகும்.[1] இக்கோயில் கல்லேலி – அச்சன்கோவில் காட்டுப் பாதையில் பத்தனம்திட்டா மாவட்டத் தலைமையகத்திலிருந்து 19 கி.மீ. தொலைவிலும், கொன்னியிலிருந்து9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் மலைக் கடவுள்களின் அதிபதியாகக் கருதப்படுகிறார். [2] கோயிலின் முக்கிய திருவிழாவான பதயமுதயம், மலையாள நாட்காட்டியில் மேடம் மாதத்தில் விஷு அன்று தொடங்குகிறது. [1]
பாரம்பரியம்
[தொகு]இந்தக் கோயில் ஆரம்பகால திராவிட–நாகா பழங்குடியினரின் மரபுகளையும், சடங்குகளையும் கடைபிடிக்கிறது. அந்த நடைமுறையானது வழக்கமான இந்து கோயில்களில் நடைபெறுகின்ற பாரம்பரிய தாந்த்ரீக நடைமுறைகளிலிருந்தும், பூசைகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டதாகும்.[3]
தெய்வங்கள்
[தொகு]கோயிலின் மூலவர் ஊரளி அப்பூப்பன் (கல்லேளி அப்பூப்பன்), ஊரளி அமூமம்மா ஆவார். [4] அப்பூப்பன் 999 மலைக்கடவுளர்களின் தலைவராகவும், அம்மூம்மா அவரது தாயாகவும் கருதப்படுகின்றனர். [1]
இக்கோயிலில் வடக்கேஞ்சேரி வல்யச்சன், விநாயகர், பராசக்தி, யட்சியம்மா, நாகராஜா, நாகயட்சி, ராட்சசு, குட்டிச்சாத்தன், கொச்சுக்குஞ்சு அருகலா, பாரத பூங்குறவன், பாரத பூங்குரத்தி, ஹரிநாராயண தம்புரான் ஆகிய துணைத்தெய்வங்கள் உள்ளன. [1][4]
திருவிழாக்கள்
[தொகு]இக்கோயிலின் முக்கிய திருவிழாவான பதமுடைய விழா மலையாள மாதமான மேடத்தில் (ஏப்ரல் – மே) விஷு அன்று தொடங்கி, 10 நாட்கள் நடைபெறுகிறது. [4] 10ஆம் நாளில் (விசுக்குப் பிறகு 10வது சூரிய உதயம்) ஆதித்யா பொங்கல் உள்ளிட்ட பல்வேறு பூசைகள், சடங்குகளுடன் முடிவடைகிறது.[1] மற்றொரு சிறப்பு நிகழ்வான மண்டல மகரவிளக்கு திருவிழா மலையாள மாதமான விருட்சிகம் முதல் மகரம் வரை (நவம்பர் நடுப்பகுதி முதல் ஜனவரி நடுப்பகுதி வரை) நடைபெறுகிறது.[5]
சடங்குகள்
[தொகு]கர்கிடக வாவு பலி என்பது மலையாள மாதமான காக்கிடகத்தில் (ஜூலை – ஆகஸ்ட்) கோயிலில் செய்யப்படுகின்ற முக்கியமான சடங்குகளில் ஒன்றாகும். பிற சடங்குகளான ஆனையூட்டு, வானரவூட்டு, மீனூட்டு என்ற ஆனைகளுக்கும், வானரங்களுக்கும், மீன்களுக்கும் உணவு வழங்குகின்ற சடங்குகள் ஆகியவையும் இங்கு நிகழ்த்தப்பெறுகின்றன. [2] திராவிட– நாகப் பழங்குடியினரின் பாரம்பரிய கலைகளான கும்பப்பாட்டு, பரதக்காளி, தலையாட்டும் காளி, வெள்ளங்கும் நெய்வேத்யம், ஆழி பூசை, கள்ளெலி விளக்கு போன்றவை இக்கோயிலின் சிறப்பம்சங்களாகும். [6] படையணி, முடி-ஆட்டம் போன்ற சடங்குகளும் சில சமயங்களில் நிகழ்த்தப்பெறுகின்றன.[1]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Thomas, Isson (29 July 2022). "Kallely Oorali Appooppan Kavu: A mystic world in Nature's lap". Onmanorama (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 June 2023.
- ↑ 2.0 2.1 Srivatsa, Indira (2022). A to Z India - Magazine: August 2021 (in ஆங்கிலம்). BookRix. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783748789871.
- ↑ Sudhish, Navamy (17 April 2017). "Here's where the tribal rhythm goes wild". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 June 2023.
- ↑ 4.0 4.1 4.2 Thomas (29 July 2022). "കല്ലേലിക്കാവിലെ ഊരാളിയപ്പൂപ്പൻ ; 24 മണിക്കൂറും പ്രാർഥനയുടെ വാതിലുകൾ തുറന്നിട്ടിരിക്കുന്നു ഈ കാനനക്ഷേത്രം".
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ Daily, Keralakaumudi (12 November 2019). "കല്ലേലി കാവിൽ മണ്ഡല മകരവിളക്ക് വിളക്ക് മഹോത്സവം". Keralakaumudi Daily (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 June 2023.
- ↑ "Sree Kallely Oorali Appooppan Kavu". www.sreekallelyooraliappooppankavu.com. Archived from the original on 2023-06-25. பார்க்கப்பட்ட நாள் 2023-06-25.