உலோமாமி சிவப்பு கொலாபசு
உலோமாமி சிவப்பு கொலாபசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | செர்க்கோப்பித்தேசிடே
|
துணைக்குடும்பம்: | கொலோபினீ
|
பேரினம்: | பிலியோகொலோபசு
|
இனம்: | பி. பார்மெந்திரி
|
இருசொற் பெயரீடு | |
பிலியோகொலோபசு பார்மெந்திரி (கோலைன் & வெர்கெயென், 1987) | |
காங்கோ மக்களாட்சி குடியரசில் உலோமாமி சிவப்பு கொலாபசு பரம்பல் | |
வேறு பெயர்கள் [2] | |
பிலியோகொலோபசு போயை பார்மெந்தியோரம் |
உலோமாமி சிவப்பு கொலாபசு (பிலியோகொலோபசு பார்மெந்திரி) என்பது மத்திய ஆபிரிக்காவில் காணப்படும் சிவப்பு கொலோபசுக் குரங்குச் சிற்றினமாகும். இது வரலாற்று ரீதியாக மத்திய ஆப்பிரிக்க சிவப்பு கோலோபசின் துணையினமாகக் கருதப்படுகிறது (பி. போயை). ஆனால் சமீபத்திய வகைப்பாட்டியல் ஆய்வுகள் இதை ஒரு தனிச் சிற்றினமாகக் கருதுகின்றன.[3][4][2]
மத்திய காங்கோ மக்களாட்சிக் குடியரசில் உள்ள உலோமாமி ஆற்றிற்கும் உலுவாலாபா ஆற்றுக்கும் இடையே உள்ள தாழ் நில வெப்பமண்டல மழைக்காடுகளில் உலோமாமி சிவப்பு கோலொபசு வரையறுக்கப்பட்ட வரம்பைக் கொண்டுள்ளது. இதன் வரம்பு தெற்கே உருய்கி ஆறு மற்றும் உலுடங்கா ஆறு வரை நீண்டுள்ளது.[3] இது இலைகள், பழங்கள், பூக்கள், மொட்டுகள் மற்றும் விதைகளை உண்ணும்.[3] ஆண் குரங்குகளின் எடை சுமார் 9 kg (20 lb) மற்றும் பெண் குரங்குகளின் எடை சுமார் 7.5 kg (17 lb).[3][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hart, J.A. & Detwiler, K.M. (2020). "Piliocolobus parmentieri". IUCN Red List of Threatened Species 2020: e.T40648A166604269. https://www.iucnredlist.org/species/40648/166604269. பார்த்த நாள்: 13 November 2021.
- ↑ 2.0 2.1 2.2 Teichroeb, Julie A. (2016). Rowe, Noel (ed.). All the World's Primates. Pogonias Press. p. 542. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781940496061.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Zinner, D.; Fickenscher, G.H.; Roos, C. (2013). Mittermeier, Russell A. (ed.). Handbook of the Mammals of the World: Volume 3, Primates. Lynx. p. 711. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8496553897.
- ↑ Groves, C.P. (2016). Wich, Serge A. (ed.). An Introduction to Primate Conservation. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780198703396.