சிவப்பு கொலோபசுக் குரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்பு கொலோபசுக் குரங்கு[1]
பிலியோசொலோபசு கிர்க்கிஇ
Piliocolobus kirkii
அல்லது சான்சிபார் சிவப்பு கொலோபசு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: முதனிகள்
குடும்பம்: வால் குரங்கு
(செர்க்கோப்பித்தேசிடீ,
Cercopithecidae)
துணைக்குடும்பம்: கொலோபினீ
(Colobinae)
பேரினம்: பிலியோகொலோபசு
(Piliocolobus)

(Rochebrune, 1877)
மாதிரி இனம்
Western Red Colobus
Kerr, 1792
இனங்கள்

சிவப்பு கொலோபசுக் குரங்கு என்பது பழைய உலகம் என்று கூறப்படும் ஆசிய-ஆப்பிரிக்க நிலக் குரங்குகளில் காணப் படு கவர்ச்சி பிலியோகொலோபசு (மயிருடை கூழைக்குரங்கு) என்னும் பேரினத்தைச் சேர்ந்த குரங்கு சிற்றினம் ஆகும். இதனை முன்னர் முதலுரு கொலோபசு அல்லது அடிப்படை வகை கொலோபசு எனப்பொருள்படும் புரோகொலோபசு (Procolobus) என்னும் பெயரால் அழைத்தனர். ஆனால் இப்பெயர் இப்பொழுது பசுமை நிறக் கொலோபசுக் (ஆலிவ் கொலோபசு, Olive Colobus) குரங்குக்கு மட்டுமே பயன்படுகின்றது. [1] இந்த சிவப்பு கொலோபசுக் குரங்குகள் கறுப்பு-வெள்ளை கொலோபசுக குரங்கின் உறவான சிற்றினம் ஆகும். சிவப்புகொலோபசு பல நேரங்களில், பல இடங்களில் கொல்லோபசு பேரினத்தைச் சேராத நீலக் குரங்கு (blue monkey) எனப்படும் பிறிதொரு குரங்கினக் கூட்டங்களுடன் காணப்படுகின்றது. [2] The சிம்ப்பன்சிகள் மேற்கு சிவப்பு கொலோபசுக் குரங்குகளை வேட்டையாடிக் கொன்றுண்கின்றன. ஒரு கிழமைக்கு (வாரத்திற்கு) ஒரு முறை சிம்ப்பன்சிகள் சிவப்பு கொலோபசுக்குரங்கை கொண்றுண்கின்றன. [3].

சிவப்பு கொலோபசுக் குரங்கு மேற்கு, நடு, கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றது. இதன் இனங்கள் தனித்தோ (அல்லோப்பாட்ரிக், allopattic) அல்லது சிறப்புச் சூழல்களில் மட்டும் கலப்புற்றோ (பாராபட்ரிக், parapatric) வாழ்கின்றன. இவை ஈரப்பதம் நிறைந்த காடுகளில் வாழ்கின்றன. சிவப்பு கொலோப்பசுக் குரங்குகள் வாழிடச் சிதைவால் மிகவும் தாக்குற்று அழிவுரும் இனம் என்று அறியப்படுகின்றது. இதனால் இது ஆப்பிரிக்காவின் முதனிகளில் அதிக அழிவாய்ப்பு கொண்ட சிற்றினமாக கருதப்படுகிறது.[4] எனவே கீழ்க்காணும் உயிரினவகைப்பாட்டு பட்டியலில் நடு ஆப்பிரிக்க சிவப்பு கொலொபசுக் குரங்கைத் தவிர மற்ற எல்லா இனங்களும் அழிவாய்ப்பு நிலையில் உள்ளதாக கருதப்படுகின்றது.[5].

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. 1.0 1.1 Colin Groves (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பக். 169-170. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3. 
  2. Ghiglieri, Michael. East of the Mountains of the Moon: Chimpanzee Society in the African Rain Forest, The Free Press, 1988, pg. 238.
  3. Ebola Cote d'Ivoire Outbreaks
  4. Mittermeier, R. A., Ratsimbazafy, J., Rylands, A. B., Williamson, L., Oates, J. F., Mbora, D., Ganzhorn, J. U., Rodríguez-Luna, E., Palacios, E., Heymann, E. W., Kierulff, M. C. M., Yongcheng, L., Supriatna, J., Roos, C., Walker, S., & Aguiar, J. M. (2007). Primates in Peril: The World’s 25 Most Endangered Primates, 2006–2008. Primate Conservation 2007 (22): 1-40
  5. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் 2008. 2008 IUCN Red List of Threatened Species. Downloaded on 26 November 2008.