உலூனா 25

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூனா 25
Luna 25
லூனா 25 நிலாத் தரையிறங்கி
திட்ட வகைதொழினுட்பம், முன்னீட்டாய்வு
இயக்குபவர்SRI RAS (IKI RAN)
இணையதளம்https://iki.cosmos.ru/missions/luna-25
திட்டக் காலம்1 ஆண்டு (திட்டம்), நடப்பு: <0 நாட்கள் (திட்டம் தோல்வி)[1]
விண்கலத்தின் பண்புகள்
விண்கல வகைதானியங்கித் தரையிறங்கி
தயாரிப்புலவோச்கின்
ஏவல் திணிவு1,750கிகி[2]
ஏற்புச்சுமை-நிறை30kg
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்11 ஆகத்து 2023, 23:10:57.189 ஒசநே[3][4]
ஏவுகலன்சோயூசு-2.1b / பிரெகாத்[5]
ஏவலிடம்வசுத்தோச்சினி விண்வெளி ஏவுதளம்[6]
நிலா தரையிறங்கி
தரையிறங்கிய நாள்21 ஆகத்து 2023 (திட்டம்), உண்மையில்: தொழில்நுட்பக் கோளாறினால் 2023 ஆகத்து 19, 11:57 ஒசநே மணிக்கு நிலாத் தரையில் மோதியது.
தரையிறங்கிய பகுதி69°32′42″ S 43°32′38.4″ E (பொகுசுலாவ்சுக்கி குழியின் வடக்கே (திட்டமிடப்பட்டது)
----
லூனா-குலோப் திட்டம்
← உலூனா 24 உலூனா 26

உலூனா 25 (Luna 25, Luna-Glob lander, நிலாக் கோளகத் தரையிறங்கி) என்பது உருசிய நடுவண் விண்வெளி நிறுவனம் திட்டமிட்ட நிலாத் தரையிறங்கித் திட்டப் பணி ஆகும்.[7] இது நிலாவின் தென் முனைக்கு அருகே போகுசுலாவ்சுகி பள்ளத்தில் தரையிறங்கும்.[2] 1970 களில் இருந்து சோவியத் உலூனா திட்டத்தின் தொடர்ச்சியை வலியுறுத்துவதற்காக இது உலூனா - க்ளோப் லேண்டரில் இருந்து லூனா 25 என மறுபெயரிடப்பட்டது. இருப்பினும் இது ஒரு கட்டத்தில் லூனா - குளோப்நிலா ஆய்வு திட்டம் என்று கருதப்பட்ட பகுதியாகும்.

உலூனா 25 விண்கலம் 2023 ஆகத்து 10, 23:10 ஒசநே மணிக்கு, சோயூசு-2.1பி ஏவுகலன் மூலம் உருசியாவின் அமூரில் உள்ள வசுத்தோச்சினி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.[3]

உலூனா-25 நிலாவின் தென்முன்னையில் ஆகத்து 23 அன்று மென்மையாகத் தரையிறங்க இருந்தது. ஆனால், அது நடப்பதற்கு முன்பாக வட்டணையில் நகர்ந்துகொண்டிருந்த விண்கலம் தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொண்டதை அடுத்து, 2023 ஆகத்து 19, 11:57 மணிக்கு கட்டுப்பாடற்ற வட்டணையில் சுற்றிவந்து நிலாவில் விழுந்தது.[8][9][10]

வரலாறு[தொகு]

1998ஆம் ஆண்டுக்குள் இரண்டு விண்கல வடிவமைப்புகள் குறித்து மதிப்பீடு செய்து, தற்போது லூனா 25 என்று அழைக்கப்படும் பிறப்புநிலைத் திட்டங்கள் 1990களின் பிற்பகுதியில் தொடங்கின. இந்தத் திட்டத்தை புதுப்பித்து முடிக்க முயற்சிகள் 2000 கள் முழுவதும் தொடர்ந்தன. மேலும் JAXA இன் இப்போது நீக்கப்பட்ட நிலா - A சுற்றுக்கலத்துடன் இணைத்து மேற்கொள்ளவிருந்த பன்னாட்டு ஒத்துழைப்பு முயற்சி கைவிடப்பட்டதால் நிறுத்தப்பட்டன , மேலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (இஸ்ரோ) மற்றொரு கூட்டுறவு நிலாப் பயணத்தின் அழுத்தம் ( உருசிய ஈடுபாடு இல்லாமல் தொடர்ந்தது). இதனால், இந்தியா தன் தரையிறங்கியைத் தானே வடிவமைத்துக் கொள்ள நேர்ந்தது[11]

2010 களின் தாமதங்கள் முதலில் 2011 இல் போபோசு - கிரண்டின் தோல்வியால் கொண்டுவரப்பட்ட குறிப்பிடத்தக்க மறுசீரமைப்புத் தாமதத்திலிருந்து ஏற்பட்டது. புதிய் லூனா 25 வடிவமைப்பு உருவாக்க நேர்ந்த சூழல் இதுதான். வானிலைச் செயற்கைக்கோள் எலக்ட்ரோ - எல் எண் 2 அமைப்பும் ஸ்பெக்டர் - ஆர்ஜி ஆய்வகமும், தரையிறங்கும் தளமான உருசிய விண்கல டெவலப்பர் என். பி. ஓ இலாவோச்கின் மீது வளநிலை அழுத்தங்களை வைத்ததாலும் தரையிறங்கியின் பணிகள் தாமதமாகின.[12][13]

2017 அளவில் விண்கலத்திற்கான செலுத்த அமைப்பு உருவாக்கப்பட்டு, பூட்டும் அறையில் கோர்ப்பில் இருந்தது.[14]

தரையிறங்க கருதியுள்ள இடம், பொகுலாவ்சுகி குழிப்பள்ளத்துக்கு வடக்கில் 69°32′42″S 43°32′38″E / 69.545°S 43.544°E / -69.545; 43.544 (Luna 25 primary landing site) ஆகிய ஆயத் தொலைவுகளில் உள்ளது; மாற்றுப் பின்னணியக் களங்கள் மஞ்சினி குழிப்பள்ளத்துக்கு தென்மேற்கில் 68°46′23″S 21°12′36″E / 68.773°S 21.210°E / -68.773; 21.210 (Luna 25 alternate landing site) ஆகிய ஆயத் தொலைவுகளிலும் பென்ட் லாந்து A குழிப்பள்ளத்துக்குத் தெற்கில் 68°38′53″S 11°33′11″E / 68.648°S 11.553°E / -68.648; 11.553 (Luna 25 alternate landing site) ஆகிய ஆயத் தொலைவுகளிலும் உள்ளன.[15]

நிலாத் தரைப்பரப்பில் தரையிறங்கியின் எதிர்பார்ப்பு திட்டக் காலம் குறைந்தது ஒரு புவியாண்டாகும்.[15]

திட்டம்[தொகு]

இந்தத் திட்டத்துடனான, தொடக்கப் பணித் திட்டத்தில் ஒரு தரையிறங்கியும் ஒரு சுற்றுகலனும் இருந்தன. சுற்றுகலன் மொத்தல் ஊடுருவிகளையும் உள்ளடக்கியிருந்தது. அதன் தற்போதைய வடிவத்தில் , உலூனா 25 என்பது தரையிறங்கும் தொழில்நுட்பத்தை நிறுவும் முதன்மை நோக்கத்துடன் ஒரு தரையிறங்கியை மட்டுமே கொண்டுள்ளது. இந்தப் பணி 30 கிலோ (66 பவுண்டு) எடையுள்ள அறிவியல் கருவிகளை கொண்டு செல்லும். இதில் மண் பதக்கூறுகள் எடுக்க உதவும் துளையீட்டு வன்பொருளுக்கான எந்திரன்கையும் அடங்கும்.

ஏவுதலும் விண்கலக் கட்டுபாடும்[தொகு]

வெளி ஒளிதங்கள்
Luna-25 launch

இந்த ஏவுதல் திட்டமிட்டபடி, 2023 ஆகத்து 10 அன்று வோசுத்தோச்சினி விண்வெளித் தளத்தில் இருந்து பிரிகாத் மேல் கட்டத்துடன் சோயுசு - 2.1 பி ஏவூர்தி வழியாகத் ஏவப்பட்டுள்ளது.[16][17][18][19] ஆகத்து 16 அன்று திட்டமிட்டபடி, ஆய்கலம் நிலாவின் வட்டணையில் நுழைந்தது. தரையிரங்கும் நாள் திட்டமிட்டபடி ஆகத்து 21 ஆகக் கூறப்பட்டது.[20]

உரோசுகோசுமோசு ஆகத்து 19 அன்று "தரையிறங்கியின் இயல்புக்கு மாறான சூழ்நிலைமையால்", "முந்து இறங்கல்" வட்டணைக்குச் செலுத்தும் சிறிய பொறியின் எரியூட்டல் கட்டளை பொய்த்தது என அறிவித்தது. உரோசுகோசுமோசு ஆகத்து 20 அன்று ஆய்கலம் தொலைத்தொடர்பிழந்ததும் நிலாத் தரையில் மோதிச் சிதறுண்டது என அறிவித்துள்ளது. இதற்கான காரணத்தை அறிய ஒரு குழு அமைத்துளளதாகவும் கூறியுள்ளது.[21][22][23][24][25]

அறிவியல் கருவிகள்[தொகு]

முன்மொழிவு இறங்கு களங்கள்

தரையிறங்கி 30 கிலோ (66 எல்பி) ஏற்புசுமையைக் கொண்ட கீழ்வரும் ஒன்பது அறிவியல் கருவிகளை உள்ளடக்கும்.[26][1]

  • ADRAN - LR முனைவுறு நிலாத் தரைப்படிவின் நொதுமி, காம்மாக் கதிர் பகுப்பாய்வு
  • ARIES - L = புறக்கோள மின்ம ஊடக அளவீடு
  • LASMA - LR - ஒருங்கொளி பொருண்மை கதிர்நிரல் அளவி
  • LIS - TV - RPM அகச்சிவப்பு நிறமாலை கனிமங்கள், தனிமங்களின் படிமமாக்கம்
  • நிலாத் தரைப்படிவின் தூசி மற்றும் நுண்பொன்ம அளவீட்டுக் கருவி
  • THERMO - LL - நிலாத் தரைப்படிவின் வெப்பவியல் நிகழ்வுகளின் இயல்புகளின் அளவீtடுக் கருவி
  • SDS - LL - இயற்காட்சி, களத்தரைப் படிமமாக்கம்
  • ஒருங்கொளி எதிர்தெறிப்பி - நிலாவில் வீவாணிச் (இரேடார்) செய்முறைகளைச் செய்யும் கருவி
  • BUNI - திறன் அறிவியல் தரவு ஒத்துழைப்புக் கருவி

சுவீடனின் லினா - எக்ஸ்எஸ்ஏஎன்என்எஃப் என்ற சரக்குப் பெட்டகம் லூனா 25 என்எப் உடன் பறக்கவிருந்தது , ஆனால் ஏவுதளத் தேதி தாமதமானதால், சுவீடனை இந்த திட்டத்தை நீக்கிட வைத்தது. அதற்கு பதிலாக லினா - எக்ஸ்எஸ்ஏஎன் 2019 இல் சாங் இ- 4 கலத்தில் இணைந்தது.[27]

எசாவின்(ESA) பிளாட் - டி வழிசெலுத்தல், செயல்விளக்க ஒளிப்படக் கருவி. முதலில் இந்தப் பணியில் பறக்க திட்டமிடப்பட்டது , ஆனால் ஏற்கனவே ஒரு வணிகப் பணி வழங்குநரிடமிருந்து வாங்கப்பட்டு , 2022 ஆம் ஆண்டு உக்ரேனில் உருசியப் படையெடுப்பு, உருசியா மீதான ருளாதாரத் தடைகள் காரணமாக தொடர்ச்சியான பன்னாட்டு ஒத்துழைப்பின்மையால் தங்கள் பணியில் எசாவின் பறக்கும் கருவி கல்த்தில் இணைக்கப்படவில்லை.[28][29][30]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Carter, Jamie (26 July 2019). "A Soviet-Era "Moon Digger" Program Is Being Revived To Hunt For Water At The Moon's South Pole". Forbes. பார்க்கப்பட்ட நாள் 14 January 2020.
  2. 2.0 2.1 Krebs, Gunter (3 December 2019). "Luna-Glob (Luna 25)". Gunter's Space Page. பார்க்கப்பட்ட நாள் 14 January 2020.
  3. 3.0 3.1 David, Leonard. "Russia launches Luna 25 moon lander, its 1st lunar probe in 47 years". https://www.space.com/russia-luna-25-moon-mission-launch-success. 
  4. "Luna 25 launch broadcast" (in ru). https://www.youtube.com/watch?v=cgi2pIFrnW4&t=4465. 
  5. Mitrofanov, Igor. ""Luna-Glob" and "Luna-Resurs": science goals, payload and status". {{{booktitle}}}.
  6. "Запуск станции «Луна-25» запланирован на май 2022 года" [The launch of the Luna 25 spacecraft is scheduled for May 2022]. உருசிய நடுவண் விண்வெளி நிறுவனம் (in ரஷியன்). 10 August 2021. பார்க்கப்பட்ட நாள் 10 August 2021.
  7. "Missions to the Moon". The Planetary Society. பார்க்கப்பட்ட நாள் 14 January 2020.
  8. "ГК «Роскосмос»: Об автоматической станции «Луна-25» | Space Research Institute - IKI". iki.cosmos.ru. பார்க்கப்பட்ட நாள் 2023-08-20.
  9. "Preliminary data shows Luna-25 lunar probe collided with Moon's surface – Roscosmos". TASS. பார்க்கப்பட்ட நாள் 2023-08-20.
  10. "நிலாவில் மோதி நொறுங்கிய லூனா 25". பிபிசி தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2023-08-20.
  11. Zak, Anatoly (19 June 2019). "Luna-Glob project". RussianSpaceWeb.com. பார்க்கப்பட்ட நாள் 14 January 2020.
  12. Zak, Anatoly (11 December 2017). "Luna-Glob (Luna-25) project in 2013". RussianSpaceWeb.com. பார்க்கப்பட்ட நாள் 15 March 2018.
  13. Zak, Anatoly (12 January 2018). "Development of the Luna-Glob project in 2014 and 2015". RussianSpaceWeb.com. பார்க்கப்பட்ட நாள் 15 March 2018.
  14. Zak, Anatoly (31 March 2018). "Luna-Glob's stop and go". RussianSpaceWeb.com. பார்க்கப்பட்ட நாள் 14 January 2020.
  15. 15.0 15.1 "ЛУНА-25 | Space Research Institute - IKI". iki.cosmos.ru. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
  16. "Russia launches Luna-25 moon lander, its 1st lunar probe in 47 years" (in en). Space.com. 10 August 2023. https://www.space.com/russia-luna-25-moon-mission-launch-success. 
  17. "Запуск первой в истории современной России миссии на Луну запланировали на 11 августа" [The launch of the first mission to the Moon in the history of modern Russia was scheduled for August 11]. TASS (in ரஷியன்). 5 June 2023. பார்க்கப்பட்ட நாள் 5 June 2023.
  18. "Запуск миссии "Луна-25" с космодрома Восточный запланировали на 22 августа" [The launch of the Luna 25 mission from the Vostochny Cosmodrome was scheduled for August 22]. RIA Novosti (in ரஷியன்). 8 April 2022. பார்க்கப்பட்ட நாள் 8 April 2022.
  19. "Россия запустит космический аппарат на Луну 1 октября 2021 года" [Russia will launch a spacecraft to the moon on October 1, 2021] (in ரஷியன்). RIA Novosti. 17 March 2020. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
  20. "Russia's Luna-25 spacecraft enters lunar orbit -space agency" (in en). Reuters. 16 August 2023. https://www.reuters.com/technology/space/russias-luna-25-spacecraft-enters-lunar-orbit-space-agency-2023-08-16/. 
  21. "Госкорпорация «Роскосмос»". Telegram. பார்க்கப்பட்ட நாள் 2023-08-19.
  22. Berger, Eric (2023-08-19). "Is Luna 25 alive? Russia says an "emergency situation" has occurred". Ars Technica (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-20.
  23. "ГК «Роскосмос»: Об автоматической станции «Луна-25» | Space Research Institute - IKI". iki.cosmos.ru. பார்க்கப்பட்ட நாள் 2023-08-20.
  24. "Госкорпорация «Роскосмос»". Telegram. பார்க்கப்பட்ட நாள் 2023-08-19.
  25. Berger, Eric (2023-08-19). "Is Luna 25 alive? Russia says an "emergency situation" has occurred". Ars Technica (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-20.
  26. "Luna-25 (Luna-Glob Lander) Payload". Iki.rssi.ru.
  27. Pillet, Nicolas (25 June 2018). "Russia's Luna-Glob faces technical, political and ballistic issues". NASASpaceFlight.com. பார்க்கப்பட்ட நாள் 14 January 2020.
  28. "ESA's PROSPECT lunar drill (originally scheduled to fly on Luna-27) will now fly on a NASA CLPS mission. ESA's PILoT-D (originally planned for Luna-25) navigation camera is "already being procured from a commercial service provider."". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-14.
  29. Witze, Alexandra (11 March 2022). "Russia's invasion of Ukraine is redrawing the geopolitics of space" (in en). Nature. doi:10.1038/d41586-022-00727-x. பப்மெட்:35277688. https://www.nature.com/articles/d41586-022-00727-x. பார்த்த நாள்: 13 March 2022. 
  30. "Redirecting ESA programmes in response to geopolitical crisis". www.esa.int (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-14.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலூனா_25&oldid=3779390" இலிருந்து மீள்விக்கப்பட்டது