உள்ளடக்கத்துக்குச் செல்

உலகாச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகாச்சி
தங்க நாடோடிக் கூட்டத்தின் கான்
மேற்கு பாதி (நீல நாடோடிக் கூட்டம்)
ஆட்சிக்காலம்1257
முன்னையவர்சர்தக் கான்
பின்னையவர்பெர்கே
பிறப்புதெரியவில்லை
இறப்பு1257
மரபுபோர்சிசின்
மதம்தெங்கிரி மதம்

உலகாச்சி கான் (இறப்பு 1257) என்பவர் நீல நாடோடிக் கூட்டம் மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் மூன்றாவது கான் ஆவார். இவர் 1257 ஆம் ஆண்டு ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு ஆட்சி புரிந்தார்.

வாழ்க்கை

[தொகு]

உலகாச்சி என்பவர் சர்தக் கானின் மகனா அல்லது தம்பியா என்று தெளிவாக தெரியவில்லை. சர்தக் இறந்தவுடன் மோங்கே கான் உலகாச்சிக்கு தங்க நாடோடிக் கூட்டத்தின் கான் என்ற பட்டத்தை உடனடியாக வழங்கினார். உலகாச்சி தனது 10வது வயதில் ஆட்சிக்கு வந்தார். இவருக்கு அரச பிரதிநிதியாக போரக்சின் செயல்பட்டார். உலகாச்சி ஆட்சியில் இருக்கும் போதே இறந்தார். எச். எச். ஹோவொர்த் என்ற வரலாற்றாசிரியர் தனது சித்தப்பா பெர்கே ஆட்சிக்கு வருவதற்கு உதவி செய்வதற்காக உலகாச்சி பதவி விலகியதாக கூறுகிறார். ஏனெனில் பெர்கே தான் பதவியேற்ற உடன் உருசியாவிற்கு உலகாச்சி என்ற பெயருடைய ஒரு நபரை அனுப்பினார்.

பரம்பரை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
உலகாச்சி
இறப்பு: 1257
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் நீல நாடோடிக் கூட்டம் மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் கான்
1257
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகாச்சி&oldid=3151212" இலிருந்து மீள்விக்கப்பட்டது